உடற்தகுதி இலக்குகளை அடைந்தவர்களின் கதைகள்
உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க, சிறந்ததொரு பழக்கமாக, உடற்பயிற்சிகள் திகழ்ந்து வருகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க, தினசரி உடற்பயிற்சி அவசியம் என்று பலர் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.உடற்பயிற்சி, உடலுக்கும், மனதிற்கும் நன்மை அளிக்கவல்ல இனிய அனுபவமாக விளங்கி வருகிறது.
உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது, அது உங்கள் கவனம் மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சிப் பழக்கமானது, உடலின் உடற்செயலியல், உடற்கூறியல், செயல்பாட்டை மேம்படுத்துகிறது. யோகாப்பயிற்சியானது, மன ஆரோக்கியத்திற்கும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆயுளையும் அதிகரிக்கிறது.உடல் எடை மேலாண்மையில், உடற்பயிற்சிப் பழக்கமானது முக்கியப்பங்கு வகிக்கின்றது.
இந்தக் கட்டுரையில், உடற்பயிற்சியின் மூலம், உடல் எடையை வெகுவாகக் குறைத்த சிலரின் அனுபவங்களைப் பார்ப்போம்.
8 மாதங்களில் 40 கிலோ எடையைக் குறைத்த மருத்துவர்
மகப்பேறியல் மற்றும் பெண்கள் நல மருத்துவரான தர்ஷன், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
நான் சிறுவயதில் இருந்தே, அதிக உடல் எடையுடன் தான் இருந்தேன். படிப்பிலேயே அதிகக் கவனம் செலுத்தி வந்ததால், விளையாட்டு, உடற்பயிற்சி பழக்கங்களில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இதன்காரணமாகவே, 24 வயதிலேயே, 112 என்ற அளவிற்கு உடல் எடை அதிகரித்தது. 29 வயதில், இந்த எடை 117 ஆக அதிகரித்தது. பின் மருத்துவர் ஆனபிறகே, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டேன். இதனைத் தொடர்ந்து, உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் ஈடுபடத் திட்டமிட்டேன்.
பரபரப்பான மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையால், என்னால் ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்பதை அறிந்தேன்.
நண்பரின் உதவியுடன், உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கினேன். அவரின் ஆலோசனைப்படி, முன்னணி உடற்பயிற்சி நிறுவனத்தில் இணைந்து, உடல் எடையைக் குறைக்கும் பயிற்சியில் கடுமையாக ஈடுபட்டேன்.
8 மாதங்களில் கிட்டத்தட்ட 40 கிலோ அளவிற்கு உடல் எடையைக் குறைத்து உள்ளேன். என் இடுப்பு அளவு 40 அங்குலம் என்ற அளவில் இருந்து 31 அங்குலம் என்ற அளவிற்குக் குறைத்து உள்ளேன். உடலின் கொழுப்பு அளவை 23 சதவீத அளவிற்குக் குறைத்து உள்ளேன். உடல் எடையைக் கணிசமாகக் குறைத்ததன் மூலம், உடலின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து உள்ளது. என்னால் இப்போது எந்தவொரு வேலையையும் மிக விரைவாகச் செய்ய முடிவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
உடல் எடையைக் குறைக்க உதவிய காரணிகளாகத் தர்ஷன் குறிப்பிட்டு உள்ளதாவது
குறைவான அளவிலான கலோரிகள் இருந்தபோதிலும், முழுமையான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுமுறை
போதுமான அளவிலான புரதத்தை எடுத்துக் கொள்ளுதல்
குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள்
அதிக நார்ச்சத்துக் கொண்ட உணவு வகைகள்
வெவ்வேறு வகையான உடற்பயிற்சிகள்
3 மாதங்களில் 12 கிலோ அளவிற்கு எடையைக் குறைத்த கல்லூரி மாணவி
கல்லூரி மாணவியான வெர்திகா சிங், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
நான் பள்ளி நாட்களின் போது துருதுருவென்றும், எப்போதும் ஆக்டிவ் ஆகவே இருப்பேன். அப்போதுதான் எனக்குத் தைராய்டு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சோதனைச் செய்ததில் ஹைப்போதைராய்டிசம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அப்போதிலிருந்து என் உடல் எடைத் தாறுமாறாக உயர ஆரம்பித்தது. மற்றவர்களின் மத்தியில், நான் மிகவும் குண்டாகத் தெரியத் துவங்கினேன். உடற்பருமனின் காரணமாக, எப்போதும் சோர்வாகவே காணப்பட்டேன். எனது வேகம் பாதியாகக் குறைந்தது. எந்த வேலையைச் செய்யவும் பிடிக்கவில்லை. அப்போதுதான் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் வந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்கத் திட்டமிட்டேன்.
இந்த நிலையில், எனது பெஸ்ட் பிஃரெண்டின் ஆலோசனையின் பேரில், முன்னணி உடற்பயிற்சி செயலி குறித்து அறிந்து கொண்டேன். 68 கிலோ எடையைக் குறைத்து மீண்டும் பழைய நிலைக்கு வருவேனா என்பதில் எனக்குக் குழப்பமே மிஞ்சியது. இருந்தபோதிலும், சரி என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அந்தச் செயலியில் உள்ள ஸ்மார்ட் பிளானில் இணைந்தேன்.
ஸ்மார்ட் பிளான் திட்டத்தில், முதன்மையானதாக உணவுக் கட்டுப்பாடே இருந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் 8 முதல் 9 கிளாஸ் நீர் அருந்த அறிவுறுத்தப்பட்டு இருந்தது. செயலியில் நீர் அருந்துவதைக் கண்காணிக்கும் வசதி இருந்ததால், அது எளிதாக இருந்தது.
வளர்சிதை மாற்றத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் தெளிவாக விளக்கினர்.அதனால், தினமும் காலைவேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளத் துவங்கினேன். உடல் எடையைக் குறைப்பது என்பது முதன்மையான நோக்கம் என்றபோதிலும், இதய நலன் மற்றும் உடல் வலிமையிலும் போதிய கவனம் செலுத்த துவங்கினேன்.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப, உடல் எடையைக் குறைக்க முயன்ற எனக்கு, இந்த ஸ்மார்ட் பிளான், இனிய வரப்பிரசாதமாக அமைந்தது என்றே கூற வேண்டும். எனது அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் அது கண்காணித்து, எனக்கு எது தேவையோ, அதை மட்டும் எனக்குப் பரிந்துரைச் செய்து வந்தது.
இந்தச் செயலியில் குறிப்பிடப்பட்டு இருந்தவைகளைப் பார்த்தபிறகு தான், உடலுக்குத் தீமை விளைவிக்கும் வகையிலான பழக்கவழக்கங்களை, நான் தொடர்ந்து மேற்கொண்டு வந்ததை அறிந்து கொண்டேன்.
அந்தச் செயலியின் உதவியுடன் 3 மாதங்களில் 12 கிலோ அளவிலான உடல் எடையைக் குறைத்து, தற்போது சிக் என்று இளமையுடன் இருக்கின்றேன்.
மேலும் வாசிக்க : உடல் வலிமையை அதிகரிக்க உதவும் பயிற்சி உபகரணங்கள்
37 கிலோ அளவிற்கு உடல் எடையைக் குறைத்த மார்க்கெட்டிங் மேன்
உடல் எடையை 37 கிலோ அளவிற்குக் குறைத்த நிதேஷ் காந்தி, தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
எனது பள்ளிப்பருவத்தில் இருந்தே, அதாவது எனது 14 அல்லது 15 வயதில் இருந்தே, எனது உடல் எடைக் கணிசமாக அதிகரிக்கத் துவங்கியது. இந்த உடல் எடை அதிகரிப்பிற்கு, நான் மேற்கொண்ட தவறான உணவுமுறைதான் என்பதை, இப்போதுதான் அறிந்து கொண்டேன். ஊட்டச்ச்சத்து விழிப்புணர்வு குறித்து எங்கள் வீட்டில் யாரும் அறியாததால், அதை அவர்கள் எனக்கும் போதிக்கவில்லை. நான் இளைஞன் ஆனபிறகே, என்னுடைய இந்தத் தவறான வாழ்க்கைமுறையில் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறத் திட்டமிட்டேன்.
நான் வெளியிடங்களுக்குச் செல்லும்போது, என் வயதை ஒத்தவர்களைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்படுவேன். அவர்கள் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்த்துப் பொறாமைப்படுவேன். அவர்களைப் பார்த்த பிறகு, நானும் அவர்களைப் போல் இளமையாக மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் களத்தில் இறங்கினேன்.
அப்படி நான் தேடிக்கொண்டு இருந்தபோது தான், முன்னணி உடற்பயிற்சி நிறுவனத்தின் செயலியின் அறிமுகம் கிடைத்தது. அந்தச் செயலியின் வழிகாட்டுதலின்படி கடுமையாகப் பயிற்சிகளில் ஈடுபட்டேன். ஒன்றரை ஆண்டுகளில் உடல் எடையை 105 கிலோ என்ற அளவில் இருந்து 68 கிலோ ஆகக் குறைத்தேன். உடல் எடையைக் குறைத்த உடனே, நான் மிகவும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தேன். பின்னர்த் தசைகளின் எடையை அதிகரிக்கத் திட்டமிட்டு, தற்போது எனது உடல் எடை 78 கிலோவாக உள்ளது.
எனது உடல் எடையைக் குறைத்து, நானும் மற்றவர்களைப் போல, சுறுசுறுப்பாக இயங்கி வருவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
இந்தச் செயலியில் எனைக்கவர்ந்த அம்சங்களை, நான் இங்கே குறிப்பிட ஆசைப்படுகிறேன்.
இந்தியாவில் உள்ள எல்லா வகை உணவுகளுக்குமான கலோரியைக் கண்காணிக்கும் வசதி
நாம் உண்ணும் உணவில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு உள்ளிட்டவைகளின் அளவுகள்
நீர் அருந்துதலைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் தங்களின் உடற்தகுதி இலக்கை எட்டிப்பிடித்த வெற்றியாளர்களின் கதைகளைக் கேட்டீர்கள் அல்லவா? உங்களுக்கும் இதுபோன்று சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு உள்ளதா? உடனே உடற்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் விருப்பப்பட்டால், முன்னணி உடற்பயிற்சி நிறுவனங்களின் உதவியையும் நாடலாம், அதில் ஒன்றும் தப்பில்லை.
இலக்கு நமதே…. வெற்றியும் நமதே!!!!!