இயற்கை vs சப்ளிமெண்ட் உணவுமுறை – எது பெஸ்ட்?
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மக்களுக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாது உட்கொள்ளும் உணவுமுறைத் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளன. இரசாயன உணவைத் தவிர்த்து, சரியான ஊட்டச்சத்துகளுடன் கூடிய இயற்கை உணவுமுறையால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம்.
நாம் உடல்நலப் பாதிப்புகளுக்கு உட்கொள்ளும் மருந்துகள் சிகிச்சையளிக்கும் அதே வேளையில், அவற்றின் வேதிப்பொருட்கள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.அதேபோன்றுதான், வேதிப்பொருட்கள் அடிப்படையிலான துணை உணவு வகைகளும், உடல்நலத்தைப் பாதிக்கும் வகையிலேயே உள்ளன. இயற்கை மற்றும் சப்ளிமென்ட் உணவுமுறைக்கு இடையேயான வித்தியாசத்தை உணர்ந்துகொள்வது அவசியமாகும். இத்தகைய உணவுமுறைகளானது, உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து செயல்படுவது முக்கியம்.
இயற்கையான உணவுமுறையில் இடம்பெற்று உள்ள உணவுவகைகள் பெரும்பாலும் தாவரங்களில் இருந்து பெறப்பட்டவையாகவே உள்ளன. அவைகள் காய்கறிகள் மற்றும் பழ வகைகளாக உள்ளன. இந்த உணவு வகைகளில், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதோடு வைட்டமின் C, இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்டவைகளும் அதிகளவில் உள்ளன. உதாரணமாக, 100 கிராம் அளவிலான நெல்லிக்கனியில், 600 மில்லிகிராம் அளவில் வைட்டமின் C உள்ளது.
நீங்கள் நெல்லிக்காயை 80 நிமிடங்கள் கொதிக்க வைத்தாலும், அதில் உள்ள வைட்டமின் C சத்து நிலைகுலையாமல் அப்படியே இருக்கும்.வைட்டமின் C யானது , செரிமானத்தை மேம்படுத்தவும், கல்லீரல் ஆரோக்கியமாக இயங்கவும் பேருதவி புரிகிறது. நீரிழிவுப்பாதிப்பின் துவக்க நிலைகளில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்தானது, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
உணவியல் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படும் சப்ளிமெண்ட் உணவில், வைட்டமின் C மட்டுமே உள்ள நிலையில், அவைகளால் இத்தகைய நன்மைகளை நமக்கு அளிக்க முடிவதில்லை. முழுமையான உணவுகளில், நமது உடலுக்குத் தேவைப்படும் அளவைவிட, மிக அதிகமான அளவிலேயே நுண் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை, திசுக்கள் சேதம் அடைவதில் இருந்து காக்கின்றன. முழுத் தானியங்களில் உள்ள இயற்கையான நார்ச்சத்தானது, மலச்சிக்கல் பாதிப்பைக் குறைப்பதோடு, பெருங்குடல் மற்றும் மலக்குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்ப் பாதிப்பைக் குறைப்பதாக உள்ளன. இவ்வகை உணவுகள், இதய நோய்ப்பாதிப்புகள், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பைத் தடுக்க உதவுகின்றன.
சப்ளிமெண்ட்ஸ்கள் எனப்படுபவை, மக்களின் உணவுத்தேவைகளின் இடைவெளிகளை நிரப்ப, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் ஆகும். அவைகள் வைட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள், புரோபயாடிக்குகள் ஆகும். சப்ளிமெண்ட் உணவு வகைகள் கேப்ஸ்யூல். டேப்லெட் உள்ளிட்ட வடிவங்களில் உள்ளதால், இதனை எடுத்துக்கொள்வது நல்லது ஆகும்.
மேலும் வாசிக்க : அலர்ஜி பாதிப்பு இருக்கா – இந்த உணவுத்திட்டம் தான் பெஸ்ட்!
அதிக வயதானவர்களுக்குச் சப்ளிமெண்ட் உணவு வகைகள் கடும் சவாலாக உள்ளன.போதிய அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைக்காதவர்களுக்கு, வைட்டமின்கள், மினரல்கள் உள்ளிட்ட சப்ளிமெண்ட் உணவு வகைகள், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் சரியான அளவிற்குக் கிடைக்க உதவுகின்றன.
நம் உடலின் செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு முக்கியமோ,அதேபோல் நாம் எடுத்துக்கொள்ளும் அளவும் மிக முக்கியமானது ஆகும்.அதன் அளவு அதிகரிக்கும்பட்சத்தில், அது வேறுவிதமான பாதிப்புகளுக்குக் காரணமாக அமைகிறது. அதிகப்படியான புரதமானது, சிறுநீரகங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பதால் இதில் அதிகக் கவனம் மேற்கொள்வது அவசியம் ஆகும்.
உணவுமுறையை, சப்ளிமெண்ட் உணவுமுறையால் ஈடுகட்ட முடியாது. உணவுச் செரிமான பிரச்சினை, முழு உணவுகளையும், உடலின் செயல்பாடுகளுக்குத் தேவையான உணவு வகைகளைச் சரியான அளவிற்குச் சாப்பிட இயலாதவர்கள் உள்ளிட்டவர்களுக்குப் பேருதவி புரிகிறது.
இயற்கை உணவு – ஊட்டச்சத்துக் குறைபாடுகளை எவ்வாறு சரிசெய்கிறது?
பழ வகைகள், காய்கறிகள், முழுத்தானியங்கள் உள்ளிட்ட இயற்கையான உணவு வகைகளில், உடலின் செயல்பாடுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தையும் வழங்குகிறது. முழுமையான உணவுமுறையைப் போன்று, சப்ளிமெண்ட் உணவுமுறையானது, விரிவான ஊட்டச்சத்துகளை வழங்குவது இல்லை. இந்தச் சப்ளிமெண்ட் உணவுமுறையானது, சில பற்றாக்குறைகளை மட்டுமே நிவர்த்தி செய்ய உதவுகிறது.
உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்கு, சப்ளிமெண்ட் உணவுமுறையைக் காட்டிலும், இயற்கை உணவுமுறையே சிறந்ததாக உள்ளது.