தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையில் நியூட்ரிஜீனோமிக்ஸ்!
உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) புதுப்பிக்கப்பட்ட உணவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால், இது அனைவருக்கும் பொருந்தவில்லை. மக்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யாததால், புது முறையின் தேவை அவசியமானது. அவ்வாறு வந்ததே நியூட்ரிஜீனோமிக்ஸ் முறை ஆகும்.
நியூட்ரிஜீனோமிக்ஸ் என்றால் என்ன?
உடல்நல ஆரோக்கியத்திற்கு ஜீன்கள் மற்றும் ஊட்டச்சத்து முறை எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிய உதவும் அறிவியலே நியூட்ரிஜீனோமிக்ஸ் ஆகும். மரபணு மாறுபாடுகள் ஊட்டச்சத்துகளின் செயல்பாட்டைக் கணிக்கின்றன. உதாரணமாக, FTO ஜீன் வளர்சிதை மாற்றம், ஆற்றல் சமநிலை மற்றும் எடை மேலாண்மையைப் பாதிக்கிறது.
கார்போஹைட்ரேட், கொழுப்புகள், புரதங்களின் வளர்சிதை மாற்றங்களை FTO ஜீன் மாறுபாடுகள் தீர்மானிக்கின்றன. இதன் அறிவைக் கொண்டு, ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலுடன் சிறந்த உணவுத்திட்டத்தை மேற்கொள்ளலாம். நியூட்ரிஜீனோமிக்ஸ் சோதனை முடிவுகள் அன்றாட உணவுப் பழக்கங்களை மேம்படுத்த உதவுகின்றன.
ஊட்டச்சத்து முறைக்கும் மரபணுவிற்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிய நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது. இதன் முன்னேற்றங்கள் குறிப்பிட்ட உணவுகள் மரபணுக்களின் வெளிப்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் கண்டறிய உதவுகின்றன.
புதிய ஊட்டச்சத்து முறைகளை வெளிப்படுத்துவதற்கும், பாரம்பரிய உணவுமுறைகள் உடன் ஒப்பிடும்போது, ஊட்டச்சத்து முறையின் உயிரியல் மதிப்பை உறுதிப்படுத்துவதற்கு, நியூட்ரிஜீனோமிக்ஸ் பேருதவி புரிகிறது. இது தனிநபருக்குப் பயனளிக்கும் வகையிலான ஊட்டச்சத்து முறைக்கும், மரபணு மாறுபாடு அடிப்படையிலான சிகிச்சைத் திறனுக்கும் வழிவகுக்கின்றது. உடல்நல ஆரோக்கியம் மற்றும் நல்ல வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான சாத்தியம், நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையில் அதிகமாக உள்ளதால், இதன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள்
நியூட்ரிஜீனோமிக்ஸ், மிக வேகமாக வளர்ந்து வரும் துறை ஆகும். சமீபகாலமாக, இந்தத் துறையில் மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்றங்கள், ஊட்டச்சத்து முறைகளைக் கண்டறிய உதவுகின்றன.
துல்லியமான ஊட்டச்சத்துமுறை
தனிநபர்களின் மரபணு மாறுபாட்டின் அடிப்படையில், அவர்களுக்கே உரித்தான உணவுத் தேவைகளை அடையாளம் காண உதவும் நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையின் மூலம், துல்லியமான ஊட்டச்சத்து முறையை, நாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்.
புதிய ஊட்டச்சத்துகளைக் கண்டறிதல்
நாம் பயன்படுத்தி வரும் ஊட்டச்சத்து முறைகளுக்குப் பதிலாக, அதே நன்மைகளைத் தரவல்ல, புதிய ஊட்டச்சத்து முறையைக் கண்டறிய நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது. இதன்மூலம், உடல்நல ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
புதிய ஊட்டச்சத்துகளின் தன்மையைக் கணித்தல்
புதிய ஊட்டச்சத்துகள் அல்லது உணவுமுறைகள், அவர்களின் உணவுப் பரிந்துரைகளின்படி சிறப்பாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கண்டறிய, நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையானது உதவுகிறது
உயிரியல் மதிப்பை உறுதி செய்கிறது
ஊட்டச்சத்து முறையின் உயிரியல் மதிப்பை, மிகக் குறுகிய காலத்தில் உறுதி செய்ய உதவுகிறது.
உணவு விருப்பத் தேர்வை நிறைவேற்றுகிறது
உணவு விருப்பத்தேர்வைத் தீர்மானிக்கும் காரணிகளை அடையாளம் காண்கின்றது. இதன்மூலம், ஒரு நபரின் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப, உணவுப் பரிந்துரைகளை மேற்கொள்ள இயலும்.
EconomasE
இது வைட்டமின் Eக்குச் சிறந்த பொருளாதார மாற்றாக விளங்குகிறது. நியூட்ரிஜீனோமிக்ஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புதிய உணவுத்திட்டங்களை அடையாளம் காண உதவுகிறது.
இறைச்சி உணவின் பாதிப்பைக் கண்டறிதல்
தசைப்பாதிப்பு நோய்களுக்குக் காரணமாகத் திகழும் இறைச்சியின் சில பகுதிப் பொருட்களைக் கண்டறிய, நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது. இதன்மூலம், இறைச்சிப் பொருட்களின் தரம் மேம்படுவதோடு, கழிவுகளைப் பெருமளவில் குறைப்பதற்கு வழிவகை ஏற்படுகிறது.
நியூட்ரிஜெனோமிக்ஸ் முறையின் சவால்கள்
நியூட்ரிஜெனோமிக்ஸ் முறையை, மருத்துவ அமைப்புகளுக்கு உட்படுத்தும் போது, பல்வேறு வகையான சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஊட்டச்சத்து முறை மற்றும் மரபணு மாறுபாடுகள் தொடர்பான விரிவான பட்டியலை இணைக்க வேண்டும். இதன்மூலம், மரபணு மற்றும் வளர்சிதைமாற்ற நடவடிக்கைகளில், வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பைக் கண்டறிய முடியும். நியூட்ரிஜீனோமிக்ஸ் தொடர்பான ஆலோசனை நிகழ்வில், ஊட்டச்சத்து நிபுணர்களுக்குப் போதிய அளவிலான பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அவசியமானதாக உள்ளது. மரபணு மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் தொடர்பான, இடைவினையை உணர்த்துகிறது. குறிப்பிட்ட சுகாதார விளைவுகளுக்கேற்ப தனிப்பட்ட உணவுப் பரிந்துரைகளை உருவாக்குவது சவாலானது.
மேலும் வாசிக்க : உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் உணவு வகைகள்
தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையில் நியூட்ரிஜீனோமிக்ஸின் பங்கு
நியூட்ரிஜீனோமிக்ஸ் மரபணு மாறுபாடுகளின் தாக்கத்தை அறிந்து, தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையை உருவாக்க உதவுகிறது.இது ஒருவரின் மரபணு அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட உணவுப் பரிந்துரைகளை உருவாக்க உதவுகிறது. குறிப்பிட்ட ஊட்டச்சத்து முறை மற்றும் மரபணுக்களுக்கு இடையேயான தொடர்புகளை அடையாளம் காண்பதன் அடிப்படையில், தனிப்பட்ட உணவுமுறைகளை உருவாக்க உதவுகிறது.
நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையில் பல்வேறு சவால்கள் உள்ளநிலையிலும், இது தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையை நிர்வகிக்க உதவுவதோடு மட்டுமல்லாது, மரபணு மாறுபாட்டின் அடிப்படையில், பயனுள்ள உணவுத்திட்டங்களைப் பரிந்துரைக்கிறது.