Image of a man doing stretching during a morning workout in his living room.

உடற்பயிற்சியினிடையே மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள்

உடற்பயிற்சியின் முக்கியத்துவம்

உடற்பயிற்சி செய்வதால் நல்ல உணர்வுகள் கடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, தியானம் போன்ற மன அமைதி பயிற்சிகளும் இதற்கு உதவுகின்றன.நீங்கள் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு இடை இடையே, சிறிது ஓய்வு எடுக்கவும் மறவாதீர்கள், அப்போதுதான், நீங்கள் செய்த உடற்பயிற்சியின் பலன், உங்களுக்கு முழுமையாகக் கிட்டும்.

உடலுக்கு தேவையான ஓய்வு இல்லையெனில், அது வலுப்பெற முடியாது என முன்னணி தடகளப் பயிற்சியாளர் கூறியுள்ளார்.இதற்காக, நீங்கள் ஓய்வு நாட்களில் உடற்பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது என்ற அர்த்தம் இல்லை. ஓய்வு என்பது, உங்களது வாராந்திர உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

கடினமான உடற்பயிற்சிகளுக்கு இடையில் யோகா அல்லது குறுகிய நடைப்பயிற்சி செய்வது நல்லது. இது ஓய்வு எடுப்பதற்கு சமமானது.உதாரணமாக, நீங்கள் மாரத்தான் ஓட்ட போட்டிக்காகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்கிறீர்கள் என்றால், இடைஇடையே, யோகா போன்றப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், உடற்பயிற்சியின் முழுப்பலனை அடைய இயலும். யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் கால அளவையே, நாம் ஓய்வு அளவாகக் கணக்கில் கொள்கிறோம்.

நீங்கள் உடற்பயிற்சியை, குறைந்த வேகத்தில் செய்யும் போது, அது தசைகள் மற்றும் திசுக்களுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, இதற்குமுன் நீங்கள் மேற்கொண்ட பயிற்சிகளில் இருந்து, உங்களது உடல் மீட்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கும். இது ஓய்வு எடுப்பதற்குச் சமமானது ஆகும். கடினமான உடற்பயிற்சிகளின் போது, உடலின் தசைகளுக்கு ஏற்பட்ட பழுதுகள், இதன்மூலம் சரிசெய்யப்படுகின்றன.

ஓய்வின் பயன்கள்

உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, உடலில் சேகரமாகும் ஹைட்ரஜன் அயனிகள், லாக்டிக் அமிலம் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதோடு மட்டுமல்லாது, தசைகளில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யவும், இந்த ஓய்வுநிலை உதவுகிறது. அதுமட்டுமல்லாது, தீவிரப் பயிற்சிகளில் இருந்து, மனதிற்குப் போதிய புத்துணர்ச்ச்சியை வழங்கவும் உதவுகிறது.

ஓய்வு நாட்களின் திட்டமிடல்

தீவிரப் பயிற்சிகளுக்கு இடையேயான ஓய்வு நாட்களில், பாதிப்புகளில் இருந்து மீள உதவும் பயிற்சிகளைத் திட்டமிடுவதால், சுகமான இடைவெளி கிடைக்கிறது.உடலுக்குத் தேவையான ஓய்விற்கு, சிறிய பயிற்சிகள் கொண்ட நாட்களும் முற்றிலும் ஓய்வு நாட்களும் முக்கியம்.. உடற்பயிற்சிக் காலங்களில், தசைகளில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்விதமாக, அதற்கு ரத்த ஓட்டத்தை, அதிகரிக்கு வகையிலான செயல்களை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பீர்கள். மற்ற நாட்களில், இதற்குமாறாக, அன்றைய தினம் முழுவதையும் உறங்கியே கழிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இவைகள் இரண்டும், உடற்பயிற்சி பழக்கத்தின் பகுதிகள் தான் என்பதை மறவாதீர்கள்.

Image of a man doing yoga or meditation on a lakeside surrounded by mountains.

வார உடற்பயிற்சித் திட்டம்

நீங்கள் வாரத்தில் 5 நாட்களுக்கு மேல் உடற்பயிற்சி பழக்கத்தை மேற்கொள்கிறீர்கள் என்றால், நீங்கள் மேற்கொள்ளும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை எளிமையானதாக மாற்றிக்கொள்வது அவசியம் ஆகும். நீங்கள் வாரத்தில் அதிகபட்சமாக, மூன்று அல்லது நான்கு முறைகள் மட்டுமே தீவிரப் பயிற்சிகளைப் பெறுகிறீர்கள் என்றால், மற்ற நாட்களில் ஏரோபிக் வகையிலான பயிற்சிகளை மேற்கொண்டு, அதை அர்த்தம் உள்ளதாக மாற்றிக் கொள்ளலாம். பயிற்சியின் இடைஇடையே, உங்கள் உடல் மற்றும் மனதிற்குப் போதிய அளவிலான இடைவெளி கொடுப்பது அவசியம் ஆகும்.

உடல் மற்றும் மனதிற்குப் போதிய அளவிலான இடைவெளியைப் பெறக் கீழ்க்கண்ட பயிற்சி வகைகளை மேற்கொள்ள, நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் வாசிக்க : சினைப்பை நோய் உள்ளவர்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்

டைய் சி

இது தற்காப்புக் கலைகளில், குறைந்த அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும் வடிவமாகும். இது உடல் சார்ந்த விழிப்புணர்வையும், உடலுக்குத் தேவைப்படும் வலிமை மற்றும் சமநிலையையும் வழங்குகிறது. தீவிர உடற்பயிற்சிகளின் போது உடலில் ஏற்படும் அமைதியற்ற தன்மையைப் போக்குவதற்கு மட்டுமல்லாது, தற்போதைய வாழ்க்கைமுறையில் ஏற்படும் மன அழுத்தத்ததைக் குறைக்கவும் உதவுகிறது.

இது ஏரோபிக் உடற்பயிற்சியை அதிகரிப்பதோடு, வலி நிவாரணிக்கான நன்மைகளையும் வழங்குகின்றது. Rheumatology எனப்படும் கீல்வாத குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு அதுதொடர்பான வலி உணர்வை, கணிசமாகக் குறைக்கின்றது. இது உன்னதமான மனம் மற்றும் உடல் சார்ந்தப் பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சியை, நீங்கள் மேற்கொள்ளும் போது, தியான உணர்வையும், மன அழுத்தம் குறைவதையும் உணர்வீர்கள்.

யோகாப் பயிற்சி

யோகாப் பயிற்சியானது, உங்கள் உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமல்லாது, சுவாச நுட்பங்களை உண்டாக்குகிறது. உடலில் சேதமடைந்த தசைகள் மற்றும் திசுக்களைச் சரிசெய்வதோடு, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகின்றது.

ஒளி எதிர்ப்புப் பயிற்சி

இந்தப் பயிற்சியானது, ரத்த ஓட்டத்தைத் தூண்டுவதோடு மட்டுமல்லாது, திசுக்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கவும்,அதற்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது.5 முதல் 8 பயிற்சிகள் என ஒவ்வொரு நகர்வையும் 40 வினாடிகள் மேற்கொள்ள வேண்டும். பின் 20 வினாடிகள் ஓய்விற்குப் பிறகு, 3 முதல் 4 சுற்றுக்கள் செய்ய வேண்டும்.

இடுப்புப் பயிற்சிகள்

உடலின் இடுப்புப்பகுதி மற்றும் மையப்பகுதியை வலுப்படுத்தும் விதமாக, இந்தப் பயிற்சிகள் உள்ளன. இந்தப் பயிற்சியானது அடிவயிற்றுத் தசைகள், முதுகுத்தசைகள், இடுப்பு நெகிழ்வுகள் மற்றும் இணைப்புகள் உள்ளிட்டவைகளுக்கான பயிற்சியாக விளங்குகிறது.

ஊர்ந்து செல்லுதல்

ஊர்ந்துச் செல்லும் பயிற்சியானது, உடல் வலிமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது, சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது. இதயம், நுரையீரல் உள்ளிட்டவைகளைச் சீராக இயங்கச் செய்கிறது.

நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சியானது உங்கள் உடலை இலகுவாக்குகிறது, மூட்டு இணைப்புகளைத் தளர்ச்சி அடையச் செய்து, அதன் இயக்கத்தை எளிதாக்குகிறது. இரத்த நாளங்கள், இதயத்தின் செயல்பாடு உள்ளிட்டவைகளை மேம்பட உதவுகிறது.

சைக்கிளிங்

சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம், இதயம் சிறந்து செயல்படுவதற்கான சூழல் அமைகின்றது.

உடற்பயிற்சியினிடையே மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளைச் சிறப்பாக மேற்கொண்டு, போதிய உடல்நலன் பேணிக்காப்பீராக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.