நீரிழிவு நோயில் இருந்து நிரந்தர நிவாரணம் சாத்தியமா?
நீரிழிவு நோய்ப்பாதிப்பில் இருந்து இயற்கையான முறையில் நிரந்தரமான நிவாரணம் பெற முடியுமா என்பதே, பெரும்பாலானோரின் கேள்வியாக உள்ளது.
உங்கள் HbA1C அளவு 6 மாதங்களுக்கு 6.5% க்கும் குறைவாக இருந்தால், மருந்துகள் இல்லாமலேயே நீரிழிவுப் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம்.
நீரிழிவுப் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற உதவும் சிகிச்சை முறையானது, டிஜிட்டல் தொழில்நுட்பத்தைச் சார்ந்தது ஆகும். இது அமெரிக்கா மற்றும் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டு உள்ளது. இச்சிகிச்சை முறை இரத்த சர்க்கரை, உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் மற்றும் உறக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நீரிழிவு நிவாரணச் சிகிச்சைமுறையானது, ஊட்டச்சத்துப் பயிற்சியாளர், உளவியல் நிபுணர் உள்ளிட்டோரை உள்ளடக்கியது ஆகும். இந்த நிபுணர்கள் உங்கள் மருத்துவ தரவுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்து, வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவர். இது நீரிழிவுப் பாதிப்பை நிர்வகிக்கவல்ல எளிய மற்றும் வெற்றிகரமான வழிமுறை என்று நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது.
நீரிழிவு நிவாரண சிகிச்சையின் அடிப்படை உத்திகள்
நீரிழிவு பாதிப்பு யாருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, பொருத்தமான நோயாளிகளை அடையாளம் கண்டறிதல்
- நீரிழிவு பாதிப்பிற்கு உள்ளாகி, 5 ஆண்டுகளுக்கும் குறைவாக இருப்பவர்கள்
- நோயறிதல் நிகழ்வின் போது, HbA1Cயின் அளவு 9 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பவர்கள்
- அதிக BMI மதிப்பு கொண்டவர்கள்
- 60 வயதிற்கு உட்பட்டவர்கள்
- அர்ப்பணிப்புத்திறன் கொண்டவர்கள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்கான உண்மைக் காரணங்கள்
நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளே, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வதற்குக் காரணமாக அமைகின்றன. உதாரணமாக, நீங்கள் பல்வேறு தானியங்கள் அடங்கிய 2 ரொட்டிகளைச் சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 136 mg/dl (சாதாரண அளவு) ஆக இருந்தது. இதுவே இரண்டு எண்ணிக்கையிலான மைதா ரொட்டிகளைச் சாப்பிடும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 208 mg/dl ஆக அதிகரித்தது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பானது, உணவு வீதத்தில் மட்டுமல்லாது, அனைவருக்கும் ஒரேமாதிரி இருப்பதில்லை. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பில், எத்தகைய உணவானது, பெரும்பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப மாற்றங்களை மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளலாம்.
அறிவியல்பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட திட்டத்தைத் தொடங்குதல்
நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கு, இயற்கையான சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை என்றபோதிலும், அதன் பாதிப்பை மாற்றியமைக்க இயலும். நீரிழிவு நிவாரண திட்டமானது, அறிவியல்பூர்வமாகவும், மருத்துவ ரீதியாகவும் நிரூபணம் செய்யப்பட்ட திட்டமாகும்.
யாரெல்லாம் பயன்பெறுவர்?
நீரிழிவு நோய்ப்பாதிப்பை நிர்வகிக்கப் போராடுபவர்கள் மற்றும் கூடுதல் ஆதரவை நாடுபவர்களுக்காக, இந்தச் சிகிச்சைமுறையானது வடிவமைக்கப்பட்டு உள்ளது. நோய்ப்பாதிப்பின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்களுக்கும், அதிக BMI மதிப்பு கொண்டவர்கள், வாழ்க்கை முறையில் மாற்றம் மேற்கொள்ள நினைப்பவர்கள் என எல்லோருக்கும், இந்தச் சிகிச்சைமுறையானது பேருதவி புரிகிறது. பாரம்பரிய நீரிழிவு மேலாண்மை முறைகளில் பயன் அடையாதவர்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை நாடுபவர்களுக்கும், இந்தச் சிகிச்சை முறையானது வரப்பிரசாதமாக விளங்குகிறது.
சிகிச்சைச் செயல்முறை
இந்த நீரிழிவு நிவாரண சிகிச்சை முறையானது தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனங்களைப் பயன்படுத்தி துவங்குகிறது. இச்சாதனங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்கின்றன.வெவ்வேறு வகையான உணவுகள் மற்றும் செயல்பாடுகள் எவ்வாறு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கின்றன என்பதற்கான நிகழ்நேர நுண்ணறிவுகளை வழங்குகிறது. இதன்மூலம், நோயாளிகளிக்குத் தேவையான பரிந்துரைகளை வடிவமைக்க, சுகாதார நிபுணர்களுக்கு உதவுகிறது.
நீரிழிவு நோய் நிர்வாகத்திற்கான விரிவான அணுகுமுறையை உறுதிப்படுத்த, உடல் வலி, உறக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளில் போதிய அளவிலான கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
டீகோட் நிலை ( 1 முதல் 3 மாதங்கள்)
இது துவக்க நிலை ஆகும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கு, உங்கள் உடல் ஆற்றும் எதிர்வினைகளைப் புரிந்துகொள்கிறது. இதைத் தனிப்பயனாக்கப்பட்ட மாற்றங்களுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது.
உருமாறும் நிலை ( 4 முதல் 6 மாதங்கள்)
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்க, பெறப்பட்ட நுண்ணறிவுகளின் அடிப்படையில், வாழ்க்கை முறைகளில் மாற்றங்களை மேற்கொள்ளக் கவனம் செலுத்தும் காலம் இது ஆகும்.
சவாலான நிலை ( 7 முதல் 9 மாதங்கள்)
அடைந்த முன்னேற்றங்களைப் பராமரிப்பது மட்டுமல்லாது, நிலையான மாற்றங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு, மாறுபட்ட சவால்களை அறிமுகப்படுத்துவதே, இந்தக் காலகட்டத்தின் நோக்கம் ஆகும்.
தேர்ச்சி நிலை ( 10 முதல் 12 மாதங்கள்)
இது சிகிச்சை முறையின் இறுதிக் கட்டம் ஆகும். நீங்கள் கற்றுக்கொண்டதை வலுப்படுத்துவது ஆகும். இது நீரிழிவு நோய்ப்பாதிப்பை, நீண்ட காலத்திற்கு நிர்வகிப்பதற்கான கருவிகளும், அதுகுறித்த அறிவாற்ற்லும், உங்களிடம் இருப்பதை உறுதிசெய்கிறது.
இந்த நிலைகள் முழுவதிலும், நீங்கள் மருத்துவ நிபுணர்களுடன் நேரடியாக இணைந்து இருப்பீர்கள். உயர்தரத் தொழில்நுட்ப கண்காணிப்பு, மருத்துவ நிபுணர்களின் சீரிய வழிகாட்டுதல்கள் உள்ளிட்டவைகள், நீரிழிவு நோய்ப்பாதிப்பைத் திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும் வாசிக்க : நீரிழிவுப் பாதிப்பைக் குணப்படுத்தவல்ல உடற்பயிற்சிகள்
சிகிச்சை முறையின் நன்மைகள்
சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்கிறது
நீரிழிவு நோய்ப்பாதிப்பைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம், நரம்பு பாதிப்பு, பார்வைக் குறைபாடுகள், சிறுநீரகப் பிரச்சினைகள், நீரிழிவுப் பாதிப்பின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்பு உள்ள சிக்கல்களின் ஆபத்தைக் குறைக்க இயலும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவைத் திறம்பட கண்காணிக்கவும், அதி நிர்வகிக்கவும் உதவுகிறது.
மன ஆரோக்கிய மேம்பாடு
நீரிழிவுப் பாதிப்பானது உங்களை ஆற்றல் குறைவாக உணர வைக்கும். இதனால், மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.நீரிழிவு நிவாரண சிகிச்சை முறையை மேற்கொண்டவர்களுக்கும், மன அழுத்த பாதிப்பானது 55 சதவீத அளவிற்குக் குறைந்து, உடல் ஆரோக்கியமானது 50 சதவீத அளவிற்கு மேம்படுகின்றது. இது அவர்கள் சுறுசுறுப்பாகவும், நேர்மறைத் தன்மையுடனும் இருக்க உதவுவதால், நீரிழிவுப் பாதிப்பை நம்பிக்கையுடன் நிர்வகிக்க உதவுகிறது.
நீரிழிவு மருந்துகளின் சார்பைக் குறைக்கிறது
நீரிழிவு நிவாரண சிகிச்சை முறையை மேற்கொண்டவர்களுக்கு, நீரிழிவு மருந்துகளைச் சார்ந்து இருக்கும் நிகழ்வானது சரிவடைந்து உள்ளது. 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள், HbA1Cயின் அளவுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளனர்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது
நீரிழிவு நிவாரண சிகிச்சை முறையானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. இதன்மூலம், உடல் எடையானது, 5 கிலோ வரைக் குறைகின்றது. இதனால், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வழிவகை உண்டாகிறது.
வாழ்நாள் அதிகரிக்கிறது
இந்த சிகிச்சைமுறையானது, உங்கள் வாழ்நாளை அதிகரிப்பது மட்டுமல்லாது, நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை, சவால்களை எதிர்கொள்ளுதல், மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான வழிமுறைகள் உள்ளிட்டவற்றை உங்களுக்கு வழங்குகிறது.
நீரிழிவு நிவாரண சிகிச்சை முறையினை முறையாக மேற்கொண்டு, நீரிழிவுப் பாதிப்பிலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…