மனச்சோர்வு பாதிப்பிலிருந்து நிவாரணம் வேண்டுமா?

மன ஆரோக்கியம் குறித்த ஆய்வு

மன ஆரோக்கியம் குறித்த ஆய்வுக்கு, சுய மதிப்பீடு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இந்தச் சுயமதிப்பீடு நிகழ்வானது, அளவிட மட்டுமே பயன்படுகிறதே தவிர, நோயைக் கண்டறிவதில் பயன்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனநலம் சார்ந்த விவகாரங்களின் நிலையினை அறிய, மதிப்பீடு நிகழ்வு உதவுகிறது. இதன்மூலம், மனநல ஆரோக்கிய மேம்பாட்டு விகிதத்தை, நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

மனச்சோர்வு பற்றிய விளக்கம்

மனச்சோர்வு நவீன யுகத்தில் பெரும்பாலோரிடம் காணப்படும் உடல்நலக் குறைபாடாகும். இது உங்கள் செயல்பாடுகள், எண்ணங்களை எதிர்மறையாகப் பாதிக்கிறது.மகிழ்ச்சியாகவும் ஆர்வமிகுதியுடனும் சில விசயங்களில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இந்த மனச்சோர்வு பாதிப்பு ஏற்படின், அது சோகம், விரக்தி மனநிலையை ஏற்படுத்திவிடுகிறது. மனச்சோர்வு நிகழ்வானது, ஒருவரது செயல்திறனைக் குறைப்பதோடு அல்லாமல், உடல்சார்ந்தப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கின்றது.

சர்வதேச அளவில், 260 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் மனச்சோர்வு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தப் பாதிப்பிற்கு, வயது, பாலினம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லை என்றபோதிலும், ஆண்களைவிட, பெண்களே, மனச்சோர்வு பாதிப்பிற்கு அதிகம் ஆளாவதாகவும், இது தற்கொலைச் செய்யும் அளவிற்கு மிகக் கொடுமையானது என ஆய்வுமுடிவுகளில் தெரியவந்துள்ளது.

மனச்சோர்வால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக, மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளுக்கு என்று ஆய்வகச் சோதனைகள் எதுவும் இல்லை. உங்களது மருத்துவரால், மனச்சோர்வுக்கான காரணத்தை அறிய முடியவில்லை என்றால், மனநல மருத்துவ நிபுணரை நாடுவது நல்லது.

மனச்சோர்வுப் பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை, நடத்தைகளை நிர்வகித்தல் உள்ளிட்ட சிகிச்சை முறைகளை, மருத்துவ நிபுணர் உங்களுக்குப் பரிந்துரைச் செய்வார்.

மனநல ஆரோக்கியத்தின் சிக்கலான பகுதிகளை அடையாளம் காணவும், ரகசியத்தன்மையைப் பாதுகாக்கவும் பல டிஜிட்டல் தளங்கள் உள்ளன.இந்தச் சோதனைகள் மேற்கொள்ளும் போது, உடல்நிலைக் குறித்த உண்மையான தகவல்களைத் தெரிவிப்பது இன்றியமையாதது ஆகும். இது வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையிலான இலக்கை நிர்ணயித்துக் கொள்ளும் வாய்ப்பை, உங்களுக்கு ஏற்படுத்தித் தருகிறது.

மன அழுத்தம், உறக்கம் தொடர்பான குறைபாடுகள், கவலைகள் உள்ளிட்டவைகளுக்கான சுய மதிப்பீட்டுச் சோதனைகளுக்கு, வயது முக்கியமான காரணி ஆக அமைகின்றது.

A depressed man sitting on a black sofa and holding his backhead.

மனநல ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவும் செயலிகள்

மனநலம் சார்ந்தச் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, அதனடிப்படையில் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில், பல்வேறு விதமான செயலிகளின் பயன்பாடுகள், சந்தையில் புழக்கத்தில் உள்ளன.

MANAS (Mental Health and Normalcy Augmentation System) :

70 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், அவர்களின் வாழ்க்கைத் திறன்கள் மற்றும் முக்கியமான உளவியல் செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்ட சுயமதிப்பீடு முறை ஆகும். இது இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Mpower- Holistic Mental Health:

இந்தியாவில் மனநலப் பராமரிப்புச் சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களில் முதன்மையானதாக உள்ள ஆதித்யா பிர்லா கல்வி அறக்கட்டளை அமைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் Mpower செயலியானது, மன ஆரோக்கியத்தைச் சிறப்பான முறையில் நிர்வகிக்க உதவுகிறது. இந்தச் செயலியில் உள்ள மனநிலையின் மதிப்பைக் கண்டறிய உதவும் டிராக்கரின் துணையுடன், மனநிலையையும் நம்மால் கண்காணிக்க இயலும்.

உங்களது மனநலம் சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும் உரிய தீர்வை, இந்த, Mpower செயலி வழங்குகிறது. இந்தச் செயலியை, உங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேவைகளை அதில் குறிப்பிட்டு, அதற்கேற்ற தீர்வினைப் பெற இயலும்.

மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பு – அறிந்ததும், அறியாததும்…

Amha (Inner hours)

அமஹா ஹெல்த் நிறுவனத்தின் தயாரிப்பான இந்தச் செயலியானது, உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவுவதோடு மட்டுமல்லாது, உடல்நல மேம்பாட்டிற்கான செயல்களை மேற்கொள்வதற்கான நினைவூட்டல்களை உங்களுக்கு வழங்குகின்றது.

Your DOST:

இந்தச் செயலியானது, உங்களது உணர்வுகளை, 7 நாட்களும் 24 மணிநேரமும் மதிப்பிட உதவுகிறது.

Virtual Hope Box

நீங்கள் எதிர்மறை எண்ணத்துடன் இருக்கும் போது, உங்களது எண்ணங்கள், மனதைக் கடினப்படுத்தும் வகையிலான சிந்தனைகள் உள்ளிட்டவைகளிலிருந்து உங்களைத் திசைத் திருப்ப உதவும்.

மனம் ஆரோக்கியச் சீர்குலைவிற்குக் காரணமான மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெற்று நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.