A person comparing his vital signs readings on iphone with an Apple watch tied around is wrist.

சிறந்த ஃபிட்னெஸ் டிராக்கர்கள் – இவைகள் தானா?

சமீபகாலமாக, மக்கள் தங்கள் உடல்நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளனர். இதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அவர்கள் தயாராகிவிட்டனர். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான உறக்கம், நடைப்பயிற்சி போன்றவற்றைக் கண்காணிக்கும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன.இது உங்களை அதிகச் செயல்திறன் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்லாது, உங்களது தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்து, உங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

சிறந்த உடல் ஆரோக்கியமே, உங்களது இலக்கு என்றால், ஃபிட்னெஸ் டிராக்கர்கள், உங்களுக்கு உற்ற துணைவனாக விளங்குகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

பிரபலமான ஃபிட்னெஸ் டிராக்கர்கள்

சந்தையில் புழக்கத்தில் உள்ள சில பிரபலமான ஃபிட்னெஸ் டிராக்கர்களை விரிவாகக் காண்போம்.

Garmin Vívosport

துல்லியமான இதயத்துடிப்பு அளவீடு, நீர்புகாத்தன்மை, GPS, 7 நாள் பேட்டரி, உறக்கக் கண்காணிப்பு, மன அழுத்தக் கண்டறிதல், ஸ்மார்ட்போன் அறிவிப்புகள், புளூடூத் மியூசிக் கட்டுப்பாடு மற்றும் பல சாதனங்களுடன் இணைவு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

அமேசானில், ரூ. 15,990க்கு கிடைக்கிறது.

Samsung Gear Fit2 Pro

இதயத்துடிப்பிற்கான சென்சார், ஆட்டோமேட்டிக் ஆக்டிவிட்டி கண்காணிப்பு வசதி, MapMyRun மற்றும் MyFitnessPal செயலிகளைப் பயன்படுத்த முடியும். 4 ஜிபி வரையிலான மியூசிக் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.

அமேசானில், ரூ. 27,999க்கு கிடைக்கிறது.

Fitbit Flex 2

மேற்கொள்ளும் உடற்பயிற்சிகளை அளவிடும் முறை, உறக்கத்தைக் கண்காணித்தல், நீர்புகாத் தன்மை உள்ளதால், நீச்சல் குளங்களிலும், அருவிகளிலும் இதை அணிந்துகொண்டு உற்சாகக் குளியல் போட முடியும். இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் இதில் இல்லை.

அமேசானில், ரூ. 3.690க்கு கிடைக்கிறது.

Garmin Vívofit 4

தினசரி நடவடிக்கைகளின் பதிவுகள், உறக்கத்தைக் கண்காணிக்கும் வசதி, நீங்கள் நடக்கும் தொலைவு, அதற்காக நடக்கும் அடிகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளை மதிப்பிட உதவுகிறது. இந்த ஃபிட்னெஸ் டிராக்கரை, சார்ஜ் செய்யத் தேவையில்லை, ஸ்மார்ட்போன் உடன் இணைக்கவும் தேவையில்லை. வாட்ச்களுக்குப் போடப்படும் செல்லே, இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

அமேசானில், ரூ. 5,490க்கு கிடைக்கிறது.

Fitbit Zip

இந்த ஃபிட்னெஸ் டிராக்கரை, நீங்கள் கையில் அணியத் தேவையில்லை. உங்களது பாக்கெட்டில் வைத்திருந்தாலே போதுமானது. உறக்கத்தைக் கணக்கிடும் வசதி இதில் இல்லை. வாட்ச்களுக்குப் போடப்படும் செல்லே, இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

அமேசானில், ரூ. 12,349க்கு கிடைக்கிறது.

Fitbit Charge 5

GPS வசதி, மன அழுத்தத்தைக் கணக்கிடுதல், உறக்கத்தைக் கணக்கிடுதல், இதயத்துடிப்பை அளவிடுதல், ஆக்சிஜன் செறிவு அளவு உள்ளிட்ட சிறப்பம்சங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இதயத்துடிப்பைப் பலப்படுத்தும் பொருட்டு, 20 விதமான வழிமுறைகள் உள்ளன. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 7 நாட்களுக்குப் பேட்டரி சார்ஜ் இருக்கும்.

விலை ரு. 12,499 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

A smart phone kept near a dumbbell on a black background, displaying a health activity monitor or a gym app.

Fastrack Reflex 3.0 Activity Tracker

உங்களது மனதுக்குப் பிடித்தவர்களுக்குப் பரிசாக வழங்கச் சிறந்தத் தேர்வாக உள்ளது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், பேட்டரி சார்ஜ், 10 நாட்கள் வரை நீடிக்கும். 24 மணிநேர இதயத்துடிப்பு கண்காணிப்பு வசதி உண்டு. ஸ்மார்ட்போன் கேமராவை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

விலை ரு. 1,797 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையிலான ஃபிட்னெஸ் டிராக்கர் ஆகும். துல்லியமான இதயத்துடிப்பு மதிப்பீடு, உறக்கக் கண்காணிப்பில் மேம்பட்ட அமைப்பு உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

விலை ரு. 13,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Xiaomi Mi Smart Band 6

AMOLED தொடுதிரை இதன் சிறப்பம்சம் ஆகும். ஆக்சிஜன் செறிவு, 24 மணிநேரத் துல்லிய இதயத்துடிப்பு கண்காணிப்பு, நீர்புகாத் தன்மை உள்ளதால், நீச்சல் வீரர்களும், அருவியில் குளிப்பவர்களும் தாராளமாகப் பயன்படுத்தலாம். அனைத்து வகை ஸ்மார்ட்போன்களுடனும் இணைந்து செயல்படக் கூடியது.

விலை ரு. 3,499 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Fitbit Sense Advanced Smartwatch

அலெக்ஸா தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது. இதய நலம், மன அழுத்தம், தோல் வெப்பநிலை ஆகியவற்றைக் கண்காணிக்கும் சிறந்த கருவி.இதயத்துடிப்பு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, உடனடியாகத் தெரியப்படுத்திவிடும். 12 நிமிடத்தில் முழுமையாகச் சார்ஜ் ஏறிவிடும். ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 6 நாட்கள் வரை நீடிக்கும்.

கூகுள் அசிஸ்டெண்ட், அலெக்ஸா மூலம் உடனடி செய்திகளைப் பெறலாம்..

விலை ரு. 21,458 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வாசிக்க : உடற்பயிற்சியினிடையே மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள்

Oppo Smart Watch

இதயத்துடிப்பு மானிட்டர், உடற்பயிற்சிகளைக் கண்காணித்தல், ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 21 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி சார்ஜ், ஸ்மார்ட் வாட்சின் பின்பகுதியில் 5 பெரிய சென்சார்கள் உள்ளன.

விலை ரு. 14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Mi Smart Band 5

AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது. ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 14 நாள்கள் வரைப் பேட்டரி நீடிக்கும். PAI (Personal Activity Intelligence) வசதி இதன் சிறப்பம்சம் ஆகும். நீர்புகாத் தன்மை, மன அழுத்தம், உறக்கம் கண்காணிப்பு, இதயத்துடிப்பு அளவீடு, பெண்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றது.

விலை ரு. 2,370 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

OnePlus Smart band

இதயத்துடிப்பு அளவீடு, உறக்கத்தைக் கண்காணிக்கின்றது. நீர்புகாத்தன்மை, ஸ்மார்ட்போனின் கேமராக்களைக் கட்டுப்படுத்தும் வசதி, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இணைந்து செயல்படும் வசதி, ஒருமுறைச் சார்ஜ் செய்தால், 14 நாள்கள் வரைப் பேட்டரி நீடிக்கும்.

விலை ரு. 1,599 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையிலான ஃபிட்னெஸ் டிராக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச்களை வாங்குவதற்கு முன், உங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் உங்களுக்குத் தேவையான வசதிகள் அதில் உள்ளனவா என்பதைச் சரிபார்த்து வாங்குவது நல்லது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.