நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுமுறைகள்
நீரிழிவுப் பாதிப்பு என்பது, தற்போதைய நிலையில், பெரும்பாலானோருக்குக் காணப்படும் வாழ்க்கைமுறை நோய்ப் பாதிப்பாக உள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துக் காணப்படும் நிலையையே நீரிழிவுப்பாதிப்பு என்று வரையறுக்கிறோம். கண்பார்வைக் குறைதல், தாக உணர்வு அதிகரிப்பு, அடிக்கடி சிறுநீர்க் கழித்தல், உடல் எடைத் திடீரென்று குறைதல் உள்ளிட்டவை நீரழிவுப் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
உடல் எடை நிர்வகிப்பு, சுறுசுறுப்பான வாழ்க்கை, ஆரோக்கியமான உணவுமுறைகள் ஆகியவற்றின் மூலம் நீரிழிவைக் கட்டுப்படுத்த முடியும்.நீரிழிவு நோயாளிகள் சரியான உணவு அட்டவணையைப் பின்பற்றி நோயின் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவுமுறையைப் பின்பற்றுவதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
நீரிழிவுப் பாதிப்பானது முதலாம் வகை நீரிழிவுப் பாதிப்பு மற்றும் இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு என 2 வகைகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வகையாக முதலாம் வகை நீரிழிவு பாதிப்பு உள்ளது. இந்த வகைப் பாதிப்பு உடையவர்களின், கணையம், இன்சுலினைச் சுரக்கும் திறன் இழந்துவிடுகிறது. இரண்டாம் வகை நீரிழிவு பாதிப்பு உடையவர்களுக்கு, கணையமானது, போதிய அளவிலான இன்சுலினைச் சுரப்பதில்லை.
நீரிழிவுப் பாதிப்பிற்கு உணவுமுறை ஏன் முக்கியம்?
நீரிழிவு நோய்ப்பாதிப்பிற்கான பிரத்யேக உணவுத்திட்டமானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. என்ன வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும், நாளொன்றுக்கு, எத்தனைச் சதவீதம் ஊட்டச்சத்துத் தேவை என்பதைத் தீர்மானிக்க, உணவுத்திட்டம் உதவுகிறது. திறமையான உணவுத்திட்டமிடலின் அடிப்படியில், உணவுத்திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.
சரிவிகித உணவுமுறையை அமைக்கும் நோக்கில், அத்தியாவசிய தேவைகளைப் புறக்கணித்துவிடக் கூடாது.
தினசரி அடிப்படையிலான உணவுமுறையை, சரியான அளவிற்குப் பராமரிக்க வேண்டும்.
சரிவிகித உணவுத் திட்டமானது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
இந்த உணவுத்திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம், இதய நோய்பாதிப்பு தொடர்பான சிக்கல்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
நினைவிற்கொள்ள வேண்டியவை
நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையிலான உணவுத்திட்டத்தை உருவாக்குவதற்கு, சரியான திட்டமிடலே அவசியமாகிறது. உணவு அட்டவணையைக் கவனமாகப் பின்பற்றவும். இந்த உணவுத்திட்டத்துடன், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் நேரத்தையும் ஒருங்கிணைப்பதும் அவசியம் ஆகும்.
நீரிழிவுப்பாதிப்பைக் கட்டுப்படுத்தவல்ல உணவுமுறையைத் திட்டமிடுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்
பிளேட் முறையைப் பின்பற்றவும்
புரதம் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறி வகைகளை, உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வதன் மூலம், கார்போஹைட்ரேட் குறைவாக உட்கொள்வதை உறுதிப்படுத்துகிறது. உணவுமுறையில் மாவுச்சத்து இல்லாத காய்கறி வகைகளான சாலட், புரோக்கோலி, முட்டைக்கோஸ், கேரட் உள்ளிட்டவைகளை 50 சதவீத அளவிலும், மாவுச்சத்து கொண்ட உணவுவகைகளான சோளம், முழுத் தானியங்கள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை 25 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கலோரிகள் குறைவான அளவில் உள்ள பானங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பகுதி அளவாகப் பின்பற்றவும்
கார்போஹைட்ரேட் உணவு வகைகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உயர்த்திவிடும் என்பதால், இவ்வகை உணவுகளை ஒரே முறையாக எடுத்துக் கொள்ளாமல், பகுதி அளவாகச் சிறிது சிறிதாக எடுத்துக்கொள்வது நல்லது.
கிளைசீமிக் அளவை அறிதல்
கிளைசீமிக் குறியீடானது, GI என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் திறனின் அடிப்படையில், உணவுப்பொருளுக்கு ஒதுக்கப்பட்ட மதிப்பு ஆகும்.
நீரிழிவு உணவுத் திட்டத்தில் இடம்பெற வேண்டிய உணவுகள்
வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
கீரை உள்ளிட்ட காய்கறிகளை அன்றாட உணவில் சேர்ப்பதால், முழுமையான ஊட்டச்சத்துகளும் குறைவான கலோரிகளும் கிடைக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் வகைகள், இதய ஆரோக்கியத்திற்கு உகந்ததாக உள்ளது.
அதிகக் கொழுப்பு மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட முட்டைகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட கொட்டை உணவு வகைகள், இதயத்தில் நல்ல கொழுப்பின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.
முழுத்தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட பால்பொருட்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
வெள்ளைப்பூண்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கிறது.
குறைந்த அளவிலான கிளைசீமிக் மதிப்பு கொண்ட பீன்ஸ் வகைகள், நாள்முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
வெள்ளை ரொட்டி மற்றும் அரிசி
சர்க்கரை அதிகம் கொண்ட பானங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்
இனிப்புச்சுவை நிறைந்த உணவுகள்
கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் ஊறுகாய் வகைகள்
டின்களில் அடைக்கப்பட்ட பழங்கள், ஜாம் மற்றும் ஜெல்லிகள்
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள்
உள்ளிட்ட உணவுவகைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : இரத்த அழுத்த சோதனையின் அடிப்படை இதுதானோ?
எவ்வித உணவுமுறையானது சிறந்த பலனை அளிக்கிறது?
சமீபகாலமாக, உணவுமுறைகளில் பெரிய அளவிலான மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளன. சிலவகை உணவுமுறைகள், நீரிழிவு நோய்ப்பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.
வேகன் உணவுமுறை
இது வழக்கமான சைவ உணவுமுறையிலிருந்து சிறிது வேறுபட்டுக் காணப்படுகிறது. வேகன் உணவுமுறையில், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால் உள்ளிட்டவைகள் கூட பயன்படுத்தப்படுவதில்லை. இந்த உணவுமுறையானது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதுடன், உடல் எடைப் பராமரிப்பிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
பேலியோ உணவுமுறை
இந்த உணவுமுறையில், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் கடுகளவுக்குக் கூட இடம்பெறுவதில்லை. புரதங்கள், நல்ல மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள், தாவர உணவுகள் உள்ளிட்டவைகளே, இதில் இடம்பெற்று உள்ளன. இவ்வகை உணவுமுறையானது, கிளைசீமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
பச்சையம் இல்லாத உணவுமுறை
இவ்வகை உணவுமுறையானது, உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைச் சரியான அளவில் கிடைக்க வழிவகைச் செய்கிறது.
DASH உணவுமுறை
இந்த உணவுமுறையின் முக்கியப் பகுதிப்பொருட்களாக, ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான உணவு வகைகள் அடங்கி உள்ளன.
நீரிழிவுப் பாதிப்பைக் குறைக்கவல்ல இந்திய உணவு அட்டவணை
காலம் | நேரம் | உணவுவகைகள் |
காலை உணவு | காலை 8 – 9 மணி | காய்கறி உப்புமா மற்றும் ஏதாவது ஒரு பானம் |
முற்பகல்; ஸ்னாக்ஸ் | முற்பகல் 11 மணி | அந்தந்த சீசன்களில் கிடைக்கும் ஆப்பிள், கொய்யா, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகல் |
மதிய உணவு | பகல் 1 – 2 மணி | 2 சப்பாத்திகள், ஒரு கோப்பை அரிசி சாதம், ஒரு கோப்பைக் காய்கறி / அசைவ கறி, பருப்பு, சாலட், தயிர் வெங்காயம் |
தேநீர் நேரம் | மாலை 4 மணி | வறுத்த பட்டாணி அல்லது முளைகட்டிய தானியங்களுடன் பிளாக் அல்லது கிரீன் டீ |
மாலை ஸ்னாக்ஸ் | இரவு 7 மணி | ஒரு கோப்பைச் சைவ அல்லது அசைவ சூப் |
இரவு உணவு | இரவு 8 -9 மணி | 2 சப்பாத்திகள், ஒரு கோப்பை அரிசி சாதம், ஒரு கோப்பைக் காய்கறிகள், பருப்பு மற்றும் சாலட் |
உறங்கச் செல்வதற்கு முன் | இரவு 10 மணி | ஒரு கிளாஸ் மஞ்சள்தூள் கலந்த பால் |
இந்த உணவுமுறையைக் கவனமாகப் பின்பற்றி, நீரிழிவுப் பாதிப்பினைத் தவிர்த்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…