ஆரோக்கியமான உணவுமுறை – நியூட்ரிஜீனோமிக்ஸின் பங்கு
உங்களுக்கு எந்த வகையான உணவுமுறைச் சிறந்த பலனை அளிக்கவல்லது? உடல் எடையைக் குறைக்க, உணவுத் தேர்வுகள் அல்லது உடற்பயிற்சிகள் எது சிறந்தது என்பதற்கான பதில்கள் உங்கள் மரபணுக்களில் இருக்கலாம்.மரபணுப் பகுப்பாய்வு முறையானது, வெகுவேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நியூட்ரிஜீனோமிக்ஸ் எனப்படும் ஊட்டச்சத்து மருத்துவத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. ஒருவரின் ரசனைக்கு ஏற்ப, தனிப்பட்ட உணவுத்திட்டங்களை உருவாக்க, நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவுகிறது. இது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறைப் பழக்க வழக்கங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளப் பேருதவியாக உள்ளது.
நியூட்ரிஜீனோமிக்ஸ்
மரபணுக்கள் மற்றும் உணவுமுறைக்கும் இடையே உள்ள தொடர்பினை விவரிக்கும் ஆய்வு முறையாக, நியூட்ரிஜீனோமிக்ஸ் விளங்கி வருகிறது. இந்த அறிவியலின் மூலம், ஒரு சிலரின் உணவு முறைகளுக்கு, மரபணுக்கள் எவ்வாறு வினைபுரிகின்றன என்பதனைக் கணிக்க முடிகிறது. உதாரணமாக, வளர்சிதை மாற்றங்கள், உடல் எடை நிர்வகிப்பு, ஆற்றல் சமநிலை ஆகியவற்றில் FTO ஜீனின் பங்கை இது கண்டறிய உதவுகிறது.உங்கள் உடலில் நிகழும் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றங்களை, FTO ஜீன் எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை அறியலாம். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, உங்கள் உடல் செயல்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான உணவுமுறையை, ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதலின்படி, நீங்களே தேர்தெடுத்துக் கொள்ள முடியும்.
உங்களுக்கு உகந்த சிறந்த முறையிலான உணவு வகைகளைத் தேர்ந்தெடுக்க, நியூட்ரிஜீனோமிக்ஸ் முறையானது உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தம்
உடலில் அதிகக் கொழுப்பு படிதல் அல்லது உயர் ரத்த அழுத்த நிலையினைத் தடுக்கும் பொருட்டு, நீங்கள் உங்களது உணவுமுறையில் அதிக உப்பு மற்றும் செறிவூட்டப்பட்ட கொழுப்பு உள்ள உணவுவகைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
இனிப்பு வகைகளின் மீது மோகம்
இனிப்பு வகைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எவ்வளவு திகட்டினாலும், இனிப்புப் பதார்த்தங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். இந்த நிலையில், உடலில் அதிகப்படியான சர்க்கரைச் சேர்வதன் மூலம்,இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதை நினைவில் வரவழைத்துக் கொண்டால், சாப்பிடும் இனிப்பு வகைகளின் அளவு பாதியாகக் குறைந்து விடும்.
காஃபின் பாதிப்பு
நீங்கள் அதிகமாகக் காபி குடிப்பவர்கள் என்றால், அதில் உள்ள காஃபின் வேதிப்பொருள், உடலுக்கு விளைவிக்கும் பாதிப்புகளை நீங்கள் அறிந்தால், காபி குடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொள்வீர்கள்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள்
கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள், உங்கள் உடல் எடையைப் பேணிக்காப்பதில் எந்தளவிற்கு உதவுகின்றன என்பதை நீங்கள் அறிந்து கொண்டால், அதற்கேற்ற வகையிலான உணவுமுறையினை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்.
இதய நலன்
இதய நலன் காக்க விரும்புபவர்கள், உடலில் உள்ள அதிகக் கொழுப்பை எரிக்க உதவும் வலிமைப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், விரும்பிய வகையிலான முடிவுகளைப் பெற இயலும்.
நியூட்ரிஜீனோமிக் சோதனைச் செயல்படும் விதம்
நியூட்ரிஜீனோமிக் சோதனையின் ஒருபகுதியாக, நம் வாயில் இருந்தோ அல்லது உமிழ்நீரின் மாதிரியை எடுத்து, அதில் டி.என்.ஏ. சோதனை மேற்கொள்வதற்காக, அதை ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்பர். இதன் முடிவுகள் வரச் சில வாரக் காலங்கள் ஆகும். ஒரே சோதனையின் மூலம், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட ஜீன்களைப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
உங்களது உணவுமுறையில், நியூட்ரிஜீனோமிக்ஸின் தாக்கம் என்ன?
நியூட்ரிஜீனோமிக்ஸ் உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவு வகைகளை அடையாளம் காண உதவுகிறது. இது உடலில் ஏற்படும் பாதிப்புகளை அறியவும் உதவுகிறது.உங்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு கண்டறியப்பட்டு இருந்தால், உங்கள் குடும்ப வரலாறு பின்னணியை ஆராயலாம். இல்லையெனில், உங்கள் மரபணுவில் இதுகுறித்த அறிகுறி தென்படுகிறதா என்பதைக் காணலாம். அதில் ஏதாவது மாறுபாடு காணப்பட்டாலும் எந்தவொரு கவலையுமில்லை. ஏனெனில், இது ஒன்றும் தவிர்க்க முடியாத நிகழ்வு அல்ல. நியூட்ரிஜீனோமிக்ஸ் உதவியுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஏற்ற உணவுத் திட்டத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க : உயர் ரத்த அழுத்த பாதிப்பைத் தடுக்கும் வழிமுறைகள்
ஊட்டச்சத்தின் எதிர்காலமாக நியூட்ரிஜீனோமிக்ஸ் பரிணமிக்கிறதா?
மரபியல் அடிப்படையில் உங்களுக்கேற்ற தனிப்பட்ட உணவுமுறையை உருவாக்க முடியும்.மரபணுச் சோதனையின் மூலம் கண்டறியப்படும் முன் அறிவிப்புகளை, உத்தரவாதங்களாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
நியூட்ரிஜெனோமிக்ஸ் சோதனை முறையின் மூலம், உணவுமுறையில் உள்ள பிழைகள், உடற்பயிற்சி நடைமுறைகள் உள்ளிட்டவைகளை நீக்க இயலாது. இருந்தபோதிலும், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையிலான உணவுமுறைகள் என்னென்ன என்பதையும், அதைத் தீர்மானிக்கும் வழிமுறைகள் குறித்த அறிவை, இது உங்களுக்கு வழங்குகின்றது.
நியூட்ரிஜெனோமிக்ஸ் ஆரோக்கியமான உணவுமுறையை வடிவமைக்க உதவுகிறது. ஆனால் இதிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன…