அலர்ஜி பாதிப்பு இருக்கா – இந்த உணவுத்திட்டம் தான் பெஸ்ட்!
ஒவ்வாமை அல்லது அலர்ஜி என்பது நோய் எதிர்ப்பு அமைப்பின் மிகை எதிர்வினையால் ஏற்படும் குறைபாடு ஆகும்.தோல், சுவாசப்பாதை, இரைப்பைக் குடல் பகுதி ஆகியவற்றில் ஏற்படும் அலர்ஜிகள் இன்று பொதுவாகிவிட்டன. சர்வதேச மக்கள்தொகையில், 21 சதவீதம் பேருக்கு, ஒவ்வாமைப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஒவ்வாமைப் பாதிப்பிற்குச் சிகிச்சைமுறை அவசியம் என்றபோதிலும், உணவுக்கட்டுப்பாடும், முக்கியப்பங்கு வகிக்கிறது.
குழந்தைகளுக்கு, தவறான திட உணவைத் தருவதன் மூலம் ஒவ்வாமைப் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்தப் பாதிப்பு, ஆஸ்துமாவாக மாறவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வாமைப் பாதிப்பைச் சரிசெய்யக் குறைந்த ஹிஸ்டமின்கள் கொண்ட உணவு வகைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
ஹிஸ்டமைன் சகிப்பின்மை, வீக்கம், தோல் வெடிப்பு உள்ளிட்டவை, ஒவ்வாமைப் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள் ஆகும். உடலில் அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலான நச்சுக்கள் குவிவதன் மூலம், வாதம், பித்தம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
உணவு ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அரிசி, பச்சையம் இல்லாத தானிய வகைகள், தேங்காய் பால், பாதாம் பால், மரபணு மாற்றம் செய்யப்படாத காய்கறிகள், பால் மாற்றுகளாக, குறைந்த ஹிஸ்டமைன் கொண்ட உணவு வகைகளைப் பரிந்துரைச் செய்ய வேண்டும். வயிற்றின் pH 2 முதல் 3.5 வரை இருந்தாலும், அமிலத்தன்மைக் குறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.ஆரோக்கியமான, எளிதில் செரிமானம் ஆகும் வகையிலான உணவு வகைகள், உணவு ஒவ்வாமைப் பாதிப்பிற்குச் சிறந்த மாற்றுச் சிகிச்சையாக விளங்குகிறது.
உணவு ஒவ்வாமைப் பாதிப்பு உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
லாக்டோஸ் இல்லாத பால்
அரிசி கழுவிய நீர்
எளிதில் செரிமானம் அடையக்கூடிய உணவுகள்
குறைந்த அளவிலான உணவு உட்கொள்ளல்
அதிக நார்ச்சத்துக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள்
உப்பு சேர்க்கப்படாத சாலட் எடுத்துக் கொள்ளவும்
கேழ்வரகு, முழு சோளம், தினை, பச்சையம் இல்லாத ஓட்ஸ் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
தினமும் ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழச்சாறுகளை அருந்துங்கள்
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
பால் மற்றும் பால் பொருட்கள்
பசுவின் பால், தயிர், மோர், பாலாடைக்கட்டி
இறைச்சி வகைகள்
மாட்டிறைச்சி, கோழி, மட்டன், பன்றி இறைச்சி, ஆல்புமின் எனப்படும் முட்டையின் வெள்ளைத் திரவம், முட்டையின் மஞ்சள் கரு, வாத்து முட்டை, வான்கோழி
தானியங்கள்
பார்லி, கிளையாடின் வகைக் கோதுமை, ஓட்ஸ், கம்பு, முழுக் கோதுமை
கடல் உணவுகள்
இறால், நண்டு, சாலமன் மீன், டுனா மீன், சிவப்பு ஸ்னாப்பர்
காய்கறிகள்
அவகேடோ, பூண்டு, காளான், கீரை, தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், குடை மிளகாய்
கொட்டைகள்
வேர்க்கடலை, எள் முந்திரி, பிஸ்தா பருப்பு
பருப்பு வகைகள்
பச்சைப் பட்டாணி, அவரை, பயறு, சோயா பீன்ஸ், கொண்டைக்கடலை
பழ வகைகள்
வாழைப்பழம், சிவப்பு திராட்சை, எலுமிச்சை, ஆரஞ்சு, பப்பாளி, அன்னாசி, பிளம்ஸ் பழம்
இதர உணவுகள்
காபிக் கொட்டை, கோக்கோ சாக்லேட், தேன், பேக்கரியில் பயன்படுத்தப்படும்
ஈஸ்ட், மதுபான தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஈஸ்ட், கரும்பு
போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : நீரிழிவு நோய்க்கான தனிப்பட்ட ஊட்டச்சத்துமுறை
ஒவ்வாமைப் பாதிப்பு உள்ளவர்களுக்கான உணவு அட்டவணை
ஒவ்வாமை நோயாளிகள் பின்வரும் உணவுத் திட்டத்தைப் பின்பற்றி, பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் நிகழ்விற்குப் பிறகு
மூலிகை டீ / வெதுவெதுப்பான நீர் / சோற்றுக்கற்றாழைச் சாறு
காலை உணவு
சைவ ஓட்ஸ்/ சேமியா, சைவ போஹா / சைவ உப்புமா / காய்கறி அல்லது பருப்புடன் சப்பாத்தி
முற்பகல்
பழம் / கிரீன் டீ / சாலட்/ மூலிகை டீ / இளநீர்
மதிய உணவு
வேகவைத்த அரிசி / சாலட் உடன் சப்பாத்தி / பருப்பு உடன் காய்கறி
மாலை
சாலட் / வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப் / கிரீன் டீ
இரவு உணவு
சப்பாத்தி / புழுங்கல் அரிசி சாதம் / பருப்பு உடன் காய்கறி
ஒவ்வாமைப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் தரும் அறிவுரைகள்
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
பழங்களை, சாறு பிழியாமல் முழுவதுமாக உட்கொள்ள வேண்டும்எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. குறிப்பாக, காலை உணவை, எத்தருணத்திலும் தவிர்க்கக் கூடாது.
தினமும் 8 முதல் 10 கிளாஸ் நீர் அருந்த வேண்டும்
சுகாதார நடவடிக்கைகளில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது
தினமும் இரண்டு முறை மூலிகை டீ குடிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்டு உள்ள உணவுமுறைகளைக் கவனமாகப் பின்பற்றி, ஒவ்வாமைப் பாதிப்பைத் தவிர்த்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வீராக…