Alarm clock resting on a child’s bed, symbolizing how stress-related sleep disorders harm health and interfere with everyday life.

குழந்தைகளுக்கு உறக்கப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?

குழந்தையின் வளர்ச்சி மற்றும் நல்வாழ்வின் அடிப்படைத் தளமாக, உறக்க நிகழ்வானது உள்ளது. குழந்தைகளின் உறக்கக் குறைபாடு, அவர்களின் உடல் ஆரோக்கியம், உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து, பல சிக்கல்களை உருவாக்குகிறது.உறக்கக் குறைபாடு பாதிப்பானது, பெரும்பாலும் பெரியவர்களுடன் தொடர்புடையது என்றபோதிலும், அது குழந்தைகளையும் சமமான அளவில் பாதிக்கின்றன. இந்தச் சிக்கல்களை, துவக்கத்திலேயே புரிந்துகொள்வது, குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தில் விரும்பத்தக்க அளவிலான மாற்றத்தை உருவாக்கும்.

உறக்கக் குறைபாடு பாதிப்பு

சாதாரண உறக்க நிலையைச் சீர்குலைக்கவல்ல மருத்துவ நிலையே, உறக்கக் குறைபாடு பாதிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, இது அவர்களின் உடல்நலம் மற்றும் தினசரி செயல்பாடுகளைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இன்றைய அவசரகதியிலான போட்டி உலகில், இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர், உறக்கப் பாதிப்புகளுக்குக் காரணமான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகளுக்கு ஏற்படும் உறக்கப் பாதிப்பின் வகைகள்

குழந்தைகளுக்கு, பல்வேறுவிதமான உறக்கக் குறைபாடு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தங்களுக்கே உரித்தான சவால்களைக் கொண்டு உள்ளன.

குழந்தைப்பருவத்தில் ஏற்படும் உறக்கமின்மை

போதிய உறக்கம் இல்லாத நிலை அல்லது உறங்குவதில் சிரமம் ஏற்படுதல்

உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படுதல்

சுவாசப்பாதையில் ஏற்படும் அடைப்பு காரணமாக, உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உறக்கம் தடைபடுதல்

இரவுநேரப் பய உணர்வு

உறக்க நிகழ்வின்போது இனம்புரியாத பயம் ஏற்படுதல், அலறுதல் உள்ளிட்ட உணர்வுகள் ஏற்படுதல்

உறக்கத்தில் நடத்தல்

பாதி உறக்கத்தின் போது, திடீரென்று எழுந்து நடத்தல் உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல்

விபரீதக் கனவுகள்

உறக்கத்தில் இருக்கும் குழந்தையை, பயமுறுத்தும் விதமாகக் கனவுகள் ஏற்படுதல்

அதீதப் பகல்நேர உறக்கம்

தொடர்ச்சியான சோர்வின் காரணமாக, பகல்வேளையில் அதிகநேரம் உறங்குதல்.

அறிகுறிகள்

  • உறக்கக் குறைபாட்டின் அறிகுறிகளை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், நாள்பட்ட அளவிலான சிக்கல்களைத் தடுக்க முடியும்.
  • பகல் நேர உறக்கக் கலக்கம் – உங்கள் குழந்தை வழக்கத்திற்கு மாறாக, பகல் நேரத்தில் அதிகநேரம் உறங்கிக் கொண்டு இருக்கும்.
  • உறங்குவதில் சிரமம் – இரவில் உறங்குவதற்குச் சிரமம்.
  • சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் – உறக்கத்தின் போது குறட்டை விடுதல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்.
  • அமைதியற்ற இரவு – அசாதாரண இயக்கங்களின் காரணமாக, உறக்கத்தின் போது ஆங்காங்கே நகருதல் நிகழ்வுகள்.
  • சீரற்ற உறக்கம் மற்றும் விழிப்பு சுழற்சிகள் இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் மீதான உணர்ச்சித் தாக்கம்

உங்கள் குழந்தை, சரியான உறக்கமின்மையால் பாதிக்கப்படும்போது, அவர்கள் அடையும் வலியைப் பார்க்கும்போது, பெற்ரோர்கள் அதிக மன உளைச்சலுக்கு உட்படுகின்றனர். இந்த நிலையில், உறக்கக் குறைபாட்டுப் பாதிப்பு நிகழ்வானது, குழந்தைகளை மட்டும் பாதிப்பது இல்லை, அவர்களின் முழு குடும்பத்தையும் பாதிக்கின்றன. பாதிப்பின் தன்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் நிர்வகிக்க முயலும் பெற்றோர்கள், உதவியற்றவர்களாகவும் சோர்வடைந்தவர்களாகவும் உணர்கின்றனர்.

மேலும் வாசிக்க : உறக்கப் பாதிப்பை நிவர்த்தி செய்யும் சிகிச்சை முறைகள்

நோயறிதல் மற்றும் சிகிச்சைமுறைகள்

பாதிப்பு எந்த வகையினதாக இருக்கும்போதிலும், ஆரம்பகால நோயறிதல் மேற்கொண்டால், அதன் பாதிப்பை வெகுவாகக் குறைக்க முடியும். குழந்தைகளிடம், உறக்கக் குறைபாட்டின் அறிகுறிகள் தென்பட்டால், உடனே சிகிச்சை நிபுணரை அணுக வேண்டும்.இந்த அறிகுறிகளைக் காணும் நிபுணர், அதற்கேற்ற வகையிலான சிகிச்சைத் திட்டங்களைப் பரிந்துரைச் செய்வார்.

A medical professional holding a white card with "sleep disorder"text in a hospital environment.

சிகிச்சைத் தொடர்பான அணுகுமுறைகள்

நடத்தைகளில் மாற்றம்

உறக்கப் பழக்கத்தை மேம்படுத்தும் வகையிலான நிலையான உறக்க வழக்கத்தை மேற்கொள்ளுதல்.

மருத்துவச் சிகிச்சைகள்

உறக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படுதல், கால்களில் வலி உணர்வு முதலிய நிலைமைகளை நிர்வகிப்பதற்கான மருத்துவ முறைகள்.

உளவியல் சிகிச்சை

கவலை, அதிர்ச்சி அல்லது உறக்கப் பாதிப்பு நிகழ்வுகளுக்குக் காரணமான மனநலப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான உளவியல் சிகிச்சை முறைகள்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

சிறந்த உறக்க நிலையை மேம்படுத்த உதவும் உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் உறக்க நேர நடைமுறைகளை மாற்றி அமைத்தல்.

குழந்தைகளுக்கு உறக்கக் குறைபாடு பாதிப்பை உருவாக்கும் காரணிகளைத் திறம்படத் தவிர்த்து, சரியான கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு, அவர்களை அந்தப் பாதிப்பில் இருந்து விடுவித்து, நல்ல உடல்நலத்துடன் வாழ வழிவகைச் செய்வோமாக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.