தனிப்பயனாக்கப்பட்ட உணவுப் பரிந்துரைகளின் நன்மைகள்
ஆரோக்கியமான உணவுமுறைப் பற்றி அறிந்திருந்தும், நீங்கள் உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும் உணவுகளை உண்டிருக்கலாம்.உங்கள் உடலின் செயல்முறையை நீங்கள் அறிந்து கொள்ளும் பட்சத்தில், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு வகைகள் மற்றும் அதன் பயன்பாட்டு முறையை எளிதில் தெரிந்து கொள்ளலாம். தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுமுறையானது, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான உணவுவகைகளைத் தவிர்க்க வைக்கும்.
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை அவசியமா என்ற கேள்வி எழலாம். ஆம், இது அவசியமானது.ஏன் என்றால், உதாரணத்திற்கு, இரண்டு நபர்களை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கு என்று வெவ்வேறு உடலமைப்பு உள்ளது. உணவுமுறையும் அவர்களிடையே வேறுபடுகின்றது.
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையானது, உடல் ஆரோக்கிய நிகழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. நீரிழிவுப் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்க்குறைபாடுகள், சரிவிகித உணவுப் பற்றாக்குறையின் காரணமாகவே நிகழ்கின்றன. இந்தப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை, உடலின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க உதவுகிறது.
தோல் பராமரிப்பு
போதிய நீரேற்றம் இல்லாதநிலையிலான சருமம், அதிகளவில் வறண்டும், மிருதுத்தன்மை அற்றும் காணப்படும். போதிய அளவிலான ஊட்டச்சத்துக்கள் இல்லாததே, இந்த நிலைக்குக் காரணம் ஆகும். சந்தையில் கிடைக்கும் மாய்ஸ்சரைசர்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்பட்சத்தில், சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் விரைவில் மாறும்.
இயற்கையாகவே உடல் எடையைக் குறைத்தல்
எளிமையான உணவுமுறைகளின் மூலம், உடல் எடையைக் குறைக்க முடியும் என்றபோதிலும், இந்த எடைக்குறைப்பு என்பது நிலையில்லாதது ஆகும். இந்த எளிய உணவுமுறையிலிருந்து நாம் விலகும்பட்சத்தில், மீண்டும் உடல் எடை அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த விளைவுகளைத் தவிர்க்க, சரிவிகித உணவு நடைமுறையே சாத்தியமான வழிமுறை ஆகும். இது மட்டுமே, உடல் எடையைக் கணிசமான அளவிற்குக் குறைப்பதோடு மட்டுமல்லாது, உடல் எடை நிர்வாகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உணவுமுறையுடன், நீச்சல், ஜாக்கிங் உள்ளிட்ட பயிற்சிகளையும் மேற்கொள்வது கூடுதல் பலனைத் தரும்.
நோய்கள் வராமல் தடுக்கின்றது
தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறையானது, உடல் ஆரோக்கியத்திற்குப் பேருதவி புரிகிறது. நீரிழிவுப் பாதிப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.
நீரிழிவுப் பாதிப்பிற்கான தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை
இரத்தத்தில் சர்க்கரை அளவின் அதிகரிப்பால், இரண்டாம் வகை நீரிழிவுப் பாதிப்பு ஏற்படுகின்றது. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பானது, உடல் பருமன் மற்றும் அதிக எடைக் கொண்டவர்களை அதிகளவில் தாக்குகின்றது.
நீரிழிவுப் பாதிப்பைக் கட்டுப்படுத்தவல்ல உணவுமுறையானது உடலின் ஊட்டச்சத்துத் தேவைகளை நிறைவு செய்கின்றது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, உடல் எடையை நிர்வகித்து, சரியான உடல் எடையைப் பேணச் செய்கின்றது, நோய்ப் பாதிப்புகளைக் குறைக்கின்றது.
ஊட்டச்சத்து முறை மற்றும் நீரிழிவு, ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை ஆகும். இதன்காரணமாகவே, நீரிழிவுப் பாதிப்பைக் குணப்படுத்த, உணவுப்பரிந்துரைகளை மேற்கொள்கிறோம்.
கர்ப்பிணிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை
கர்ப்பக் காலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை, பெண்கள் சரிவிகித உணவைச் சாப்பிடுவது மிகவும் முக்கியம் ஆகும். இந்தத் தருணத்தில், எந்த உணவை உடல் ஏற்றுக்கொள்ளும், எத்தகைய உணவை, உடல் புறக்கணிக்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். இதன்மூலம், உடலுக்கு நல்ல உணவுகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
கர்ப்பக் காலத்தின் துவக்கக் காலங்களில்,,கருவின் அளவு சில மில்லிமீட்டர்களே இருக்கும். பெண்ணின் உடலில் உள்ள கொழுப்புகள், இரும்பு, புரதங்கள் உள்ளிட்டவைகளே போதுமானதாக இருக்கும்.
4 முதல் 6 மாத கால அளவில், கருவின் வளர்ச்சி, மிகவும் வேகமாக இருக்கும். இந்த நிலையில், கர்ப்பிணி, சரிவிகித உணவுகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுவது நல்லது. இதன்மூலம், மகப்பேறுக்குப் பிந்தைய சோர்வு தடுகப்படுவதோடு, தாய்ப்பால் சுரப்பும் துரிதப்படுத்தப்படும்.
இறைச்சி, மீன், முட்டை, ரொட்டிகள், மாவுச்சத்து உள்ள உணவு வகைகள், கொழுப்பு, பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழ வகைகள் உள்ளிட்ட உணவு வகைகள், உடலின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பேருதவி புரிகின்றன. இவற்றில் குறைந்தது நான்கு உணவுகளைத் தினமும் சேர்த்தால், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, சுகமான பிரசவம் கிடைக்கும்.
மேலும் வாசிக்க : உடல் கொழுப்பை நிர்வகிப்பதற்கான உணவுமுறைகள்
இரத்தசோகை நோயாளிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட உணவுமுறை
இரத்தசோகைப் பாதிப்பானது, இரும்புச்சத்துப் பற்றாக்குறையின் காரணமாக ஏற்படுகின்றது. பிரான்ஸ் நாட்டு மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறுகுழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், இளம்வயதுக் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு, இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இளம்வயதில், நமது உடலில் 4 கிராம்கள் அளவிற்கு இரும்பு இடம்பெற்றிருக்கும். இது மினரல்கள் எனப்படும் தாது உப்புகளுடன் இணைந்து, உடலின் அன்றாடப் பணிகள் சீராக நடைபெற உதவுகிறது. இரத்தத்தில் உள்ள ஆக்சிஜனை, நுரையீரல் மட்டுமல்லாது, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இரும்புச்சத்து அதிகம் கொண்ட உணவு வகைகள், உடல் எடைக் குறைப்பிற்கு முக்கியப்பங்கு வகிக்கின்றன.
நம் உடலில் இரும்பானது, இருவிதமான வடிவங்களில் உள்ளது. இரத்தத்தில் இரத்த சிவப்பணுக்களுடன் ஹீம் என்ற பெயரில் 70 சதவீதமும், மீதமுள்ள 30 சதவீதம், ஊட்டச்சத்துகளின் போக்குவரத்திற்கும் உதவும் வகையில் உள்ளது.
இறைச்சி, மீன்கள், பழ வகைகள், கடல் உணவுகள், முட்டைகள், காய்கறிகள் உள்ளிட்டவைகளில் அதிகளவில் இரும்பு உள்ளது.
உடல் ஆரோக்கியத்திற்குக் காரணமான உணவு வகைகள் குறித்து நீங்கள் அறிந்து கொள்ளும் போது, அதன்மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்த தெளிவு உண்டாகின்றது. இது நீங்கள் சுறுசுறுப்பாக இயங்கவும், நல்ல உறக்கநிலையை அடையவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்துகளைக் கண்டறிந்து, அதன் பயன்பாட்டை அதிகரித்து, நோயற்ற பெருவாழ்க்கை வாழ்வீராக….