உறக்க நிலையை மேம்படுத்த உதவும் சுற்றுப்புற ஒலிகள்
உறக்க நிகழ்வானது, நல்வாழ்க்கைக்கு மட்டுமல்லாது அறிவு விருத்திக்கும் இன்றியமையாததாக உள்ளது. போதிய இரவு உறக்கமின்மை நினைவாற்றல், விழிப்புணர்வு போன்ற முக்கிய பண்புகளைப் பாதிக்கிறது.இதன்மூலம், உறக்கம், ஒவ்வொரு உயிரினங்களுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை அறிய இயலும்.
உறக்கமின்மை நிகழ்வானது, உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை விளைவித்து, அல்சைமர் நோய்ப்பாதிப்பிற்கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபட, மனதிற்குப் போதிய அளவிலான ஓய்வு, மிகவும் அவசியமானதாக உள்ளது.
சத்தத்திற்கும், மேம்பட்ட உறக்கத்திற்கும் இடையேயான தொடர்பு
வெண் இரைச்சல் என்பது சம அளவிலான அனைத்து அதிர்வெண்களைக் கொண்ட ஒலியாகும். ஒலிகளை இணைத்துக் குறிப்பிட்ட விளைவை உருவாக்குவதே ஒலிக்காட்சிகள் (soundscapes) எனப்படுகிறது.
வெண் இரைச்சல், ஒலிக்காட்சிகள் உள்ளிட்டவை, உறக்கத்தின் தரத்தைக் கணிசமாக அதிகரிப்பதாக, ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. போக்குவரத்து காரணமாக ஏற்படும் அதிகப்படியான சத்தங்கள், உறக்கத்தைப் பாதிக்கக் கூடும். வெண் இரைச்சலானது, நிலையான உறக்கம் ஏற்பட உதவுவதாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட வகையிலான ஒலிக்காட்சிகள், மூளைக்குத் தேவையான தளர்வை ஏற்படுத்துகின்றன. இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றன. நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கின்றன. இந்த ஒலிக்காட்சிகளின் நிலையான தாள இசையானது, உறக்கச் சுழற்சி நிலைகளின் இடையேயான மாற்றங்களுக்கு உதவுகிறது. இதன்காரணமாக, உறக்கத்தின் தரம் மேம்படுகிறது.
வெண் இரைச்சல்
வெண் இரைச்சல் எனப்படுவது, பின்னணி ஒலிகளை மறைக்கப் பயன்படும் ஒருவகை ஒலி சிக்னல் ஆகும். இது வெள்ளை ஒளியை ஒத்ததாக உள்ளது. இது, ஒளியின் அனைத்து வண்ணங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன. இது மனிதர்கள் கேட்கும்வகையிலான ஒலியின் வெவ்வேறு அதிர்வெண்களின் கலவையாகத் திகழ்கின்றது.
மற்ற ஒலிகளை மறைத்து, உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒலிகளைத் தடுக்கிறது. இதன்காரணமாக, இது உறக்க நிகழ்விற்கு உதவுகிறது. மின்விசிறியின் ஒலி, வானொலியில் டியூன் செய்யப்பட்ட ஒலி, தொலைக்காட்சியில் இருந்து வெளியாகும் நிலையான ஒலி உள்ளிட்டவை, வெண் இரைச்சலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
சவுண்ட்ஸ்கேப்
சவுண்ட்ஸ்கேப்கள் எனப்படுபவை, வெவ்வேறு வகையான இயற்கை ஒலிகள் மற்றும் இசைக்கூறுகளின் சிக்கலான கலவை ஆகும். மழையின் ஒலி, கடல் அலைகளின் சத்தம், மென்மையான இசைக்கருவியின் இசை உள்ளிட்டவை, இதில் அடங்கும். அமைதியான மற்றும் உடல் தளர்வு ஏற்படுத்தும் வகையிலான மனநிலையை ஏற்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே, இதன் நோக்கமாகும். உறக்க நிகழ்வுகளில், இது முக்கியப் பங்காற்றுகிறது.
உறக்கத்திற்கு உதவும் வகையிலான சவுண்ட்ஸ்கேப்களை, பல வகைகளாகப் பிரிக்கலாம்.
இயற்கைச் சவுண்ட்ஸ்கேப்கள்
மழை, கடல் அலைகள், இடியுடன் கூடிய கனமழை உள்ளிட்டவை, இயற்கைச் சவுண்ட்ஸ்கேப்கள் ஆகும். இவை அமைதியான சூழலை ஏற்படுத்தி, மனதை இலகுவாக்கி, ஆழ்ந்த உறக்கத்திற்குக் காரணமாக அமைகின்றன.
இசைச் சார்ந்த சவுண்ட்ஸ்கேப்கள்
மென்மையான கருவிகளின் இசை உள்ளிட்டவை இதில் அடங்கும். மென்மையான கருவியில் இருந்து வெளிப்படும் சீரான தாளமானது, இதயத்துடிப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, உடலை அமைதி நிலைக்குக் கொண்டுவர உதவுகிறது.
தியானம் தொடர்பான ஒலிகள்
இவைத் தியான நடைமுறைகளின் போது பயன்படுத்தப்படும் மென்மையான மணிகள் ஒலிப்பது போன்ற ஒலிகளை உண்டாக்குகின்றன. இந்த ஒலிகள், உடல் தளர்வையும், அமைதியான மனநிலையை ஏற்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கின்றன.
சத்தத்திற்கும் உறக்கத்திற்கும் இடையிலான தொடர்பு
மனிதனின் செவிப்புல அமைப்பு மற்றும் உறக்கச் செயல்பாடு
சுற்றுப்புறச் சூழலில் உள்ள ஒலி அலைகளைக் கண்டறிந்து, மூளை விளக்ககூடிய எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றும் பணியை, மனிதனின் செவிப்புல அமைப்பானது மேற்கொள்கிறது. செவிப்புல அமைப்பானது, காதின் வெளிப்புறம், மையம் மற்றும் உட்புறப் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. வெளிப்புறப் பகுதியானது ஒலியை உள்வாங்குகிறது. மையப்பகுதி, ஒலியைப் பெருக்குகிறது, உள்பகுதி, ஒலி அதிர்வுகளை, எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றுகின்றன. பின் இவை, செவிநரம்பு வழியாக, மூளைக்குக் கடத்தப்படுகின்றன.
நாம் உறக்கத்தில் இருக்கும்போது, இந்தச் செவிப்புல அமைப்பானது, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும். இதன்மூலம், சிற்சில ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கின்றது. மூளையானது, உறக்க நிகழ்வின் போது, ஒலிகளுக்குக் குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்துகின்றது. இதனால் உறக்கம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க : இதய நோய்ப் பாதிப்பிற்கான அபாயங்களை அறிவோமா?
செவிப்புலத்தைப் பாதிக்கும் வெண் இரைச்சல் மற்றும் சவுண்ட்ஸ்கேப்
ஒலியின் நிலையான, இனிமையான பின்னணி இசையை, வெண் இரைச்சல் மற்றும் சவுண்ட்ஸ்கேப் தொடர்ந்து வழங்குவதன் மூலம் செவிப்புலமானது பாதிக்கப்படுகின்றது. திடீரென்று கேட்கும் அதீத ஒலியானது, நம்மை உறக்கத்தில் இருந்து எழுப்பு, தொடர் உறக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
சில சவுண்ட்ஸ்கேப்கள், உடலின் தளர்வு நிலையைத் தூண்டும், இதயத்துடிப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்தும், மன அமைதியை ஊக்குவித்து, உறக்கத்திற்கு ஏற்ற சூழலை உருவாக்க உதவுகின்றன.
வெண் இரைச்சல் மற்றும் சவுண்ட்ஸ்கேப் – உறக்க நன்மைகள்
இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஒலிகளில் இருந்து மறைக்கிறது
வெண் இரைச்சல் என்பது குறிப்பிட்ட வகையான ஒலி சிக்னல் ஆகும். இது அதிர்வெண்களின் நிலையான பரவலால் வகைப்படுத்தப்படுகின்றது. வெள்ளை நிறமாலை அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கி உள்ளதால், இது மற்ற ஒலிகளைத் திறம்பட மறைக்கின்றது. இது உறக்கத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான குழப்பமான சத்தங்களை எளிதாக மறைத்துவிடுகின்றது.
மனதை அமைதிப்படுத்த உதவும் சவுண்ட்ஸ்கேப்கள்
இயற்கையான ஒலிகள் மற்றும் மென்மையான இசையை உணர்பவர்கள், மனதை அமைதிப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் ஆவர். அமைதியான மனநிலை மற்றும் உடல் தளர்வு, இவ்விரண்டும் சிறந்த உறக்கத்திற்கான காரணிகள் ஆகும். இத்தகைய ஒலிகள், உடலை ஓய்வு நிலைக்கு இட்டுச் செல்ல உதவுகிறது. இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்க உதவுகிறது.
வெண் இரைச்சல் , சவுண்ட்ஸ்கேப்கள் உள்ளிட்ட நிகழ்வுகளின் உதவியால், சிறந்த மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைத் தினசரி தனதாக்கிக் கொண்டு, நல்வாழ்க்கை வாழ்வோமாக….