ADHD பாதிப்பைக் குணப்படுத்த முடியுமா?
சர்வதேச அளவில், இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் ADHD எனப்படும் கவனக்குறைவு மிகைசெயல்பாடு பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ADHD பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்குச் சரியான சிகிச்சை அளிக்கவும்,அதிலிருந்து விரைவில் மீளவும், பெற்றோர்களுக்கு இந்தப் பாதிப்பு குறித்த புரிதல் அவசியம்.
மனக்கிளர்ச்சி, அதீதச் செயல்பாடு, கவனக்குறைவு ஆகியவை ADHD பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்.இந்த ADHD பாதிப்பானது, குழந்தைகளிடம் அதிகம் காணப்பட்டாலும், அதன் பாதிப்பு, அவர்கள் முதிர்ச்சி அடையும்வரை நீடிக்கிறது. ADHD பாதிப்பு கொண்ட குழந்தைகள் கல்வியில் கவனமின்மை, சக மாணவர்களுடன் பழகுவதில் சிரமம், வயதுக்கு ஒவ்வாத செயல்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றனர்.
பெரும்பாலான குழந்தைகளுக்கும், ADHD பாதிப்பு ஏற்படுகிறது. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.1 மில்லியன் குழந்தைகளுக்கு ADHD பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது.
ADHD பாதிப்பின் அறிகுறிகள்
ADHD பாதிப்பிற்கான அறிகுறிகள் குழந்தைக்குக் குழந்தை மாறுபடுகின்றன.
எளிதாகக் கவனத்தைச் சிதறவிடுகின்றனர்
அதிகப்படியாகப் பேசுகின்றனர்
கவனம் செலுத்துவதில் சிரமம்
மறதி உணர்வு
கவனக்குறைவால் ஏற்படும் தவறுகள்
பொறுமை இல்லாத நிலை உள்ளிட்டவை, இதன் அறிகுறிகள் ஆகும்.
காரணங்கள்
ADHD பாதிப்பிற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றபோதிலும், கர்ப்பக் காலத்தில் ஆல்கஹால் அல்லது புகையிலைப் பயன்பாடு நிகழ்வானது, முன்கூட்டியே பிறப்பு, மூளைப் பிரச்சினைகள், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளிட்ட காரணிகள், ADHD பாதிப்பிற்குக் காரணமாக அமைகின்றன.
ADHD பாதிப்பின் வகைகள்
ADHD பாதிப்பைக் கண்டறிவதற்கு, சிகிச்சைத்திட்டம் என்று குறிப்பிடும்படி இல்லை. மூன்று வகைககளாகப் பிரிக்கப்பட்டு உள்ள இந்தப் பாதிப்புகள், தனித்துவமான பண்புகளைத் தன்னகத்தே கொண்டு உள்ளன.
தனிநபர்க் கவனக்குறைவு
இந்த வகையான பாதிப்பிற்கு உள்ளான குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அன்றாட பணிகளில், கவனக்குறைவால் சிரமப்படுவர். அவர்களில் எளிதில் திசைதிரும்பும் வாய்ப்பு ஏற்படுகிறது.
மனக்கிளர்ச்சி – மிகைச் செயல்பாடு வகை
இந்த வகையான பாதிப்பில் அதிக அளவிலான மனக்கிளர்ச்சி மற்றும் அதிவேகத்தன்மையால் குறிக்கப்படுகிறது. குழந்தைகள், முறையாகக் காத்திருப்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இவர்கள் ஒரேநேரத்தில் உட்கார்ந்து இருப்பது கடினம் ஆகும்.
கலவை வகை
மிகை உணர்ச்சி மற்றும் மனக்கிளர்ச்சி உள்ளிட்ட கவனக்குறைப்பிற்கான அறிகுறிகள், இந்தக் கலவை வகைகளில் காணப்படுகின்றன. இது பெரும்பாலான குழந்தைகளிடம் காணப்படும் வகை ஆகும். இந்த வகைப் பாதிப்பால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, பல்வேறுவிதமான சிரமங்கள் ஏற்படுகின்றன.
மேலும் வாசிக்க : OCD நோய்ப்பாதிப்பின் அறிகுறிகள்
சிகிச்சை முறைகள்
நடத்தை முறைகள் அடிப்படையிலான சிகிச்சை, மருந்துகள் உள்ளிட்டவை, ADHD பாதிப்பு கொண்ட குழந்தைகளின் சிகிச்சை முறைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
நடத்தை முறைகள் அடிப்படையிலான சிகிச்சை
குழந்தைகளுக்குப் பாதிப்பின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும் வகையிலான புதிய நடத்தைகள் மற்றும் திறன்களை வழங்குவதை, இந்த நடத்தைச் சிகிச்சையானது குறிக்கோளாகக் கொண்டு உள்ளது.
மருந்துகள் முறை
ADHD பாதிப்பின் அறிகுறிகளை, மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் திறம்பட கட்டுப்படுத்தி நிர்வகிப்பதால், இந்தமுறையே, பெரும்பாலான மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. பின்பற்றப்படும் மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும்பட்சத்தில், தூண்டுதல் அல்லாத மருந்துகளையும், மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மருத்துவ மதிப்பீட்டு முறை
மனநல மருத்துவர், குழந்தை நல மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்டோர், ADHD குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வுகளை நடத்தி, அதன்மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்கின்றனர்.
ADHD பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கு, அறிகுறிகளைத் துவக்கக் காலத்திலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் மேற்கொண்டு, அந்தப் பாதிப்பில் இருந்து விரைவில் மீள உதவுவோமாக…