மன ஆரோக்கியத்தில் அதிர்ச்சி நிகழ்வின் தாக்கம்
அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், மன அழுத்த உணர்வுடனான ஆபத்தான சூழ்நிலைகள் உங்களைத் திகில் நிறைந்த உதவியற்ற நிலைக்கு இட்டுச் செல்லலாம். இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொருவரும் அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றினாலும், அது அவர்களின் நல்வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.அதிர்ச்சிகரமான நிகழ்வைச் சமாளிப்பது சாத்தியம் தான் என்றபோதிலும், அதைத் திறம்பட நிர்வகிக்க, தொழில்முறை ஆதரவு மிக முக்கியமானது ஆகும்.
அதிர்ச்சி என்றால் என்ன?
அதிர்ச்சி என்பது ஆழ்ந்த மன உளைச்சல் அல்லது குழப்பமான அனுபவம் என்று வரையறுக்கப்படுகிறது. இது சம்பந்தப்பட்ட நபரின் சமாளிக்கும் திறனை மழுங்கடிக்கச் செய்துவிடுகிறது. இயற்கைப் பேரழிவுகள், விபத்துகள், பிரியமானவர்களின் மரணம், உடல் அல்லது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வடிவங்களில், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் உள்ளன. பெருந்தொற்று நோய்க் காலங்கள், போர்ச்சூழல் உள்ளிட்ட நிலைகளிலும், அதிர்ச்சிகரமான அனுபவங்களை உணர இயலும்.
அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், குறிப்பிட்ட நபரின் பாதுகாப்பு அல்லது வாழ்க்கைக்குக் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய நிகழ்வுகள், சம்பந்தப்பட்ட நபர்களை, தனிமைப்படுத்தப்பட்டதாக உணர வைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த நிகழ்வுகள், அகநிலை உணர்ச்சி அனுபவங்களால் தீர்மானிக்கப்படுவதே அன்றி, புறநிலைக் காரணிகளால் அல்ல என்பதை உணர்ந்துகொள்வது அவசியமாகும்.
இந்த நிகழ்வுகள் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் பிரியமானவர்களையும் பெரிதும் பாதிக்கின்றன. இது அவர்களை மிகவும் பயந்தவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் மாற்றி, அவர்களுக்கு மேலும் அதிக அதிர்ச்சி வைத்தியத்தை அளிக்கிறது.
மனநல ஆரோக்கியத்தில் அதிர்ச்சி நிகழ்வின் பங்கு
மனநல ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளில் முதன்மையானதாக, அதிர்ச்சி நிகழ்வு உள்ளது. இது PTSD எனப்படும் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு, மனச்சோர்வு, பதட்டம் உள்ளிட்ட விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுத்துவிடும். கெட்ட கனவுகள், ஹைப்பர் விஜிலென்ஸ் உள்ளிட்டவை, பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பின் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.
அதிர்ச்சிகரமான நிகழ்விற்குப் பிறகு, மக்கள் அதிர்ச்சி மற்றும் வெறுப்பு எனும் இரண்டு வகையான உணர்வுகளைப் பெறுகின்றனர். இந்த உணர்வுகள், உங்களை அதிர்ச்சி நிகழ்வின் தாக்கத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கின்றன. அதிர்ச்சி நிகழ்வுக்கான பதில் வினைகள், நபருக்கு நபர் மாறுபடுகிறது.
உளவியல் ரீதியான அதிர்ச்சி உணர்வு மன ஆரோக்கியத்தை ஆழமாகப் பாதிக்கிறது. இது கவலை மற்றும் வருத்தமான நினைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் கவலை மற்றும் மனச்சோர்வு உணர்ச்சிகளானது, மன அழுத்தத்துடன் தொடர்புடையதாக உள்ளது. தனிநபர்கள், அதிர்ச்சி நிகழ்விற்கு உள்ளாகும்போது, அது கவலை, சோகம் போன்ற தீவிர உணர்வுகளை விட்டுச் செல்கின்றன. இந்த உணர்வுகள், அந்நபர்களின் தினசரி செயல்பாடுகளில், பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதிர்ச்சி நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்பு நிகழவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாது, சில தருணங்களில் PTSD எனப்படும் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு பாதிப்பின் அறிகுறிகளும் உருவாகின்றன. மற்ற பாதிப்புகளின் அறிகுறிகளுடன் ஒப்பிடும்போது, PTSD பாதிப்பின் அறிகுறிகள், சில ஆண்டுகள் நீடிக்கக் கூடியது ஆகும். PTSD பாதிப்பின் அறிகுறிகளை நிர்வகிக்கச் சமூக மற்றும் தொழில்முறையிலான ஆதரவு மிக இன்றியமையாததாகும்.
அதிர்ச்சியைச் சமாளிப்பதற்கான வழிகள்
அதிர்ச்சியின் அறிகுறிகள் காலப்போக்கில் மறையும். ஆனால் அதன் வலிமிகுந்த நினைவுகளும் எண்ணங்களும் நீடிக்கும். நீங்கள் அதிர்ச்சிகரமான நினைவுகளைச் சமீபத்தில் அனுபவித்திருக்கும்பட்சத்தில், அதிலிருந்து முழுமையாக வெளியேற சில உத்திகள் உள்ளன. இந்த உத்திகள், நீங்கள் உணர்ச்சி சமநிலைகளை மீண்டும் பெற உதவுகிறது.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
அதிர்ச்சி நிகழ்வானது, உங்களைப் பயத்தில் உறைய வைப்பதோடு மட்டுமல்லாது, நீங்கள் ஒரே இடத்தில் சிக்கி இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இந்நிலையில் உடற்பயிற்சி செய்வது உங்கள் நல்வாழ்விற்கு உதவும். மேலும் துன்பகரமான நினைவுகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும்.
தனிமை உணர்வினைத் தவிர்க்கவும்
மற்றவர்களிடமிருந்து உங்களைத் தனிமைப்படுத்துவதின் மூலம், இது சில விசயங்களை மோசமானதாக்கும். நீங்கள் மற்றவர்களுடன் இணைந்து இருக்கும்போது, தனியாக உணர்வதைச் சிறிதுசிறிதாக உணரலாம்.
மனந்தெளிநிலையைப் பழக்கிக் கொள்ளுங்கள்
தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, மனந்தெளிநிலையைப் பழக்கப்படுத்திக் கொள்ளவும். இது உங்கள் எதிர்மறை அனுபவங்களில் இருந்து விலகிச் செல்ல உதவும். நீங்கள் மனந்தெளிநிலையைப் பழக்கப்படுத்தி கொள்ளும்போது, நரம்பு மண்டலம் அமைதியாகிறது. இது எதிர்மறையான மற்றும் கவலை எண்ணங்களைத் தடுக்க உதவுகிறது.
மேலும் வாசிக்க : குழந்தைகளுக்கு உறக்கப் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது?
தொழில்முறை ஆதரவு
அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்கான அறிகுறிகள் தொடரும்பட்சத்தில், அதைச் சமாளிக்கப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தலாம் என்றபோதிலும், தொழில்முறை ஆதரவைப் பெறுவது நல்லது. மனநல நிபுணர், அதிர்ச்சியைச் சிறப்பாகச் சமாளிப்பதற்கான திறன்களை உங்களிடையே வளர்ப்பது மட்டுமல்லாது, அதிலிருந்து நீங்கள் குணமடையும்விதம் குறித்து புரிந்துகொள்ள முடியும்.
நாம் எல்லோரும் மன அழுத்த அனுபவங்களைக் கடந்துதான் வந்து இருக்கிறோம். ஆனால், அந்த நினைவுகள் மூழ்கடிக்கும்போது, இந்த அனுபவங்கள் அதிர்ச்சிகரமானதாக உள்ளது. இந்த அதிர்ச்சி நிகழ்வானது, உணர்ச்சி, உடல் மற்றும் உளவியல் நல்வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
அதிர்ச்சியின் அறிகுறிகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து உரிய நிபுணருடன் கலந்தாலோசிக்கவும். அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மன ஆரோக்கியத்தில் அதிர்ச்சி நிகழ்வின் தாக்கத்தை முழுமையாக அறிந்து, அதைக் குணப்படுத்தும் உத்திகளைச் சரியாகவும், கவனமாகவும் கடைப்பிடித்து, அந்தப் பாதிப்பில் இருந்து விடுபட்டு, நல்வாழ்க்கை வாழ்வோமாக.