மனநல விழிப்புணர்வு – சரியா அல்லது தவறா?
மன ஆரோக்கியம் என்பது யாதெனில், உணர்ச்சிகள், உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை உள்ளடக்கிய நிகழ்வு ஆகும். இது நாம் என்ன நினைக்கிறோம், என்ன உணர்கிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து அமைகிறது. மன ஆரோக்கியம் நமது உறவுகள், தேர்வுகள் மற்றும் மன அழுத்தத்தைக் கையாளும் விதத்தை நிர்ணயிக்கிறது.வயது, பாலினம், இனம், வருமான நிலை உள்ளிட்ட காரணிகளின் சார்பின்றி, மனநலப் பாதிப்புகளானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதான களங்கத்தை அகற்றும் வகையிலான முக்கியமான வழிகளாக, அங்கீகாரம் மற்றும் கல்வியானது உள்ளது. மனநலம் குறித்து வெளிப்படையாகப் பேசினால் மட்டுமே, அதுதொடர்பான தவறான எண்ணங்கள் மற்றும் களங்க உணர்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், அதுதொடர்பான உதவிகளைப் பெறும் சூழலும் உருவாகும். மனநலப் பிரச்சினைகளால், தினசரி வாழ்க்கையில் நிகழும் தாக்கங்கள் குறித்து, பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், அன்புக்கு உரியவர்கள் உள்ளிட்டோர்ப் புரிந்துகொள்வது அவசியம் ஆகும். இதன்மூலமே, மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவுக்கரம் நீட்ட இயலும்.
கொரோனா பெருந்தொற்றில் தந்தையை இழந்த பெண், வருடங்கள் கழித்தும் அந்தத் துயரத்திலிருந்து மீளவில்லை.யாராலும் அவளது வலியை உணர முடியவில்லை. இதன்காரணமாக, அவளும் தன் வலியை யாருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை. மனநலப் போராட்டங்கள் தொடர்பான களங்கம் இன்னும் சமூகத்தில் ஒழிந்தபாடில்லை. உதவியைத் தேடிப்பெறுவதற்கான தயக்கம், அவர்களுடனான துன்பத்தை மேலும் தீவிரப்படுத்தியது. இந்த அதிகப்படியான புரிதல் மற்றும் ஆதரவுக்கான தேவையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை, சமூகவலைதளங்களிலோ, நண்பர்களுடனோ, மிக இனிய அனுபவமாகப் பகிர்ந்து கொள்கிறோம். அதேநேரத்தில், சோகமான தருணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தவறிவிடுகிறோம். ஏனெனில், அது நமது தாழ்வு மனப்பான்மையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தும் என நினைக்கிறோம்.ஆனால், உண்மைநிலை என்பது வேறுவிதமாக உள்ளது. எல்லாத் தருணங்களிலும் இயல்பாகச் செயல்படுபவர்களே மனநலப் பிரச்சினைகளைத் திறம்படக் கையாள முடியும்.இவர்கள் தான், அல்டிமேட் ஹீரோக்களாக, சமூகத்தில் கருதப்படுகின்றனர்.
தங்களுடைய பலம் மற்றும் பெருமைகள் குறித்து சிலாகித்துப் பேசும் நாம், சோகமான தருணங்களையோ அல்லது பலவீனங்கள் குறித்தோ, வெளிப்படையாகப் பேசுவது இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று, மனச்சோர்வும், இயல்பானதுதான் என்பதை ஏற்றுக்கொள்வதில் தான், நமது வெற்றி அடங்கி உள்ளது.
மேலும் வாசிக்க : உடல் மன ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து முறையின் பங்கு
தோல்விகளை வெளிப்படுத்த விரும்பாத மக்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பவர்கள் கூட, தங்களது சோகமான அல்லது பலவீனமான தருணங்களை வெளிக்காட்டிக் கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். இதுவே, மக்களின் இயல்பான உளவியல் ஆகும்.
மனிதர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மற்றும் சோகமான நாட்களைக் கடந்து செல்கின்றனர்.வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அனைவரும் ஒன்றுபோல் நினைத்தால்கூட, யாருக்கும் அவர்கள் நினைத்தது போன்று, வாழ்க்கை அமைந்து விடுவது இல்லை. மகிழ்ச்சியான தருணமோ அல்லது சோகமான காலங்கள் என்றாலும், அனைத்தும் தற்காலிகமானது தான் என்பதை உணர்ந்தாலே, உங்களுக்கு எதையும் சமாளிக்கும் திறன் தானாகவே வந்துவிடும்.
நட்புரீதியிலான நினைவூட்டல்
நீங்கள் எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ இருக்க மாட்டீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை எப்போதும் நியாயமான முறையிலேயே வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். சிலர் உங்கள் எதிர்வினை அதிகம் என்றால், அதைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் உணர்வுகளின் நியாயத்தை அவர்களால் புரிந்துகொள்ள இயலாது.நாம் சோகமாகவோ அல்லது மகிழ்ச்சியாக இருந்தாலும், தங்களுடைய உணர்வுகளை ஏற்றுக்கொள்வதுதான், மனநல ஆரோக்கியத்திற்கான முதல்படி ஆகும்.
மோசமான நாள் என்பது மோசமான வாழ்க்கையைக் குறிக்காது
நீங்கள் நினைத்தபடி அன்றைய நாள் இல்லை என்றாலோ அல்லது, நீங்கள் கணிசமான அளவிலான நிதி இழப்புகளைச் சந்தித்து இருந்தாலோ, மன அழுத்தத்திற்கு உட்பட நேரிடும். இந்த விசயங்களும், வாழ்க்கையின் ஒரு பகுதி தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
உங்கள் மனவலிமையினால், அதைச் சமாளிக்க முயலுங்கள். அத்தகைய தருணங்களில், உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள். அதற்குப்பதிலாக, உங்களை நீங்களே நட்பு பாராட்டிக் கொள்ளும்பட்சத்தில், ஏற்படும் சிக்கல்களை எளிதாகச் சமாளிக்க இயலும்.
நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், இருக்கும் நிலைக்கு வரப் பலர்ப் போட்டி போட்டுக்கொண்டு உள்ளனர். நன்றி உணர்வு என்பது, உங்களை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லும். மேலும் எத்தகைய சூழ்நிலையில் இருந்தும் அது உங்களை மீட்டெடுக்க உதவும்.
மனநல விழிப்புணர்வு ஆரோக்கியமான மற்றும் சரியான நிகழ்வுதான். இதைக் கவனமாகக் கடைப்பிடித்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவோமாக…