மருந்து உட்கொள்ளலை எளிதாக்குகிறதா செயலிகள்?
நோய்ப்பாதிப்பில் இருந்து, நோயாளி விரைவில் குணமடைய, மருத்துவ நிபுணர் அதற்கென்று ஒரு மருந்து உட்கொள்ளல்முறைச் சார்ந்த செயலியை உருவாக்கி, அதை நோயாளியைக் கடைப்பிடிக்க வைப்பதில் தான் முழுவெற்றி அடங்கி உள்ளது. இதன்மூலம், நோயாளிக்கு சிறந்த முறையிலான கவனிப்பையும் வழங்குகிறது.
மருந்துமுறைத் திட்டம்
மொபைல் செயலியின் முக்கியமான அம்சமாக, நோயாளிகளுக்கான மருந்து நுகர்வே இருக்க வேண்டும். செயலியில் உள்ள தரவுகள், நோயாளிகளின் மருத்துவ முன்னேற்றத்தை அறிய இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பாதுகாப்பு அம்சம் கருதி, மருத்துவ நிபுணரால், துவக்கக் கால மருந்து திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். பின்னர் அது மருத்துவரின் மொபைல் சாதனத்துடன் பகிரச் செய்ய வேண்டும். இதில் உள்ள தரவுகள் எளிதில் திருத்தம் மேற்கொள்ளும் வகையினதாக இருக்க வேண்டும். இதன்மூலம், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் ஒரே தளத்தில் இருக்க முடிவதுடன், மருந்து அளவு சரிபார்த்தல் நிகழ்வும் மேற்கொள்ள ஏதுவாக அமைகிறது. மருந்துத் திட்டத்திலும் அவ்வப்போது தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.
மருந்துகளின் நினைவூட்டல்கள்
ஒருவேளைக்கு 2 அல்லது 3 டேப்லெட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், யாருக்கும் எவ்விதக் கவலையும் இருக்காது. ஆனால், தீவிரமான உடல்நலப் பாதிப்பிற்கு, மருந்துத் திட்டமானது இன்றியமையாததாக உள்ளது. இந்த மருந்துத் திட்டமானது, மருந்துகளின் பெயர்கள், அவற்றின் அளவுகள் உள்ளிட்ட நினைவூட்டல்கள் அடங்கியுள்ளன. இதன்மூலம், நோயாளிகள் பெருமளவில் பயனடைவர். அதில் இந்த வேளையில் சாப்பிட வேண்டிய டேப்லெட்டின் வடிவம் உள்ளிட்டவை இடம்பெற்றிருப்பதால், நோயாளி, மருந்து உட்கொள்ளலில் எவ்விதத் தவறையும் செய்யமாட்டார் என்பது திண்ணம்.
இத்தகைய அறிவிப்புகளானது, மருந்துகள் உட்கொள்ளல் நிகழ்வை மட்டும் குறிப்பிடாமல், இருப்பில் உள்ள மருந்துகளின் அளவையும், பயனருக்கு விளக்குகின்றது. மருத்துவப் பணியாளர் வாங்கிய மருந்துகளின் விவரங்களைச் செயலியில் பதிவு செய்ய வேண்டும்.இந்த உள்ளீட்டுத் தரவுகள், மருந்துக் கையிருப்பு தீர்ந்து போகும் தேதியைத் தீர்மானிக்க உதவுகிறது.
மருந்துகள் தொடர்பு கட்டுப்பாட்டாளர்
மருந்துகள் தொடர்பான தகவல் தொடர்பு கட்டுப்படுத்தியானது, பணியாளருக்கு உதவக்கூடிய பயன்பாட்டு நெறிமுறை ஆகும். இது பல்திறன் கொண்ட மருந்துச் செயலியின் ஒரு அங்கமாக இருப்பதால், தகவல்தொடர்பு சரிபார்ப்பு வழிமுறையானது, அதிகப் பயனுள்ளதாக உள்ளது. மருத்துவ அதிகாரி அல்லது பணியாளர், மருந்து அட்டவணையின் தற்போதையப் பட்டியலில், புதிய மருந்துகளைச் சேர்த்தபிறகு, மருந்துகளின் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர், தானாகவே ஒரு சோதனையை மேற்கொண்டு, புதிய மருந்துத் திட்டத்தில் இருந்த மருந்துடன் பொருத்தமற்றதாக இருந்தால், புதிய அறிவிப்பைக் காட்டும்.
மேலும் வாசிக்க : நீரிழிவு மேலாண்மைக்கான வாழ்க்கைமுறை மாற்றங்கள்
மருந்து திருத்தங்கள்
மொபைல் செயலியின் மூலம், மருந்து திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், மருத்துவர் மற்றும் அதன் பணியாளரின் நேரங்களை மிச்சப்படுத்துவதாக அமைகின்றது. மருந்து காலாவதியாகிறது என்ற தானியங்கி நினைவூட்டலைப் பெற்ற பிறகு, மருந்து புதுப்பித்தலுக்கான படிவத்தை நிரப்ப, ஊழியருக்குத் தேவையான உதவிகளை வழங்கும். மருத்துவர், டிஜிட்டல் முறையில் பெறுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்பட்சத்தில் மருத்துவர் அதனைப் பரிசீலனைச் செய்வார். இந்தச் செயலியின் மூலமாக, மருத்துவர்ப் புதுவிதமான பரிந்துரைகளையும் மேற்கொள்ளவும் முடியும்.
மருந்துகளின் விலை
நோயாளி, தனக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அறிந்தபின்னர், அது பக்கத்தில் உள்ள எந்த மருந்துக்கடைகளில் விலை மலிவாகக் கிடைக்கிறது என்பதை ஆராய்வது வழக்கமான நிகழ்வுதான். இந்தத் தேடுதல் அம்சத்தையும், மொபைல் செயலியுடனேயே இணைத்துவிட்டால், அது பயனருக்குப் பேருதவியாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இல்லை.
மருந்துகளை அடையாளம் காணுதல்
அடங்கியுள்ள பகுதிப்பொருட்களின் விவரங்கள் சரியாகப் புலப்படாத மருந்துகள், பெயர், விவரங்கள் என எதுவும் இல்லாத மருந்துகளானது, என்ன வகையான பாதிப்பைக் குணப்படுத்தும் என்பதை மருத்துவரால் அறுதியிட்டுக் கூற இயலாது. இது தவறான விளைவை ஏற்படுத்த கூடும் என்பதால், மருத்துவர்கள், தெளிவற்ற விவரங்கள் கொண்ட மருந்துகளை, நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பது இல்லை.
எளிமையான பயன்பாடு கொண்ட செயலி நோயாளிகளால் விரும்பப்படும்.செயலிக்கு உள்ளேயே, தேடுதல் அம்சமும் இடம்பெறும்பட்சத்தில், பயனர்களின் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகின்றது. ஆனால், இந்த டிஜிட்டல் தரவுகளானது, ஒத்த பண்புகளைக் கொண்ட மருந்து வகைகளையே காட்டுவதாக உள்ளது. இது பயனர்களுக்குத் தெரிந்த சில மருந்துவகைகளையே, திரும்ப திரும்ப காட்டுவதாக உள்ளது.
மொபைல் செயலிகளானது மருந்து உட்கொள்ளல் நிகழ்வுகளில், நோயாளிகளுக்குப் பேருதவி புரிகிறது என்றபோதிலும், மருத்துவர்களின் தகுந்த பரிந்துரையைக் கருத்தில் கொண்டு, சரியான மருந்துமுறைகளைப் பின்பற்றி நல்வாழ்க்கை வாழ்வீராக…