PET ஸ்கேன் vs MRI ஸ்கேன் – வித்தியாசங்கள் இதுதானோ?
நமது உடலில் நிகழும் அசாதாரண மாற்றங்களால் ஏற்படும் நோய்ப் பாதிப்புகளை, படங்கள் மூலம் கண்டறிய மருத்துவர் PET ( பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி) ஸ்கேன் மற்றும் MRI ( காந்த அதிர்வு இமேஜிங்) ஸ்கேன் உள்ளிட்ட முறைகளைப் பரிந்துரைச் செய்கின்றார். உடல் உறுப்பு மற்றும் உள் கட்டமைப்பு பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சந்தேகங்கள் மருத்துவர்களுக்கு ஏற்படும் நிலையில், அவர்களுக்கு இந்தச் சோதனைகள் பேருதவி புரிகின்றன.
PET ஸ்கேன்
உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்ப் புரிந்துக் கொள்ள, ரேடியோடிரேசர் எனப்படும் அணுக்கதிரியக்க வேதியியல் பொருளையும், PET ஸ்கேனர் இயந்திரத்தைப் பயன்படுத்தி படங்களாக எடுக்கும் சோதனை முறையே, PET ஸ்கேன் சோதனை ஆகும்.
PET ஸ்கேன் சோதனைகள் பெரும்பாலும்…
புற்றுநோய் பாதிப்பு மற்றும் அதன் பரவலைக் கண்காணிக்க உதவுகிறது.
மூளையில் ஏற்படும் சேதம் அல்லது கட்டிகள், உள்ளிட்ட குறைபாடுகளை மதிப்பீடு செய்தல்
மாரடைப்பைத் தொடர்ந்து இதயத்தில் நிகழும் சேதத்தைக் கணக்கிடுதல்
கரோனரி தமனி நோயின் பாதிப்பைக் கண்டறியப் பயன்படுகிறது.
பல்வேறு தருணங்களில், PET ஸ்கேன் சோதனை உடன் MRI ஸ்கேனும் எடுக்க, மருத்துவர்கள் பரிந்துரைச் செய்கின்றனர்.
MRI ஸ்கேன்
MRI ஸ்கேன் சோதனை முறையில், நம் உடலுக்குள் செலுத்தப்படும் ரேடியோ அலைகள், உடலில் உள்ள தண்ணீர், கொழுப்பு போன்ற பொருட்களால் பிரதிபலிக்கப்படுகின்றன. பின் இந்த ரேடியோ அலைகளை, குறிப்பிட்ட கருவி, தரவுகளாகப் பதிவு செய்கின்றது. இந்தத் தரவுகள், விளக்கமான படங்களாக மாற்றப்படுகின்றன.
PET ஸ்கேன் சோதனை, உடலின் செல்லார்ந்த நடவடிக்கைகளைப் படமாக வழங்கி வரும் நிலையில், MRI ஸ்கேன், உடல் உறுப்புகள் மற்றும் அதன் வடிவமைப்புகளைப் படங்களாக வழங்குகிறது.
மணிக்கட்டு, கணுக்கால், முழங்கால், முதுகுப் பகுதியில் உள்ள இணைப்புகள்
இரத்த நாளங்கள்
மூளை மற்றும் தண்டுவடம்
வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகள்
மார்பகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிய MRI ஸ்கேன் உதவுகிறது.
இயந்திர ரீதியிலான வேறுபாடு
PET ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் சோதனைகள் வேறுபட்டு இருப்பினும், அவைகள், பெரும்பாலும் PET/ CT அல்லது PET/ MRI கலவையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இதன் செயல்பாடுகள் கிட்டத்தட்ட ஒரேமாதிரியானது ஆகும். PET/ MRI வகையிலான இயந்திரங்களின் விலை அதிகம் என்பதால், PET/ CT வகை இயந்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
செயல்முறை அடிப்படையிலான வேறுபாடு
PET ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் சோதனைகள், PET/ CT அல்லது PET/ MRI போன்ற கலவையிலான இயந்திரத்திலேயே மேற்கொள்ளப்படுவதால், அதன் செயல்முறைகளும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவே உள்ளன.
PET ஸ்கேன் சோதனையில், ரேடியோடிரேசர்ப் பயன்படுத்தப்படுகிறது. ரேடியோடிரேசர் உடலில் உட்செலுத்தப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட 1 மணி நேரம் ஓய்வு நிலையிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், அப்போதுதான், ரேடியோடிரேசர் உடல்முழுவதும் பரவும். பின்னர் ஸ்கேனர் நிறுவப்பட்டு இருக்கும் மேடையில், சோதனை மேற்கொள்ள வேண்டிய நபர்ப் படுக்க வைக்கப்படுவார். ஸ்கேனர், உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயல்பாடுகளைத் துல்லியமாகப் படம் எடுக்கத் துவங்கும். இந்தச் செயல்முறை, நிறைவு பெற 60 முதல் 90 நிமிடங்கள் வரை ஆகும். சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நாம் தொடர்ந்து ஓய்வு நிலையிலேயே இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
MRI ஸ்கேன் சோதனைக்கான கால அளவும் 60 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்களே ஆகும். இந்தச் சோதனையில், ரேடியோடிரேசரின் பயன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. PET/ CT அல்லது PET/ MRI போன்ற கலவையிலான இயந்திரங்களில் எடுக்கப்படும் படங்களைவிட, MRI ஸ்கேன் சோதனையில் எடுக்கப்படும் படங்கள், குறைவான விபரங்களைக் கொண்டதாக உள்ளது.
புற்றுநோய் கண்டறிதலில் வேறுபாடு
புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிதல், சிகிச்சை மேற்கொள்ளல் மற்றும் சிகிச்சைக்குப் பிந்தைய நிலையை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, PET ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் சோதனை முறைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
PET ஸ்கேன், புற்றுநோய் பாதிப்பை, முன்கூட்டியே கண்டறிய மருத்துவர்களால் பரிந்துரைச் செய்யப்படுகின்றது. இந்தச் சோதனையில், நமது உடலின் செலகளிடையே நிகழும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட அத்தியாவசிய நடவடிக்கைகள் மதிப்பிடு செய்யப்படுகின்றன. மருத்துவர்கள், புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிய மட்டுமல்லாது, சிகிச்சை மேற்கொண்ட பிறகான நிலையை அறியவும் PET ஸ்கேன் முறையைப் பரிந்துரைச் செய்கின்றனர்.
MRI ஸ்கேன் சோதனை முறையானது, உடலில் உள்ள மென் திசுக்களைப் பல்வேறுக் கோணங்களில் தெளிவான படங்களைப் பிடித்துத் தருகிறது. இது மருத்துவர்கள், புற்றுநோய்க் கட்டிகள் எங்கு வியாபித்து உள்ளதை என்பதைத் தெளிவாக அறிய உதவுகிறது. PET ஸ்கேன் முறையைப் போன்றே, MRI ஸ்கேன் சோதனை முறையும், புற்றுநோய்க் கட்டிகள் பரவல் மற்றும் மேற்கொண்ட சிகிச்சைப் பலனளிக்கிறதா என்பதைக் கண்டறிய உதவுகிறது.
மேலும் வாசிக்க : PET ஸ்கேன் சோதனை சிறந்தது ஏன்?
செலவுரீதியிலான வேறுபாடு
நோயாளியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்த வகையான சோதனைகள் மேற்கொள்ள வேண்டும், அந்தச் சோதனைகளுக்கு அவர்களைத் தயார்ச் செய்யும் விதம் உள்ளிட்ட விவகாரங்களில் வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், அதற்கான கட்டண விகிதத்திலும் மாறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. MRI ஸ்கேன் முறையை ஒப்பிடும்போது, PET ஸ்கேன் முறை, கூடுதல் கட்டணம் தான் ஆகும்.
எந்தச் சோதனை உகந்தது?
நோயாளிக்கு எந்தச் சோதனை உகந்தது என்பதை, மருத்துவர், நோயாளி அப்போது இருக்கும் நிலையைக் கொண்டு முடிவு செய்வார். நோயாளியின் உடலின் அன்றாட செயல்படுகளான ரத்த ஓட்டம், ஆக்சிஜனேற்றம், வளர்சிதை மாற்ற நிகழ்வுகளை அறிய PET ஸ்கேன் முறையையும், இல்லையெனில், உடல் உறுப்புகளின் வடிவம், ஆரோக்கியமான அல்லது புற்றுநோய் பாதிப்பிறகு உள்ளான செல்களை இனங்கண்டறிய MRI ஸ்கேன் முறையையும், மருத்துவர்ப் பரிந்துரைச் செய்வார்.
நோயாளிக்கு இவ்விரு சோதனைகளும் தேவைப்படும்பட்சத்தில், ஒரே நேரத்தில் இரண்டு சோதனைகளையும் மேற்கொள்ள முடியும்.
நோயாளியின் நிலையைப் பொறுத்து, PET ஸ்கேன் அல்லது MRI ஸ்கேன் சோதனையை மேற்கொண்டு, நோயின் பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெற ஒத்துழைப்போம்.