ஆளுமைத்திறன் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது எப்படி?
ஆளுமை என்பது ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் பண்புகளின் தொகுப்பாகும். இது நடத்தை, சிந்தனை, உணர்வு ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது.மரபியல் காரணிகள், சுற்றுச்சூழல், அனுபவங்கள் உள்ளிட்டவை, ஆளுமையை வடிவமைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. மக்களின் ஆளுமைப்பண்புகள், அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே வடிவமைக்கப்பட்டு விடுகின்றன. ஆளுமை நிலையானதாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் அது தொடர்ந்து உருவாகிறது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
மனநிலை, சிந்தனை, நடத்தை ஆகியவற்றைச் சீர்குலைக்கும் நிலையே ஆளுமைத்திறன் குறைபாடு ஆகும்.ஆளுமைத்திறன் குறைபாடுகள் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அவை உடல் செயல்பாட்டையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இவை மனநல சிகிச்சை மற்றும் பொது சிகிச்சையின் சரியான கலவையைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஆளுமைத்திறன் குறைபாடுகள்
கலாச்சார எதிர்பார்ப்புகளில் இருந்து, கணிசமான அளவிற்கு விலகிச் செல்லும் நடத்தை, அறிவாற்றல், உள்ளனுபவம் உள்ளிட்டவற்றினால் வகைப்படுத்தப்படும் மனநல நிலைமைகளின் ஒரு குழுவாக, ஆளுமைத்திறன் குறைபாடுகள் வரையறுக்கப்படுகின்றன.
உறவுமுறைகள், பணிச்சூழல், சமூகத் தொடர்புகள் உள்ளிட்ட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கும் வகையில், ஆளுமைத்திறன் குறைபாடுகள் உள்ளன. இந்தக் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது என்பதே, சிகிச்சை மற்றும் நிர்வாகத்தின் முதல்படி ஆகும்.
காரணங்கள்
ஆளுமைத்திறன் குறைபாடுகள் ஏற்படுவதற்கான உண்மையான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை. மரபியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளினால் தான், இந்தப் பாதிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது
.
மரபியல்
குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆளுமைத்திறன் குறைபாடுகள் அல்லது மற்ற மனநலப் பாதிப்புகள் இருத்தல்.
குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள்
குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த விரும்பத்தகாத நிகழ்வுகளான துஷ்பிரயோகம், புறக்கணிப்பு உள்ள பாதகமான விசயங்கள்.
மூளையின் அமைப்பு
மூளைப்பகுதியில் வேதியியல் மற்றும் கட்டமைப்பில் ஏற்பட்டு உள்ள மாறுபாடுகள்.
அறிகுறிகள்
அதன் பாதிப்புகளைப் பொறுத்து, அறிகுறிகளானது வேறுபடுகின்றன. பொதுவான அறிகுறிகளாவன
- உறவுகளைப் பேணுவதில் சிரமம்
- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் நிகழ்வில் சிக்கல் தன்மை
- சலிப்பு, வெறுமைப் போன்ற தொடர்ச்சியான விரும்பத்தகாத உணர்வுகள்
- மன உளைச்சல் நாள்பட்ட பதட்ட உணர்வு.
இந்த அறிகுறிகள் விடலைப் பருவம் அல்லது இளமைப்பருவத்தின் துவக்கக்காலத்திலேயே ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பாதிப்பிற்குச் சரியான சிகிச்சை இல்லாவிடில், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
வகைகள்
ஆளுமைத்திறன் குறைபாடுகள், 3 முக்கிய வகைககளாகப் பிரிக்கப்படுகின்றன.
முதல் வகை ஆளுமைத்திறன் குறைபாடுகள், விசித்திரமான நடத்தைகள் மற்றும் சிந்தனைகளால் வகைப்படுத்தப்படுகின்றன.
சித்தப்பிரமை ஆளுமைக் குறைபாடு
இது மற்றவர்கள் மீதான தொடர்ச்சியான அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் என்று வரையறுக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடையவர்களில் பெரும்பாலானோர், மற்றவர்கள் தங்களை இழிவுபடுத்தவோ அல்லது தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக எண்ணிக் கொண்டு இருப்பர்.
உளச்சிதைவு ஆளுமைக் குறைபாடு
உறவுகளிடையே போதுமான அளவில் ஆர்வம் இல்லாத நிலையை இது குறிக்கிறது. இந்தப் பாதிப்பு கொண்டவர்கள், தனிப்பட்ட வாழ்க்கை அல்லது சமூகத் தொடர்புகளில் குறைந்தபட்ச அளவிலான உணர்ச்சிகளையே வெளிப்படுத்துவர்.
மனச்சிதைவு ஆளுமைக் குறைபாடு
அசவுகரியம் மற்றும் உறவுகளுக்கான கட்டுப்படுத்தப்பட்ட தேவை நிலையை இது குறிப்பிடுகிறது. யதார்த்தத்தின் சிதைந்த உணர்வுகளானது, நடத்தைகளைப் பாதிக்கக்கூடியதாக உள்ளது.
கடுமையான மனக்கிளர்ச்சி நடத்தைகளின் அடிப்படையில், இரண்டாம் வகை ஆளுமைத்திறன் குறைபாடுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
சமூக விரோத ஆளுமைத்திறன் குறைபாடு
சமூக விதிமுறைகளூக்குக் கீழ்ப்படியாத நிலை, மற்றவர்களிடம் மரியாதை இல்லாதது உள்ளிட்டவைகளால் இது வகைப்படுத்தப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடையவர்கள், உடல் அல்லது உணர்ச்சிரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபடுவர்.
நிலையற்ற மனநிலைக் குறைபாடு(BPD)
இது உணர்ச்சி ஒழுங்குமுறைக்கான இயலாமை நிலையைக் குறிக்கிறது. சுயமரியாதை இன்மை, மனக்கிளர்ச்சி நடத்தைகள் நிலையான உறவில் சிக்கல்கள் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
தன்னீர்ப்பு ஆளுமைக் குறைபாடு
இது நிலையற்ற உணர்ச்சி நிலைம், சிதைந்த சுய உருவம் உள்ளிட்டவற்றால் குறிக்கப்படுகிறது. இந்தப் பாதிப்பு உடையவர்கள், பிறரின் கவனத்தை ஈர்க்க, வியத்தகு வகையிலான அல்லது பொருத்தமற்ற நடத்தைகளை மேற்கொள்வர்.
நாசீசிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு
குறைந்த அளவிலான சுயமரியாதை, தன்னம்பிக்கை இல்லாத நிலை உள்ளிட்டவை இந்த இந்தப் பாதிப்பினரிடையே காணப்படும்.
கவலை மற்றும் பய உணர்வின் அடிப்படியில், மூன்றாவது வகையானது வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
தவிர்க்கும் ஆளுமைக் குறைபாடு
இது இயலாமை உணர்வு, மற்றவர்களால் எதிர்மறையாகத் தீர்மானிக்கப்படுவோம் என்ற பயம் உள்ளிட்டவைகளால் குறிக்கப்படுகிறது. இவர்களுக்கு விருப்பம் இருந்தாலும், எங்கே நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து தவிர்த்து விடுகிறார்கள்.
சார்பு ஆளுமைக் குறைபாடு
இந்த பாதிப்பு உள்ளவர்களால் சுயமாக முடிவு எடுக்க இயலாது, எப்போதும் மற்றவர்களைச் சார்ந்தே இருப்பர்.
கட்டாய ரீதியிலான ஆளுமைக் குறைபாடு (OCPD)
இந்தப் பாதிப்பானது, பணி நிறைவில் தலையிடுவதால், இவர்களால் எந்த வேலையையும், முழு மனநிறைவுடன் செய்ய முடியாது.
மேலும் வாசிக்க : மன ஆரோக்கியம், உடற்பயிற்சி பின்னிப் பிணைந்தவையா?
சிகிச்சை முறைகள்
ஆளுமைத்திறன் குறைபாட்டிற்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் பொதுவானவற்றை இங்கே காணலாம்.
உளவியல் சிகிச்சை
ஆளுமைத்திறன் குறைபாடுகளுக்கான சிகிச்சைகளில் முதன்மையானதாக உள்ளது உளவியல் சிகிச்சைமுறையே ஆகும். இது பேச்சு சிகிச்சை என்றும் குறிப்பிடப்படுகிறது. அறிவாற்றல் மற்றும் இயங்கியல் நடத்தைச் சிகிச்சையானது, ஆளுமைக் குறைபாடு பாதிப்புகளைச் சமாளிக்க உதவுவதோடு மட்டுமல்லாது, அவர்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
மருந்துகள்
ஆளுமைத்திறன் குறைபாடுகளின் தீவிரத்தை, ஆண்டிடிரஸண்ட்ஸ், ஆன்டிசைகோடிக்ஸ் மனநிலை நிலைப்படுத்திகள் உள்ளிட்ட மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். உளவியல் சிகிச்சை நிகழ்வின் போது, இந்த மருந்துகள் முறையானது இணைந்து மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல்
கடுமையான நிலையில், ஆளுமைத்திறன் குறைபாட்டிற்கு ஆளானவர் மற்றும் அவரைச் சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அவசியமானதாகிறது.
ஆளுமைத்திறன் குறைபாட்டைத் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொண்டு குணப்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…