மேமோகிராம் – கட்டுக்கதைகளும் உண்மைகளும்…
மார்பகப் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய மேமோகிராம் எனப்படும் மார்பக ஊடுகதிர்ப் படச்சோதனைக்கு, பெண்களிடையே மிகுந்த வரவேற்பு உருவாகி உள்ளது. இந்தச் சோதனையில், குறைந்த அளவிலான கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. கால்சியம் படிவுகள், சிறு கட்டிகள், வலி, முலைக்காம்புகளின் அமைப்பில் இடமாற்றம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படாத நிலையிலும், புற்றுநோய் பாதிப்பு வீதத்தை 87 சதவீதம் துல்லியமாகக் கணிக்க உதவுகிறது.
40 முதல் 74 வயதிற்கு உட்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயின் காரணமாக ஏற்படும் மரணங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆண்டிற்கு ஒருமுறை மேமோகிராபிசோதனையைச் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 50 வயதான அனைத்துப் பெண்களுக்கும், மேமோகிராபி சோதனைப் பரிந்துரைக்கப்படுகின்றது. வீட்டில் யாராவது ஒருவருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த சிகிச்சை மேற்கொண்டு இருந்தால், 40 வயதிற்கும் குறைவாக உள்ள பெண்களுக்கும், இந்தச் சோதனை அறிவுறுத்தப்படுகின்றது.
சர்வதேச அளவில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மேமோகிராம் சோதனைத் தொடர்பான கட்டுக்கதைகளும் அதிக அளவில் வெளிவரத் துவங்கி உள்ளன. பெண்களிடையே, இதுகுறித்த அச்ச உணர்வு ஏற்படுவதற்கு உள்ளாகவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு நாம் தீர்வு சொல்லும் வகையிலேயே அமைந்து உள்ளது இந்தக் கட்டுரை…
மேலும் வாசிக்க : எம் ஆர் ஐ ஸ்கேன் – மேமோகிராம் ; எந்த சோதனை டாப்?
கட்டுக்கதை :
மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கத் தாமதம் ஆகும்போது தான் மேமோகிராம் சோதனையால் அதன் அறிகுறிகளைக் காண முடியும்
உண்மை :
மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய, மருத்துவர்களுக்கு மேமோகிராம் சோதனை உதவுகிறது.
கட்டுக்கதை :
மேமோகிராபிசோதனையின் போது அபாயகரமான கதிரியக்க வீச்சுக்கு உள்ளாகின்றோம்
உண்மை:
எக்ஸ்ரே கதிர்களே, இந்த மேமோகிராம் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. இது குறைந்த அளவிலேயே உட்செலுத்தப்படுவதால், அபாயகரமான பாதிப்பு ஏற்பட மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது.
கட்டுக்கதை :
மேமோகிராம் சோதனையைவிட சுய மார்பகப் பரிசோதனைச் சிறந்ததா?
உண்மை :
மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தொடர்பாக ஏற்படும் மரணங்களை, மேமோகிராம் சோதனையின் மூலமே குறைக்க முடியுமே தவிர, சுய மார்பகப் பரிசோதனையின் மூலம் குறைக்க முடியாது.
கட்டுக்கதை :
மேமோகிராம் சோதனைக்கு அதிகச் செலவு ஆகுமா?
உண்மை :
40 வயது பெண்கள், மேமோகிராம் சோதனை மேற்கொள்ளக் கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து சில காப்பீட்டு நிறுவனங்கள் விலக்கு அளிக்கின்றன. மேமோகிராம் சோதனைச் செய்து கொள்வதற்கு முன்னரே, அதுகுறித்த கட்டண விபரங்கள் மற்றும் காப்பீட்டுத் தொகைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் நலம்.
மேமோகிராம் சோதனைக் குறித்த உண்மைத் தகவல்களை, இந்தக் கட்டுரை, உங்களுக்கு அளித்திருக்கும் என்று நம்புகிறோம்….