நடத்தைப் பொறியியலைப் புரிந்து கொள்வோமா?
பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA)
பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) என்பது மனிதர்களின் நடத்தைகளை மாற்றி அமைப்பதற்கான விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையாகும். இது அந்த நடத்தைகள் குறித்த மதிப்பீடுகளையும் மேற்கொள்கிறது.இது, நடத்தைப் பொறியியல் என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்தந்த சூழல்களின் அடிப்படையிலான நடத்தைகளைப் புரிந்துகொள்வதற்கு, இந்த அணுகுமுறையானது, கற்றல் மற்றும் நடத்தைத் தொடர்பான உளவியலின் கொள்கைகளைப் பயன்படுத்துகிறது. இந்த அணுகுமுறையானது, நடத்தை முறைகளைச் சுட்டிக்காட்டுவதினால், நேர்மறையான மாற்றங்களை அனுமதிக்கின்றது.
ABA செயல்முறையானது, நடத்தைகள், திறன்கள், வளர்ச்சி தேவைப்படும் பகுதிகளை அடையாளம் காணும் வகையிலான விரிவான மதிப்பீட்டுடன் துவங்குகின்றது. எந்தெவொரு தனிநபரும், எந்தவொரு சூழ்நிலையிலும், தனனிச்சையாகச் செயல்பட்டு வெற்றிகளைப் பெற உதவும் திறன்களை அடைவதே, இந்த அணுகுமுறையின் முக்கிய நோக்கமாகும். மதிப்பீடு நிகழ்வின் போது, வெவ்வேறு சூழல்களில் உங்களின் நடத்தைகள் கண்காணிக்கப்படும். பின்னர் அதனைக்கொண்டு, குழந்தைகளுக்கான முதன்மைத் திட்டம் உருவாக்கப்படும். இந்தத் திட்டங்கள் அடிக்கடி மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும். இதன்மூலம், ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கேற்ற உத்திகள் வகுக்கப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன. இந்தச் செயல்முறையின்போது, தரவுகள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து பெறப்பட்ட நடத்தைகளைப் பொதுமைப்படுத்த, ABA செயல்முறை உதவுகிறது. இந்தத் திறன்களை, அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்துவதற்கான உத்தரவாதத்தை, அது வழங்குகிறது.
நடத்தைப் பொறியியல் சிகிச்சைமுறை
ஆட்டிஸம் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கும் மற்றும் இன்னபிற வளர்ச்சிக் குறைபாடுகள் கொண்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு அல்லது நடத்தைப் பொறியியல் சிகிச்சைமுறை உதவுகிறது.
ABA சிகிச்சை முறையானது, நடத்தை நடைமுறைகளின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும். நடத்தை மற்றும் சுற்றுப்புறச்சூழலுக்கும் இடையேயான உறவு அமைப்பில் இது போதிய கவனத்தைச் செலுத்துகின்றது. ABA சிகிச்சை முறையானது, நடத்தையைப் பகுப்பாய்வு மேற்கொள்ளுதல், அதனைப் பாதிக்கும் வகையிலான காரணிகளை அடையாளம் கண்டறிதல், நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான உத்திகளைச் செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.இந்தச் சிகிச்சைமுறையானது, குறிப்பிட்ட நபரின் தேவைகள் மற்றும் அவர்களின் குறிக்கோள்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளது.
மனதில் கொள்ள வேண்டியவை
ABA செயல்முறையை, நிலையான பயிற்சிகளின் தொகுப்பாகப் பார்க்காமல், தனிப்பட்ட நபரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான வழிமுறைகளை இது கொண்டுள்ளது. இந்தச் செயல்முறையை நாம் மேற்கொள்ளும்போது, மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய சில சொற்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன.
நேர்மறைச் சிந்தனையை வலுவூட்டுதல்
விரும்பத்தக்க வகையிலான நேர்மறை விருப்பத்தைச் சேர்ப்பது அல்லது, எதிர்மறையான ஒரு விருப்பத்தை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம், ஒரு நடத்தை நிகழ்வு மீண்டும் நடப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க இயலும். உதாரணமாக, பள்ளிச் செல்லும் குழந்தை, தனது வீட்டுப்பாடத்தை நிறைவு செய்த நிலையில், ஆசிரியர், அந்தக் குழந்தையின் செயலைப் பாராட்டி, நட்சத்திர வடிவிலான பாராட்டை, குழந்தையின் நோட்டில் குறிப்பிடுகின்றார். இந்த நிகழ்வானது, அந்தக் குழந்தையை, வீட்டுப்பாடத்தைத் தவறாமல் செய்ய ஊக்குவிக்கின்றது.
தண்டனை
ஒரு குழந்தை, சொல் பேச்சு கேட்காமல் தவறாக நடந்து கொள்ளும் போது, அதன் பொம்மைகளில் இருந்து ஒரு பொம்மையை எடுத்துக் கொள்வது அல்லது சொல் பேச்சு கேளாமைக்காக, அதற்குக் கூடுதலான வேலைகளை ஒதுக்குவது தண்டனை வழங்கப்படுவதாகக் கருதப்படுகின்றது.
நடத்தைகள்
குழந்தைகளால் எளிதில் கவனிக்கும் வகையிலான செயல்கள், ஆசிரியரின் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் குழந்தையின் கைகளை உயர்த்த செய்கிறது.
விளைவுகள்
காய்கறி சாப்பிட்ட குழந்தைக்கு இனிப்பு வழங்கும் பொது, அது ஆசையாகச் சாப்பிடுகிறது. மீண்டும் காய்கறியை வழங்கும்போது, அது சாப்பிட மறுப்பு தெரிவிக்கின்றது. இதன்மூலம், ஒரு நடத்தையைப் பின்பற்றும் நிகழ்வானது, அந்த நிகழ்வு மீண்டும் நடப்பதற்கான வாய்ப்பைப் பாதிக்கின்றது.
ABA திட்டம்
ABA செயல்முறையானது, அதன் கொள்கைகளின் அடிப்படையில் நடத்தை முறைகளை மதிப்பிட அல்லது மாற்றியமைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். உதாரணமாக, குழந்தை, தனது நேரத்தை நிர்வகிக்கக் கற்றுக்கொள்ள உதவும் வகையில் பணிகள் மற்றும் வெகுமதிகளுடனான அட்டவணையை உருவாக்குதல் ஆகும்.
மேலும் வாசிக்க : ஆரோக்கியமான உணவுமுறை – நியூட்ரிஜீனோமிக்ஸின் பங்கு
ஆட்டிஸம் குறைபாட்டில் ABAவின் பங்கு
ஆட்டிஸம் குறைபாடு, குழந்தைகளிடம் பெரும்பாலும் காணப்படுகிறது. இது நம்பத்தகுந்த முறையில் கண்டறியப்பட்ட வளர்ச்சிக் கோளாறுகளில் மிக முக்கியமானது ஆகும்.
குழந்தைகளின் நடத்தைகளை மதிப்பீடு செய்வதற்கும், அவர்களுக்குப் புதிய திறன்களைக் கற்பிப்பதற்கு, ABA திட்டம் பேருதவி புரிகிறது. இது கற்றல் கோட்பாடுகளின் அடிப்படையில், சமூகத் திறன்கள் மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை, முக்கிய நோக்கமாகக் கொண்டு உள்ளது.
நடத்தைப் பிரச்சினைகள் மற்றும் கற்றல் குறைபாடுகளால் அவதிப்படும் மாண்வர்களுக்கு உதவுவதோடு, அவர்களின் கல்வி முன்னேற்ற்த்தை ஊக்குவிப்பதற்கு, ABA செயல்முறை முக்கியப் பங்காற்றுகின்றது. குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தச் செயல்முறையானது வடிவமைக்கப்பட்டு உள்ளதால், ஆட்டிஸம் பாதிப்பிலான குழந்தைகள், கல்வி நிறுவனங்களில் சிறப்பாகச் செயல்படவும், கல்வி நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்தவும் மற்றும் நடத்தை நடைமுறைகளில் ஏற்படும் சிக்கல்களைக் களையவும் உதவுகிறது.
இயற்கை முறை கற்பித்தல் உள்ளிட்ட ஆதார அடிப்படை நுட்பங்கள் மூலம், மாணவர்களின் கல்வி மற்றும் தகவமைப்புத் திறன்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படுகிறது.
நடத்தைப் பொறியியல் எனப்படும் ABA செயல்முறை, நேர்மறை மாற்றங்களுக்கான திறன்மிக்க அணுகுமுறையாக உள்ளது. இது ஆட்டிஸம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு சரியான சிகிச்சையா என்பதை கண்டறிய உதவுகிறது.