உடல் வலிமையை அதிகரிக்க உதவும் பயிற்சி உபகரணங்கள்
நாம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைப் பெறலாம். இதனால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.
உடல்நலத்தைக் காக்கும் பொருட்டு, பெரும்பாலானோர், தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துக் கொள்கின்றனர். வெகுசிலரோ, ஜிம்மிற்குத் தினந்தோறும் சென்று, உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு மற்றும் ஜிம்மில் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு வகை உடற்பயிற்சிகளும், நம் உடலின் ஒவ்வொரு பாகத்தைப் பேணிப் பாதுகாக்க உதவுகின்றன.
உடல் வலிமையை அதிகரிக்கவல்ல உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடலின் அமைப்பைப் பேணிக்காத்து, அதை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. உடலின் வலிமையை அதிகரிக்கச் செய்வதற்கு வசதியாக, பல்வேறு வகை உபகரணங்கள் உள்ளன. இந்த உபகரணங்களின் உதவி கொண்டு, ஜிம்மில் மட்டுமல்லாது, வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.
உடல் வலிமையை அதிகரிக்க, பல்வேறு வகையான உடற்பயிற்சி உபகரணங்கள் உள்ளபோதிலும், சில முக்கியமான உபகரணங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.
பார்பெல்ஸ்
4 முதல் 7 அடி நீளம் கொண்ட இரும்பு தடியின் இரண்டு புறங்களிலும் எடை உருளைகள் பொருத்தப்பட்டு உள்ளன. கடினமான உடற்பயிற்சிகளின் மூலம், உடல் வலிமையை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு, பார்பெல்ஸ் சிறந்தத் தேர்வாக உள்ளது. உடல் வலிமையை மேம்படுத்த நினைப்பவர்களுக்கு அதிகச் சேதங்களை விளைவித்துவிடும் என்பதால், துவக்கத்திலேயே, பார்பெல்ஸ் பயன்பாட்டை, பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
நீண்ட பலகைகள்
ஜிம்களுக்குச் சென்றால், அனைத்து அளவிலான நீண்ட பலகைகள் காணப்படும். இந்தப் பலகைகளின் உதவியுடன், உங்கள் உடலின் பல்வேறு பாகங்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் திறம்பட மேற்கொள்ள இயலும். உங்கள் வலிமைப் பயிற்சியின் நடைமுறைகளை எளிதாக்கும் வகையிலான, நீண்ட பலகைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுதல் உத்தமம்.
டம்பெல்ஸ்
பார்பெல்ஸ் உபகரணத்தின் கையடக்க வடிவமே, டம்பெல்ஸ் ஆகும். உடல் வலிமையை அதிகரிக்க உதவும் சிறந்த வகை உபகரணமாக டம்பெல்ஸ் விளங்குகின்றது. கைகளின் வலிமையை அதிகரிக்கும் வகையில் டம்பெல்ஸ் செயல்படுகின்றது.
கப்பி இயந்திரங்கள்
இவ்வகை உபகரணங்களில், ஒரு நீளமான கேபிள் வயர், எடைகள் உடன் இணைக்கப்பட்டு உள்ளது. உபகரணத்தில் உள்ள சிறிய கைப்பிடி உடன் பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, அது உடல் முழுமைக்குமான வலிமையை அதிகரிக்கச் செய்கின்றது.
பயிற்சிக்கு உதவும் பேண்டு
முழு உடல் வலிமைக்கு ஏற்ற வகையிலான சாதனமாக, இந்தவகைப் பயிற்சி பேண்டுகள் உதவுகின்றன. இது இடத்தை அடைக்காது என்பதால், எந்த இடத்தில் இருந்தவாறும், பயிற்சியைத் திறம்பட மேற்கொள்ள முடியும். இது சிறிய அளவினதாக உள்ளதால், உங்களது கைப்பையிலேயே, எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்ல முடியும்.
ஃபுல் அப்ஸ் பார்கள்
உடலின் பின்புறத் தசைகளின் வலிமையை அதிகரிக்க, ஃபுல் அப் பார்கள் பேருதவி புரிகின்றன. இதை வீட்டின் இருகதவுகளுக்கு இடையில் மாட்டி, எளிதாக, இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி உடலின் வலிமையை அதிகரிக்கலாம்.
படகோட்டுதல் வகையிலான பயிற்சி
இந்தப் பயிற்சியானது, கைகளுக்கு ஏற்ற பயிற்சியாக விளங்குவதாகப் பெரும்பாலானோர்க் கருதுகின்றனர். ஆனால், இது உண்மையல்ல. ரோயிங் எனப்படும் படகு ஓட்டுதல் வகையிலான பயிற்சியை மேற்கொள்ளும் போது, உடலில் உள்ள 86 வகையான தசைகள் வலுப்பெறுகின்றன.
ஸ்பின் பைக்
இந்தப் பயிற்சியானது, உடலில் தங்கி உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. நீங்கள் இந்தப் பயிற்சியை, 30 நிமிடங்களுக்கு மேல் சரியாகச் செய்தால், உங்கள் உடலில் இருந்து 500 கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சியில் உடலின் முக்கியத் தசைகள், தொடைகள், பிட்டம் உள்ளிட்ட பகுதிகள் பங்குபெறுவதினால், கெண்டைக்கால்கள், தொடைகள் உள்ளிட்ட பகுதிகள் வலிமை அடைகின்றன.
மேலும் வாசிக்க : உணவு ஒவ்வாமைப் பாதிப்பு என்றால் என்ன?
கெட்டில்பெல்
வீட்டிலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிட்டு உள்ளவர்களுக்கு ஏற்ற வகையான சிறந்த உபகரணம் கெட்டில்பெல் ஆகும். இது முழு உடலுக்கும் தேவையான வலிமையை வழங்குகின்றது.
10 கிலோ அளவிலான உடல் எடைப் பயிற்சித் தொகுப்பு
இந்தத் தொகுப்பில் அடிப்படை அளவிலான டம்பெல்ஸ்கள் உள்ளன. இதன்மூலம், பல்வேறு எடை அளவிலான உடற்பயிற்சிகளை எளிதாகச் செய்ய முடியும். சிறிய அளவினதாக இருப்பதால், இதை வீட்டிலேயே வைத்துக் கொள்ள இயலும். இந்தத் தொகுப்பின் உதவியுடன் தினமும் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால், முழு உடலுக்கும் தேவையான வலிமைக் கிட்டும் என்பது நிதர்சனம்.
இந்த உபகரணங்களின் உதவி கொண்டு வீடு அல்லது ஜிம்களில் உங்களுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை, விடாமுயற்சி உடன் மேற்கொண்டு உடல் வலிமையை அதிகரித்துக் கொள்வீராக….