• Home/
  • PET CT/
  • PET ஸ்கேன் சோதனை சிறந்தது ஏன்?
Rear view of a female radiologist sitting in a control room watches at monitors with displayed brain scans results.

PET ஸ்கேன் சோதனை சிறந்தது ஏன்?

PET ஸ்கேன் என்பது மருத்துவர்களால் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வகையிலான படச் சோதனை முறை ஆகும். இரத்த ஓட்டம் சார்ந்த பிரச்சினைகள், மூளையில் ஏற்படும் நோய்கள், புற்றுநோய் மற்றும் இதயம் சார்ந்த குறைபாடுகளுக்காக, நீங்கள் மருத்துவமனைச் செல்ல நேரிட்டால், மருத்துவர் உங்களுக்கு PET ஸ்கேன் முறையையே பரிந்துரைச் செய்வார். பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகளின் பரவல், அதன் தற்போதைய நிலைகள் குறித்து மருத்துவர்கள் எளிதில் அறியும் வண்ணம், இந்தச் சோதனை விளங்கி வருகிறது.

PET ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சோதனைகளின் முடிவுகள் உடனுக்குடன் வந்து விடுவதால், உங்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சைகளை உடனே மேற்கொள்ள முடிவதோடு, பாதிப்பு மேலும் தீவிரம் ஆகாமலும் பார்த்துக் கொள்ள முடியும். 2023ஆம் ஆண்டில், லீஜர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள், தாங்கள் மேற்கொண்ட சோதனை முடிவுகளுக்காகக் காத்திருந்து, அவர்கள், தங்களின் நோய்ப்பாதிப்பை அதிகரித்துக் கொள்வதாகத் தெரிய வந்துள்ளது.

மருத்துவ சோதனை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் விபரங்கள், பெரும்பாலும் அத்துறைச் சார்ந்தவர்களுக்கேப் புரியும்படி இருக்கும். மருத்துவ சோதனை முடிவுகள் கிடைத்தால் மட்டுமே, நாம் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சிந்திக்க இயலும்.

PET ஸ்கேன்

பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி ஸ்கேன் என்பதன் சுருக்கமே, PET ஸ்கேன் ஆகும். PET ஸ்கேன் முறையில், உடலின் உறுப்புகள், திசுக்கள் உள்ளிட்டவைகளை, அணுக்கதிரியக்கப் பொருள் ரேடியோடிரேசராக உள் அனுப்பப்பட்டு, படங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினுள் உள்ள செல்களால் உறிஞ்சப்பட்ட ரேடியோடிரேசர், பாசிட்ரான் கதிர்களை உமிழ்கின்றது. இது ஸ்கேனரில் உள்ள சென்சிடிவ் கேமராக்களால் படம் பிடிக்கப்படுகிறது.

பாசிட்ரான் கதிர்களால் பதிவு செய்யப்பட்டவைகள், வண்ணப் படங்களாகத் தொகுக்கப்பட்டு, ஆய்விற்காக, கதிரியக்க நிபுணர் வசம் வழங்கப்படுகிறது. மருத்துவர், படங்கள் மற்றும் கதிரியக்க அறிக்கையை ஆராய்ந்து, PET ஸ்கேன் முடிவுகளை வைத்து, மேற்கொண்டு செய்ய வேண்டிய சிகிச்சைகள் குறித்து முடிவு செய்வார்.

CT மற்றும் MRI ஸ்கேன்கள், பாதிப்பினை மட்டும் எடுத்துக்காட்டி வந்த நிலையில், PET ஸ்கேன், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் வடிவமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யப் பேருதவிப் செய்கிறது.

உடல் உறுப்புகள் மற்றும் அதன் உள்ளடக்க அமைப்புகளை 360 டிகிரி கோணத்திற்குப் படம்பிடிக்க, PET ஸ்கேனரில் 3 விதங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

கரோனல் : இது உங்கள் முகத்திற்கு நேரான பார்வை ஆகும். இது உடலின் முன் மற்றும் பின் பகுதிகளைப் படம்பிடிக்கிறது.

சாஜிட்டல் : இது உடலின் இடது மற்றும் வலது பகுதிகளின் பக்கவாட்டுப் பகுதிகளைப் படம்பிடிக்கிறது.

அச்சு : இது குறுக்கு மற்றும் கிடைமட்ட பார்வை என்று அழைக்கப்படுகிறது. இது உடலின் கீழ் மற்றும் மேல் பகுதிகளைப் படம்பிடிக்கிறது.

PET CT scan of Human Brain in 3 different colour shades.

ரேடியோடிரேசர் என்றால் என்ன?

PET ஸ்கேன் சோதனையில், அணுக்கதிரியக்கப் பொருள், ரேடியோடிரேசராகப் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலினுள் ஊசி அல்லது வேறு வழிகளின் மூலமாகவோ உட்செலுத்தப்படுகிறது. இது உடல் முழுவதும் பயணித்து, செல்களில் சேகரம் ஆகின்றன. இந்த நிகழ்விற்கு அதீத ஆற்றல் தேவைப்படுகிறது. ரேடியோடிரேசராக, பெரும்பாலும் புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் (FDG) பயன்படுத்தப்படுகிறது.

FDG எடுத்துக் கொள்ளுதல்

உடலில் உள்ள செல்கள்,இந்தக் கதிரியக்கப் பொருளை எடுத்துக் கொள்வதைப் பொறுத்து, முடிவுகளில் மாற்றம் ஏற்படுகின்றன.

உட்கொள்ளல் இல்லை : FDG, உடலில் உள்ள செல்களுடன் இணையவில்லை

இயல்பான உட்கொள்ளல் : மூளை, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளுக்கு அதிகப்படியான குளுக்கோஸ் தேவை. இதன்காரணமாக, இந்தப் பாகங்களில் அதிகப்படியான FDG இருப்பினும், அது சாதாரணமான உட்கொள்ளல் ஆகவே கருதப்படுகிறது.

மிதமான அல்லது குறைவான உட்கொள்ளல் : சாதாரண திசுக்களில் கொழுப்பு உள்ளிட்டவைகள் இருக்கலாம். இந்த நிகழ்வில், மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்ப வேண்டியது அவசியம் ஆகும்.

அசாதாரண உட்கொள்ளல் : புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளான செல்களில், குளுக்கோஸ் உறிஞ்சுதல் அசாதாரணமான அளவில் இருக்கும்.

நிலையான உட்கொள்ளல் மதிப்பு என்றால் என்ன?

PET ஸ்கேன் சோதனை முறையில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பகுதியில் ரேடியோடிரேசரின் செயல்பாட்டை வரையறுக்கும் விகிதமே, நிலையான உட்கொள்ளல் மதிப்பு (SUV) ஆகும். இதை உட்கொள்ளல் விகிதம் என்றும் அழைக்கிறோம்.

வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும் போது, நிலையான உட்கொள்ளல் மதிப்பும் அதிகரிக்கின்றது. சில சமயங்களில், புற்றுநோய் செல்கள் இருக்க்ம் போதும், இந்த விகிதம் அதிகரித்துக் காணப்படுகிறது.

SUV <5 – குறைந்த தீவிரம்

SUV 5-10 – மிதமானது

SUV 10-15 – தீவிரமானது

SUV >15 – மிகவும் தீவிரமானது

PET ஸ்கேன் உள்ளிட்ட ஸ்கேன் சோதனைகளை ஒப்பிடும் போது, நிலையான உட்கொள்ளல் மதிப்பின் ஏற்ற, இறக்கங்கள், நோய்ப் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த தெளிவான புரிதலை உண்டாக்கும்.

டூவில் மதிப்பெண் என்றால் என்ன?

ஹாட்ஜ்கின் அல்லது ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாக்களுக்கான சிகிச்சைச் சோதனைகளில் புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் அதிகரிப்பு குறித்த தகவலைத் தெரிந்துக் கொள்வதற்காக, சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட அளவீடே, இந்த டூவில் மதிப்பெண்(Deauville Score) ஆகும். இது நிலையான உட்கொள்ளல் மதிப்பைப் போன்று FDG உட்கொள்ளலை அளவிடும் போதிலும், கல்லீரல், உணவுக்குழாய், இதயம், மூச்சுக்குழாய், ரத்த நாளங்கள் போன்றவற்றுடனான, நுரையீரல்களுக்கு இடையேயான இடைவெளியில், நிலவும் அதிகரிப்பை ஒப்பிட்டுக் காட்டும் படவிளக்கமாக இது உள்ளது.

டூவில் மதிப்பெண்கள் 1 முதல் 5

  1. உட்கொள்ளல் இல்லை
  2. மீடியாஸ்டினத்தில் சிறிதளவு உட்கொள்ளலே நிகழ்கிறது.
  3. மீடியாஸ்டினத்திற்கு மேலே, ஆனால், கல்லீரலுக்கும் கீழே உட்கொள்ளல் நிகழ்கிறது.
  4. கல்லீரலுக்கு மேலே, குறைவாகவோ அல்லது மிதமானதாகவோ உட்கொள்ளல் நடைபெறுகிறது.
  5. கல்லீரலில் அதிகளவு உட்கொள்ளல் நிகழ்கிறது.

மேலும் வாசிக்க : PET ஸ்கேன் VS CT ஸ்கேன் – இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

காயங்கள் என்றால் என்ன?

உடல் உறுப்பு மற்றும் எலும்புப் பகுதியில் காணப்படும் சேதமடைந்த திசுப்பகுதியையே, காயங்கள் என்கிறோம். இது நமது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.

கால்சிபிகேஷன் : கடினமான திசுக்களின் சிறிய பகுதிகள்

நீர்க்கட்டிகள்/ சிஸ்ட் : திரவ பொருளால் நிரப்பப்பட்ட சிறிய சுவரிலான பைகள் ஆகும்.

கட்டிகள் : திசுக்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் கொத்துகள்

முடிச்சுகள் : சிறிய வகைக் கட்டிகள்

கட்டிகள் : அசாதாரணமான செல் வளர்ச்சி

சோதனை முடிவுகள் உணர்த்துவது என்ன?

உடலின் உள்கட்டமைப்புகள் மற்றும் அவைகள் செயல்படும் விதம் குறித்து விளக்கும் திறன்மிகு சோதனையாக, PET ஸ்கேன் விளங்குகிறது. இது நோய்ப் பாதிப்பைக் கண்டறியும், சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும் பயன்படுகிறது. நோய்ப் பாதிப்பிற்கு, நீங்கள் PET ஸ்கேன் சோதனைகளை நாடும் நிலையில், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதோடு மட்டுமல்லாது, நோய்ப் பாதிப்பிற்கான சிகிச்சைகள் குறித்த அறிவும் இருக்கும். இந்தச் சோதனை, உங்களுக்குத் திறனாய்ந்த தேர்வுகளைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது.

உடலின் உள்கட்டமைப்புகள் மற்றும்செயல்படும் விதம் குறித்து விளக்கும் திறன்மிகு சோதனையாக, PET ஸ்கேன் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.