மனம், உடல் ஆரோக்கியத்திற்கான அணுகுமுறை
ஆரோக்கியம் என்பது, பல்வேறு அம்சங்களின் ஒருங்கிணைப்பாக உள்ளது. ஆரோக்கியத்திற்கான நமது முயற்சியில், உடல் ஆரோக்கியத்தைவிட, உண்மையான நல்வாழ்வைத்தான் நாம் அங்கீகரிக்க வேண்டும். சீரான, நிறைவான வாழ்க்கைக்கு நம் உடல், மனம், ஆவி ஆகியவை ஒன்றிணைந்திருக்க வேண்டும்.இந்த மூன்று அம்சங்களை வளர்ப்பதன் மூலமாகவே, ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை என்பது சாத்தியமாகின்றது. இது ஆழமான நிறைவு உணர்விற்கு வழிவகுக்கிறது.
உடல்நல ஆரோக்கியத்திற்கு, நிலைத்தன்மை,நெகிழ்வுத்தன்மை மற்றும் நோய்கள் தடுப்பு முறைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும். முழுமையான ஆரோக்கியத்திற்கான அம்சங்கள் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மனம் சார்ந்த நல்வாழ்வு
இது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. மற்றவர்களுடன் நீங்கள் மேற்கொள்ளும் தொடர்புகளை உள்ளடக்கியதாக இது உள்ளது.
சமூகம் சார்ந்த நல்வாழ்வு
நல்வாழ்வின் முக்கிய அம்சமாக, சமூக ஆதரவானது விளங்கி வருகிறது. இதில், நீங்கள் மற்றவர்களுடன் நீங்கள் வைத்திருக்கும் தொடர்பு, நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம், மற்றவர்களுடனான பிணைப்பு உருவாக்கம் உள்ளிட்டவைகளை உள்ளடக்கி உள்ளது.
உடல் ஆரோக்கியம்
நல்வாழ்க்கையின் அடித்தளமாக, உடல் ஆரோக்கியமானது விளங்கி வருகிறது. உடல் ஆரோக்கியத்திற்குத் துணைபுரியும் காரணிகளாவன..
சரிவிகித ஊட்டச்சத்து முறை
முழுத்தானியங்கள், பழ வகைகள், காய்கறிகள், புரதங்கள் நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கிய உணவுமுறையே, சரிவிகித ஊட்டச்சத்து அல்லது உணவுமுறையாக வரையறுக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள்
நடைப்பயிற்சி, மிதநடை, யோகா அல்லது நடனம் உள்ளிட்ட உடற்பயிற்சிகளானது, உடலின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கின்றது.
போதிய அளவிலான ஓய்வு மற்றும் உறக்கம்
உங்கள் உடல் நோய்ப்பாதிப்பில் இருந்து குணம் பெறவும், உடல் புத்துயிர்ப் பெறவும் மற்றும் அது தன்னுடைய இயற்கையான சமநிலையை மீட்டெடுக்க, போதிய அளவிலான ஓய்வு மற்றும் நிம்மதியான உறக்கம் அவசியமாகின்றது.
உடல்நலப் பரிசோதனைகள்
நோய்ப்பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய உதவும் உடல்நலப் பரிசோதனைகள், ஸ்கிரீனிங் நிகழ்வுகள், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளின் மூலம், உடல் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படுகிறது.
சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகள்
உடல்நல மேம்பாடு, மன அழுத்தம் குறைக்க மற்றும் உடல் தளர்வை அதிகரிக்க மசாஜ் மேற்கொள்ளுதல், வெந்நீரில் குளியல் போடுதல், மனநிறைவைத் தரும் வகையிலான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட சுயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
மன ஆரோக்கியம்
ஆரோக்கியமான நல்வாழ்வு உள்ளிட்ட ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, மன ஆரோக்கியம் இன்றியமையாததாகும்.
நினைவாற்றல் மற்றும் தியானம்
மன அழுத்தத்தைக் குறைத்து, அமைதி மற்றும் தெளிவை உருவாக்க நினைவாற்றல் மற்றும் தியானம் உதவுகின்றன.
மன அழுத்த மேலாண்மை
மகிழ்ச்சியான செயல்கள், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் போன்றவை மன அழுத்த மேலாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
தொடர்ச்சியான கற்றல்
புதிய திறனைக் கற்றுக்கொள்ள வாசித்தல் நிகழ்வானது முக்கியப்பங்கு வகிக்கிறது. மனதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட வேண்டும்.
உள்மன ஆரோக்கியம்
மன அமைதியை வளர்ப்பதன் மூலம் உள்மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இயலும்.
மேலும் வாசிக்க : CBT நுட்பம் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துமா?
நன்றியுணர்வு
சுயப் பிரதிபலிப்பிற்கு நேரம் தவறாது ஒதுக்குங்கள், உங்கள் வாழ்க்கையில் கிட்டும் பாராட்டுகளுக்கு நன்றியைத் தெரிவியுங்கள். தினசரி நன்றியுணர்வை வளர்க்கும் வகையிலான நடைமுறைகளில் ஈடுபடுங்கள்
இயற்கையுடனான தொடர்பு
இயற்கையை நேசிக்க நேரம் ஒதுக்குங்கள். அழகைப் பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்,
மனம் உடல் சார்ந்த நடைமுறைகள்
உடலுக்கும், மனதுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையிலும், மன அமைதி மற்றும் நல்வாழ்வின் உணர்வை வளர்க்க யோகா, டைய் சி உள்ளிட்ட மனம் – உடல் நடைமுறைகளை ஆராய வேண்டும்.
ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறை என்பது உடல், மனம், ஆவி ஒன்றோடொன்று இணைந்து இருப்பதை அங்கீகரிக்கிறது. இந்த மூன்று அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், நம் வாழ்வில் சமநிலை, நல்லிணக்கம், நிறைவு உணர்வை வளர்க்கின்றது. முழுமையான ஆரோக்கியம் என்பது பயணம் போன்றது ஆகும். இதற்குக் காத்திருப்பு என்பது மிகவும் இன்றியமையாததாகும்.
மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான முழுமையான அணுகுமுறையைக் கவனமாகக் கையாண்டு, மேம்பட்ட நல்வாழ்க்கை வாழ்வோமாக…