ஃபிட்னெஸ் டிராக்கர்களின் நன்மைகள் மற்றும் அம்சங்கள்
இன்றைய இளம்தலைமுறையினர்த் தங்களது உடல்நலனில் அதிக அக்கறைச் செலுத்துகின்றனர். இதன் காரணமாக, சமீபகாலமாக ஃபிட்னெஸ் டிராக்கர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.ஃபிட்னெஸ் டிராக்கர்கள், மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவும், அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உதவுகின்றன.
நீங்களும் ஃபிட்னெஸ் டிராக்கர்ப் பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு, இந்தக் கட்டுரை மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்தக் கட்டுரையில், சிறந்த ஃபிட்னெஸ் டிராக்கர்கள், அதன் அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன..
Apple Watch SE 2nd Gen
விலை ரூ. 32,900
சிறப்பம்சங்கள்
உங்களைக் கீழே விழுவதில் இருந்து காக்கிறது. அவசரக் காலங்களில் உதவும் வகையிலான SoS வசதி இதன் சிறப்பம்சம் ஆகும்.
சாதகங்கள்
18 மணிநேரங்கள் வரையிலான பேட்டரி சார்ஜ்.
44 மில்லிமீட்டர் அளவிலான டிஸ்பிளே.
Wi-Fi, LTE மற்றும் UMTS, Bluetooth 5.0 வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
நீர் உட்புகாத் தன்மை.
போன் அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி.
கூடுதல் செயல்பாடுகளுக்காக டுயல் கோர்ப் ப்ராசெசர்.
இதயத்துடிப்பு, உறக்கத்தைக் கண்காணித்தல், இதய நலன் கண்காணிப்பு வசதிகள்.
பாதகம்
எல்லா வகை ஆண்ட்ராய்டுகளிலும் இணைந்து செயல்படாத நிலை.
Samsung Galaxy Watch5
விலை ரூ. 30,999
Samsung Galaxy Watch5 பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இவற்றில் நீடித்து உழைக்கும் பேட்டரி, துல்லியமான நேவிகேசன், உடல் ஆரோக்கிய கண்காணிப்பு, ஸ்மார்ட்போனுடன் ஒருங்கிணைப்பு ஆகியவை அடங்கும்.
இதயத்துடிப்பு, உறக்கம், மன அழுத்தம், உடல் எடைக்குறியீடு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்காணிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
சிறப்பம்சங்கள்
1.73 அங்குல அமோலெட் டிஸ்பிளே.
1.5 ஜிபி முதல் 16 ஜிபி வரையிலான மெமரி ஸ்டோரேஜ் வசதி.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
சாதகங்கள்
மென்மையான UI பயனர் அனுபவம்.
பிரகாசமான டிஸ்பிளே.
வலுவான டிஸ்பிளே, கீறல்கள் விழும் என்ற பயம் இல்லை.
பாதகம்
பேட்டரியின் வாழ்நாள் குறைவாக உள்ளது இதன் குறைபாடு ஆகும்.
Fossil Gen 6 Smartwatch, FTW4060
விலை ரூ. 24,995
இந்த ஸ்மார்ட் வாட்ச் நேர்த்தியான, அதிநவீன வடிவமைப்புடன் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
சிறப்பம்சங்கள்
24 நாட்கள் அளவிலான பேட்டரி திறன்.
துல்லியமான ஜிபிஎஸ்.
இதயத்துடிப்பு வீதம் கண்காணிப்பு.
1.28 அங்குல அமோலெட் டிஸ்பிளே.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
சாதகங்கள்
30 மீட்டர் ஆழத்திலும் நீர்ப் புகாத் தன்மை.
வேகமாகச் சார்ஜ் ஏறும் நுட்பம்.
நீடித்து உழைக்கும் பேட்டரி.
Amazfit T-Rex 2 Premium Multisport GPS Sports Watch
விலை ரூ. 14,999
இந்த ஸ்மார்ட்வாட்ச்சின் சென்சார்கள் நம் இயக்கங்களைக் கண்காணித்து, ஸ்குவாட் போன்ற பயிற்சிகளைக் கணக்கிடுகிறது.இதன் ZEPP செயலியானது, தசைகளின் வலிமையை மேம்படுத்தும் வகையிலான உடற்பயிற்சிகளுக்குப் பேருதவி புரிகிறது.
சிறப்பம்சங்கள்
10 மீட்டர் ஆழத்திலும் நீர்புகாத் தன்மை.
24 நாட்கள் அளவிலான பேட்டரி திறன்.
துல்லியமான ஜிபிஎஸ்.
இதயத்துடிப்பு வீதம் கண்காணிப்பு.
1.39 அங்குல டிஸ்பிளே.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
சாதகங்கள்
உடற்பயிற்சி அளவீடுகளில் துல்லியம்.
அதிசயிக்க வகையிலான நிலைத்தன்மை.
இதயத்துடிப்பு, ஆக்சிஜன் செறிவு, மன அழுத்தம், சுவாசம் ஆகியவற்றின் துல்லிய அளவீடு.
பாதகம்
ஸ்டோரேஜ் வசதி இல்லாதது இதன் குறைபாடு ஆகும்.
HONOR Watch GS 3 Smartwatch, MUS-B19
விலை ரூ. 16,990
உடல்நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு HONOR Watch GS 3 Smartwatch சிறந்த தேர்வு. 100க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள், இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, உறக்கம், மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியைத் தானாகவே கண்காணிக்கிறது.
சிறப்பம்சங்கள்
14 நாட்கள் அளவிலான பேட்டரி திறன்.
97 சதவீதத் துல்லிய இதயத்துடிப்பு வீதம் கண்காணிப்பு.
1.43 அங்குல அமோலெட் டிஸ்பிளே.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயல்படும் வசதி.
சாதகங்கள்
30 மணி நேர பேட்டரி வசதி.
5 நிமிடங்களில் முழு சார்ஜ் வசதி.
இரத்தத்தில் ஆக்சிஜன் செறிவைக் கண்காணிக்கும் வசதி.
பாதகம்
செயலியானது போதிய அளவிற்கு மேம்படுத்தாமல் இருத்தல்.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சியின் இடையே போதிய ஓய்வு அவசியமா?
Fitbit Versa 4 Fitness Watch
விலை ரூ. 16,998
Fitbit Versa 4 Fitness Watch இலகுரக ஃபிட்னெஸ் வாட்ச் ஆகும். அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சிறப்பம்சங்கள்
6 நாட்கள் வரையிலான பேட்டரி சார்ஜ்.
வைப்-பை மூலமும் இணைக்கும் வசதி.
1.58 அங்குல டிஸ்பிளே.
துல்லிய இதயத்துடிப்பு அளவீடு.
துல்லிய உடற்பயிற்சி அளவீடு.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
சாதகங்கள்
நவீன வடிவமைப்பு.
40க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள்.
பாதகம்
விலை அதிகம் மற்றும் ஸ்டோரேஜ் வசதி இல்லாதது.
Samsung Galaxy Watch 4
விலை ரூ. 11,990
சிறப்பம்சங்கள்
இது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்வாட்ச்.
40 மணிநேரங்கள் கால அளவிலான பேட்டரி திறன்.
1.4 அங்குல அமோலெட் டிஸ்பிளே.
1.5 ஜிபி அளவிலான RAM, 8 ஜிபி மெமரி.
புளூடூத் வசதி.
சாதகங்கள்
துல்லியமான உடல்நல அளவீடுகள்.
சிறந்த வடிவமைப்பு.
பாதகங்கள்
குறைந்த செயல்திறன் பேட்டரி.
குறைந்த அளவிலான மெமரி.
ஆண்ட்ராய்ட் பயனர்கள் மட்டும் பயன்பெறும் வகை.
Fitbit Inspire 3 Health & Fitness Tracker
விலை ரூ. 8,999
இது விலைக்கு ஏற்ற ஸ்மார்ட் வாட்ச். உறக்க முறைகள், மன அழுத்த அளவீடு, ரத்த ஆக்சிஜன் அளவு கண்காணிப்பு போன்ற வசதிகள் உள்ளன.
சாதகங்கள்
மற்றவைகளுடன் ஒப்பிடும்போது விலைக் குறைவு.
10 நாட்கள் வரை நீடிக்கும் பேட்டரி சார்ஜ்.
0.74 அங்குல டிஸ்பிளே.
வைப்-பை மூலம் இணைக்கும் வசதி.
இலகுரக வடிவமைப்பு.
பாதகங்கள்
ஐஓஎஸ் பயன்பாடு இல்லை.
பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ் செய்துகொள்ள இயலாத நிலை.
Amazfit GTS Mini Smart Watch
விலை ரூ. 7,999
உடல்நல ஆர்வலர்களின் சிறந்த தேர்வாக விளங்குகிறது. இதயத்துடிப்பு கண்காணிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு விகிதம் உள்ளிட்டவைகளைத் துல்லியமாக அளவிடுகிறது.
சாதகங்கள்
15 நாட்கள் நீடித்து உழைக்கும் பேட்டரி சார்ஜ்.
1.65 அங்குல டிஸ்பிளே.
120க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள்.
அலெக்ஸா அடிப்படையிலான ஃபிட்னெஸ் டிராக்கர்.
உடற்பயிற்சி மேற்கொள்ளலின் போது, தொலைவு, வேகம், இதயத்துடிப்பு, கலோரி எரிப்பு விகிதங்களை அளவிடுகிறது.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
பாதகம்
ஸ்டோரேஜ் வசதி இல்லை.
Fire-Boltt India’s No.1 Smartwatch Brand Talk 2
விலை ரூ. 1,499
இது பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் ஆகும்,40 மணிநேரப் பேட்டரி திறனுடன் உள்ளது. குரல் உத்தரவுகளின் மூலம் போனை இயக்கும் வசதி, 60க்கும் மேற்பட்ட உடற்பயிற்சி முறைகள் இதில் உள்ளன.
சாதகங்கள்
8 நாட்கள் வரையிலான நீடிக்கும் பேட்டரி.
1.28 அங்குல டிஸ்பிளே.
ஸ்மார்ட் வாட்சின் மூலமாக அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி.
துல்லியமான உரையாடலுக்கு வழிவகுக்கும் மைக் மற்றும் ஸ்பீக்கர்.
புளூடூத் கனெக்டிவிட்டி வசதி.
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் செயல்படும் வசதி.
ஸ்மார்ட் வாட்சின் மூலமாகவே போட்டோ எடுக்கவும் மியூசிக் பிளேயரை இயக்க முடியும்.
பாதகம்
டிஸ்பிளே மிகவும் சிறியதாக உள்ளது. ஸ்டோரேஜ் வசதி இல்லை.
உங்கள் உடல்நலனுக்கும் பட்ஜெட்டிற்கும் ஏற்ற தேர்வுகளைச் செய்து, அதைக் கவனமாகக் கையாண்டு, உடல்நலத்தைப் பேணிக் காப்போம்.