இரத்த அழுத்தத்தை இந்த முறையில் எளிதாக அளக்கலாம்?
இதயப் பிரச்சினைகள் வரவிடாமல் தடுப்பதற்கும், உடல் ஆரோக்கிய பராமரிப்பிலும், ரத்த அழுத்த கண்காணிப்பு என்பது முக்கியப்பங்கு வகிக்கிறது. இரத்த அழுத்த அளவீட்டை, ஸ்பிக்மோமானோமீட்டர் மூலம் அளப்பதற்கு முன்னர், விரல்களின் மூலமும், ரத்த அழுத்தத்தைச் சரிபார்க்க இயலும். மருத்துவ உபகரணங்கள் இல்லாத போது அல்லது அவசர நிலைகளில், இம்முறைத் தோராயமான ரத்த அழுத்த மதிப்பீட்டிற்குப் பயன்படுகிறது.விரல்களைக் கொண்டு, ரத்த அழுத்தத்தை அளவிடும் வழிமுறைகள், அதன் வரம்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.
இரத்த அழுத்த அளவீடு
இதயம், உடலைச் சுற்றி ரத்தத்தைப் பம்ப் செய்யும்போது, அது தமனிகளின் சுவர்களில் மோதிச் செல்லும் போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம் என்று வரையறுக்கப்படுகிறது. இந்த அளவீடானது, மில்லிமீட்டர் (mm Hg) என்ற அளவுகளின் மூலம் கணக்கிடப்படுகிறது. இரத்த அளவீடானது, சிஸ்டோலிக் மற்றும் டயஸ்பாலிக் என்ற இரண்டு மதிப்புகளைக் கொண்டு உள்ளது.
இந்த முறை எப்போது பயன்படுத்தப்படுகிறது?
இரத்த அழுத்தத்தைக் கணக்கிட சரியான மருத்துவ உபகரணங்கள் கைவசம் இல்லாத நிலையில், அடிப்படை முறையான விரல்களின் உதவியுடன், ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் முறையானது பயன்படுத்தப்படுகிறது. துல்லியமான அளவீடு சாத்தியமில்லாத போதும், அவசர நிலைகளிலும், உடல் ஆரோக்கியம் குறித்த உடனடி முடிவுகளுக்கு இம்முறை உதவுகிறது.
விரல்களைக் கொண்டு ரத்த அழுத்தம் அளவிடுவதற்கான வழிமுறைகள்
இரத்த அழுத்த அளவீட்டை, விரல்களின் உதவிகொண்டு மேற்கொள்வதற்கான வழிமுறைகள், அனைவருக்கும் விளங்கும் வகையில் படிநிலைகளாகத் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளன.
அமைதியான இடம்
அமைதியான இடத்தில் சிறிதுநேரம் எவ்வித மனச்சலனமின்றி அமர்ந்து கொள்ளுங்கள்.
இரத்தத்துடிப்பைக் கண்டறியுங்கள்
இரத்தத்துடிப்பைக் கண்டறிவதற்கான தமனியை முதலில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கை மணிக்கட்டில் உள்ள ரேடியல் தமனி அல்லது கழுத்துப்பகுதியில் உள்ள கரோடிட் தமனியானது, இந்த முறைக்குப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
வலது கை விரல்களைப் பயன்படுத்தவும்
இந்த முறையிலான அளவீட்டிற்கு, ஆள்காட்டி மற்றும் நடுவிரலைப் பயன்படுத்தவும். கட்டைவிரலுக்கு என்று தனியானதொரு துடிப்பு இருப்பதால், அந்த விரலைத் தவிர்த்துவிட வேண்டும்.
துடிப்பைக் கண்டறியவும்
கை மணிக்கட்டு அல்லது கழுத்துப்பகுதியில் தமனியை அடையாளம் கண்ட பிறகு, அந்த இடத்தில் விரல்களைக் கொண்டு மெதுவாக அழுத்தம் கொடுக்கவும். விரல்களுக்கு அடிப்பகுதியில், ரத்தத்தின் துடிப்பை நீங்கள் உணர வேண்டும்.
துடிப்புகளைக் கணக்கிட வேண்டும்
30 விநாடிகள் கால அளவிற்கு, நீங்கள் உணரும் துடிப்புகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுங்கள். அல்லது, 15 விநாடிகள் கால அளவிலான துடிப்புகளின் எண்ணிக்கையை, இரண்டால் பெருக்கிக் கொள்ளுங்கள். இதுதான் உங்கள் ரத்தத்துடிப்பு விகிதம் ஆகும். இது இதயத்துடிப்பை ஒத்ததாகவே இருக்கும்.
சிஸ்டாலிக் அழுத்தத்தை மதிப்பிடுதல்
அழுத்தத்தை மெதுவாகக் குறைத்து வரும்போது, ரத்தத்துடிப்பைத் தொடர்ந்து உணர வேண்டும். ஒரு இடத்தில், இந்தத் துடிப்பானது முழுவதுமாக நின்றுபோகும். அந்தப் புள்ளியைக் குறித்துக் கொள்ளவும். இது நீங்கள் கணக்கிட்ட சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தை ஒத்து இருக்கும்.
மேலும் வாசிக்க : DNA – நமது வாழ்க்கையில் இதன் முக்கியத்துவம் என்ன?
டயஸ்டாலிக் அழுத்தத்தை மதிப்பிடுதல்
துடிப்பானது மீண்டும் திரும்புவதை, நீங்கள் உணரும்வரைக் காத்திருந்து, தமனி மீதான விரல்களின் அழுத்தத்தை மெதுவாக விடுவிக்கவும். துடிப்பு மீண்டும் தோன்றும் அந்தப் புள்ளியின் மதிப்பானது, கணக்கிடப்பட்ட டயஸ்டாலிக் ரத்த அழுத்தத்திற்கு ஒத்ததாக உள்ளது.
விரல்களால் கணக்கிடும் ரத்த அழுத்த முறைத் தோராயமான மதிப்பையே தருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சாதாரண ஓய்வுநிலையில், துடிப்பின் விகிதங்கள் நிமிடத்திற்கு 60 முதல் 100 என்ற அளவில் இருக்கும். இரத்த அழுத்த அளவீட்டைப் பொறுத்தவரை, சிஸ்டாலிக் அழுத்தமானது 90 – 120mm Hg, டயஸ்டாலிக் அழுத்தம் 60 – 80 mm Hg ஆக இருத்தல் அவசியம். விரல்களின் உதவியுடன் ரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் முறையில் கிடைத்த அளவீடுகளுக்கும், சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் அழுத்த அளவீடுகளுடன் அதிகளவில் மாறுபடும்பட்சத்தில், துல்லியமான மதிப்பீட்டைக் கண்டறிய. மருத்துவ நிபுணரைத் தொடர்பு கொள்வது அவசியம் ஆகும்.
அவசர நேரங்களில், இந்த எளிய விரல் முறையைப் பயன்படுத்தி ரத்த அழுத்தத்தை மதிப்பிடலாம். இதன் மூலம் தோராயமான அளவீட்டை அறிந்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்..