A businessman with pain sits at his office laptop, hands positioned behind his back.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக் குறிப்புகள் இதோ…!

இன்றைய அவசரகதியிலான சூழ்நிலையில், பெரும்பாலானோர் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இதனால், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்பது பேசுபொருளாகி உள்ளது.உடல்நலம் சார்ந்தப் பிரச்சினைகளுக்கு, உடற்பயிற்சிப் பழக்கமின்மை, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருக்கும் வகையிலான வாழ்க்கைமுறை உள்ளிட்டவைகளே, முக்கியக் காரணமாக உள்ளன. உணவியல் நிபுணருடன் கைகோர்த்துக் கொள்ளுங்கள். செயலில் இறங்குங்கள், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மீட்டெடுங்கள்.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிமுறைகள்

சரிவிகித உணவுமுறையைத் தேர்வு செய்யுங்கள்

நமது உடலின் செயல்பாடுகள் சீராக இயங்க, 40க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துகள் அவசியமாகின்றன. நாம் தினமும் ஒரேமாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லை. உடல் செயல்பாடுளுக்குத் தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவுமுறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதிகளவிலான காய்கறிகள் மற்றும் பழ வகைகள்

காய்கறிகள் மற்றும் பழ வகைகளில், உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்து உள்ளிட்டவைப் போதிய அளவில் உள்ளன. தினசரி 4 முறைப் பழங்கள் மற்றும் காய்கறிகள் கொண்ட உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு, முற்பகல் நேரத்தில், ஸ்னாக்ஸ் உடன் சிறிது பழ வகைகள், மதியம் மற்றும் இரவு உணவுகளில் காய்கறிகள் தவறாது இடம்பெற வேண்டும்.

உணவுமுறையில் கட்டுப்பாடு

சரியான அளவிலான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு வகைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வருதலே, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் அடித்தளம் ஆகும். நீங்கள் சில நேரங்களில், காலை உணவைத் தவிர்க்கும்பட்சத்தில், அதிகப் பசி உணர்வு ஏற்பட்டு, மதிய நேரத்தில், வழக்கத்திற்கு மாறாக, அதிக உணவைச் சாப்பிட்டு விடுவீர்கள். இது உங்கள் உணவுமுறையையே சீர்குலைத்துவிடும்.

நீங்கள் காலை உணவைத் தவிர்க்கும் பட்சத்தில், முற்பகல் வேளையில் உப்பு சேர்க்கப்படாத கொட்டைகள், பழ வகைகள், தயிர், உலர்ப் பழங்கள் உள்ளிட்டவைகளை, ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம். எந்தவொரு ஊட்டச்சத்தையும் விலக்காது, அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும், சரியான அளவில் தினசரி உட்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதிக அளவிலான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

அதிக அளவிலான திரவ உணவுகள், உங்கள் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. பெரியவர்களின் உடல் இயக்கம் சீராக நடைபெற தினமும் 1.5 லிட்டர் அல்லது 8 கிளாஸ்கள் அளவிலான திரவ உணவுகள் அவசியமாக உள்ளன.குடிநீர், பழச்சாறுகள், பால், டீ உள்ளிட்டவை, திரவ உணவு வகைகளின் எடுத்துக்காட்டுகள் ஆகும்.

உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள்

உடல்நல ஆரோக்கியப் பராமரிப்பிற்கும், நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளைக் குணப்படுத்துவதற்கும், உடற்பயிற்சிப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாததாக உள்ளன. வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான அளவிலான உடற்பயிற்சிகளையும், 75 நிமிடங்கள் தீவிரமான அல்லது கடினமான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதை, இலக்காக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று, வாரத்திற்கு இரண்டுமுறை, உடலை வலிமையாக்கும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வதை இனிய அனுபவமாக மாற்றித் தினசரி மேற்கொண்டால், நல்ல பலன் கிட்டும்.

போதிய அளவிலான உறக்கம்

சரியான உறக்க நிகழ்வானது, உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கின்றது. தினமும் இரவு குறைந்தது 7 முதல் 9 மணிநேர உறக்கம் என்பது அனைவருக்கும் அவசியம் ஆகும். தினமும் ஒரே நேரத்தில் உறங்கச் செல்லும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்ளூங்கள். உங்கள் படுக்கையறை அமைதியாகவும் இருள் சூழ்ந்தும், சரியான காற்றோட்ட வசதியுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உறங்கச் செல்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னரே மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களின் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் காபி குடிப்பதையும், எளிதில் செரிமானம் ஆகாத உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

A kid is applying soap to his hands in the bathroom at home to wash them.

சுகாதார நடவடிக்கைகள்

சிறந்த மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகள், நம்மை நோய்ப்பாதிப்புகளில் இருந்து காப்பதோடு மட்டுமல்லாது, உடல்நல ஆரோக்கியத்திலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

கைகளைச் சோப்பு மற்றும் தண்ணீரைக் கொண்டு அடிக்கடி கழுவுதல்

தினமும் 2 முறைப் பல்துலக்குதல்

தினமும் குளித்தல்

கை, கால் நகங்களைப் போதிய கால இடைவெளிகளில் வெட்டிக் கொள்ளுதல்

தூய்மையான உடைகளை அணிதல்

படுக்கை விரிப்புகளை அவ்வப்போது மாற்றுதல்

இருமல் மற்றும் தும்மல் நிகழ்வுகளின் போது வாயை மூடிக் கொள்ளுதல்

உள்ளிட்டவைச் சிறப்பான சுகாதார நடவடிக்கைகள் ஆகும்.

மேலும் வாசிக்க : இரத்த அழுத்தத்தை இந்த முறையில் எளிதாக அளக்கலாம்?

மன அழுத்தத்தை நிர்வகித்தல்

மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகித்தல் நிகழ்வானது, நாள்பட்ட நோய்ப்பாதிப்புகளின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதுடன், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.வழக்கமான உடற்பயிற்சிகள், மனதை இலகுவாக்கும் பயிற்சிகள், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகள், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்காற்றுகின்றன. மனதுக்குப் பிடித்தவர்கள், நண்பர்கள்,மனதுக்கு இதமான நடவடிக்கைகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட நிகழ்வுகளும், மன அழுத்த பாதிப்பைக் கட்டுப்படுத்துகின்றன.

வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள்

உடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து அதனைத் தடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள், பேருதவி புரிகின்றன. நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருந்தாலும், வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை, சரியான நேரத்தில் மேற்கொள்வதன் மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து, அதனைத் தடுக்க முடியும். உடலில் ஏதாவது அசாத்திய மாற்றங்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, அவரின் பரிந்துரையின் அடிப்படையிலான சிகிச்சைமுறைகளை மேற்கொண்டால், எவ்வித நோய் நொடியுமின்றி, நீண்ட நாட்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

மேற்குறிப்பிட்டு உள்ள ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக் குறைப்புகளை அனைவரும் பின்பற்றி, வளமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.