சுய மருத்துவம் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சர்வதேச அளவில் இரண்டாவது அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடாக விளங்குகிறது. நம் நாட்டில் 1700 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற சூழல் உள்ள நிலையில், மக்களிடையே, சுயமருத்துவம் பரவலாகக் காணப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
சுயமருத்துவத்தை, யாவரும் எளிமையாகச் செய்து முடிவதாலும், அதன்மூலம் உடனடியாக நிவாரணமும் கிடைத்து விடுவதால் பலரும், இந்த மருத்துவமுறைக்கு ஆட்பட்டு விடுகின்றனர். நமது வீட்டில் பாட்டி, அத்தை, மாமாக்கள் என்று வயதானவர்கள் இருந்தால் அவர்கள் தான் அந்த வீட்டின் மருத்துவர்களாகவே திகழ்வர். அவர்களிடம் “ நாம் சுயமாக மருத்துவம் செய்து கொள்வது தவறு” என்று கூறினால், ‘எங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, எந்த மருத்துவரிடம் சென்றோம்?, விட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தோ அல்லது தெரிந்த மருந்து வகைகளை எடுத்துக் கொண்டுதான், உடல்நலம் பெற்றோம்? ஏன் நாங்க இப்போ நல்லா இல்லையா?’ என்று எதிர்கேள்வி கேட்டு, நம் வாயை அடைத்து விடுவார்கள்.
உடல்நலக்குறைவின் போது, மருத்துவர் பரிசோதித்து, தகுந்த சிகிச்சையும் மருந்துகளும் பரிந்துரைப்பார்.அவ்வாறின்றி, நாமே தன்னிச்சையாக மேற்கொள்ளும் மருத்துவமானது, மேலும் பல்வேறு உடல்நலம் சார்ந்தப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
சுயமருத்துவத்தின் அபாயங்கள்
பெரும்பாலான மக்கள், சுயமருத்துவம் செய்து கொள்வதை, சரி என்றே ஏற்றுக் கொள்கின்றனர். தலைவலி போன்ற சிறிய அளவிலான உடல் உபாதைகள் ஏற்படும் போது, இதற்காக மருத்துவரிடம் சென்றால், அதிகப் பணம் செலவாகும் மற்றும் அதிக நேரம் ஆகும் என்பதற்காக, பாரசிட்டமால் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகளை நாமாகவே உட்கொள்கிறோம்.இது அப்போதைய நிலையில் நிவாரணம் தந்தபோதிலும், அது எதிர்காலத்தில் ஏற்படுத்த இருக்கும் பக்கவிளைவுகள் குறித்து நாம் கவலைப்படுவது இல்லை. இதுபோன்று சுயமாக மருத்துவம் மேற்கொள்வது ஆரோக்கியமற்ற நடைமுறை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
உடலில் ஏற்படும் சிறிய அளவிலான பாதிப்பிற்கு, நாம் சுயமருத்துவம் தொடர்ந்து செய்துகொள்ளும் பட்சத்தில், அது மிகப்பெரிய உடல்நலக்குறைபாடை ஏற்படுத்திவிடும். உடல் சுகவீனம் அல்லது இருமல் இருக்கும்போது, மக்கள் பல்வேறு வகையான மருந்துகளைத் தாமாகவே வாங்கி உட்கொள்கின்றனர்.இந்த நிகழ்வானது, நோய்ப்பாதிப்பின் தீவிரத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாது, ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகளையும், மருந்துகளுக்கு அடிமையாக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.
துரதிர்ஷ்டவசமாக, சுயமருத்துவத்தின் தீமைகள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. சுயமருத்துவத்தின் போது, நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் அளவு அதன் கலவைக் குறித்த போதிய அளவிலான அறிவு இல்லை. இதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடையே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சுயமருத்துவத்தின் பக்கவிளைவுகள்
உடலில் ஏற்படும் சிறிய வகைக் குறைபாடுகளுக்கு, நாம் சுயமருத்துவம் எடுத்துக் கொள்வது தற்காலிகமான நிவாரணம் தருமேயன்றி, பூரணநலம் தருமா என்பது ஆயிரம் மில்லியன் டாலர்க் கேள்வி தான். சுயமருத்துவம் மேற்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்த பாதிப்புகளை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.
சுயமருத்துவத்தில், ஆண்ட்டிபயாட்டிக்குகளை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம், மருந்து எதிர்ப்புத் தன்மை நிலை உருவாகும். உதாரணமாக, பாக்டீரியா காரணமாக ஏற்படும் தொற்றுப் பாதிப்புகளுக்கு, அதிக அளவிலான ஆண்ட்டிபயாட்டிக் பயன்பாடு, மருந்து எதிர்ப்புத்தன்மையை ஏற்படுத்தி சிகிச்சை அளிப்பதையே, பலனற்றதாக்கி விடும்.
சுயமருத்துவ முறையை மேற்கொள்ளும் நபர், உடல்நலக்குறைவிற்காக மருத்துவர்ப் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
சுயமருத்துவமானது, ஏற்கனவே இருக்கும் உடல் பாதிப்பின் அறிகுறிகளை மட்டுப்படுத்துவதோடு, நோய்ப் பாதிப்பின் தீவிரத்தைக் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்த கூடும்.
சுயமருத்துவ முறையில் எடுத்துக் கொள்ளப்படும் மருந்தின் அளவு குறித்த துல்லிய விவரம் இல்லாததால், இந்த மருத்துவமுறையை, நாம் ஊக்குவிக்கக் கூடாது.
உடனடித் தீர்வு தேவை மற்றும் மருத்துவர்த் தேவையின்மைக் காரணமாக, பலர்ச் சுயமருத்துவத்தை நாடுகின்றனர்.இது பல்வேறு உடல்நலக்குறைவுகளுக்கு வழிவகுத்துவிடுகிறது. இது மருத்துவச் செலவை, பன்மடங்கு அதிகரித்து விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.
சுயமருத்துவமுறையை மேற்கொள்வதால், உடல்நலம் மோசமாகப் பாதிக்கப்படுவதோடு, உறுப்புகள் செயல்படாநிலையை ஏற்படுத்தி, விரைவிலேயே இறப்பு நிகழ்வுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.
மருந்தாளுநரின் பங்கு
உடலில் ஏற்பட்டு உள்ள பாதிப்பைக் கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை முறையை மேற்கொள்வது மட்டுமல்லாது, அதற்குரிய மருந்து வகைகளைப் பரிந்துரைத்து மீண்டும் அவரைப் பழைய உடல் நிலைக்குக் கொண்டு வருவதே, மருந்தாளுநரின் தலையாயப் பங்கு ஆகும். உடல்பாதிப்பிற்கு, சம்பந்தப்பட்ட நபர் மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குமுன், அவர்ச் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி தெளிவு பெறுவது அவசியம் என அந்நபருக்கு, மருந்தாளுநர் அறிவுறுத்துவது அவசியம் ஆகும்.
தகவல்கள்
மருத்துவர்கள், தாங்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது, அதன் சரியான வழிமுறைகள் குறித்து தெளிவாக விளக்குவது மிகவும் அவசியமாகும். மருந்துமுறைகள் தொடர்பான சந்தேகங்கள் மருத்துவருக்கு ஏற்படாமல், இது தடுக்க உதவும் என்பதாலும், இதுகுறித்த தனது முடிவுகளை, நோயாளிகள் விரைந்து மேற்கொள்ள உதவும்.
சிகிச்சைத் தொடர்பான ஆலோசனைகள்
நோயாளிகள் தங்கள் நிலையைப் புரிந்துகொள்ளவில்லையெனில், சரியான சிகிச்சையைப் பெற இயலாது.சிகிச்சைக் குறித்த தவறான புரிதல், மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிடக் கூடாது. மருந்துகள், அதன் அளவு, எடுத்துக்கொள்ளும் முறை உள்ளிட்ட விவரங்கள், நோயாளிகள் அறிந்திருக்கும் பட்சத்தில், அவர்கள் விரைவில் அந்தப் பாதிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்.
மேலும் வாசிக்க : இதய நலனைக் கண்காணிக்க உதவும் கருவிகள்
சுகாதாரக் கல்விமுறை
சுயமருத்துவமுறை என்பது, மக்கள் தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்ட முறையே ஆகும். இதன் விளைவுகள் கடுமையானதாக இருப்பதால், இதுதொடர்பான சுகாதாரக் கல்வியை, மக்களுக்கு நாம் கற்பிக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. மக்களுக்கு, இதுதொடர்பான சுகாதாரக் கல்வியைக் கற்றுத்தருவதன் மூலம், சுயமருத்துவமுறையின் தாக்கங்கள் குறித்து அவர்கள் பின்வரும் சந்ததியினருக்குத் தெரிவிப்பர்.
சுயமருத்துவம் மேற்கொள்வதனால் ஏற்படும் விளைவுகள், உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகளையும், நோயாளிகள் அறியும்பட்சத்தில், அவர்களும் அதுகுறித்த விழிப்புணர்வைப் பெறுவர்.சுயமருத்துவத்தின் தீமைகள் தொடர்பான புரிதல் தன்மை, நுண்ணுயிர் எதிர்ப்புச் சிக்கல்களைக் கட்டுப்படுத்த உதவும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.