உடல்நல கண்காணிப்புச் செயலிகளின் சிறப்பம்சங்கள்
Apple Smart Watchகள், நவநாகரீகத்தின் அடையாளம் மட்டுமல்லாது, உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவல்லப் பயனுள்ள சாதனமும் தான். ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள், நல்வாழ்வைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாது, அதை மேம்படுத்துவதற்கு ஏதுவான அம்சங்களை வழங்குகிறது. இந்த வாட்ச்களில் ECG செயலி, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு அளவைக் கணிக்க உதவுவதற்கான செயலி, இதயத்துடிப்பு வீதத்தை அளக்கவல்லச் செயலி உள்ளிட்டவைகள் அடங்கி உள்ளன.
இதுமட்டுமல்லாது, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் பயனர்கள் மேற்கொள்ளும் மருந்து கண்காணிப்பையும் எளிதாக்குகின்றது. இது மருந்து உட்கொள்ளலை எளிதாக்கவும், அதற்கான நினைவூட்டல்களை உருவாக்கவும், நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களிடையே, மருத்துவப் பதிவேடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் பேருதவி புரிகிறது.
ECG செயலி
ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சில் உள்ள எலக்ட்ரோகார்டியோகிராம் எனும் ECG செயலியானது, ECG அளவீட்டினை எடுக்க உதவுகிறது. இதன்மூலம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பின் வீதத்தை, ஏட்ரியல் ஃபைப்ரிலேசன் (AFib) முறையில் முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.
இச்செயலி பயனர்களின் அறிகுறிகளைப் பதிவு செய்து, முடிவுகளை மருத்துவர்களுடன் PDF ஆகப் பகிர அனுமதிக்கிறது.இது உங்கள் இதய நலன் நிர்வாகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்போதிலும், இதனை முழுமையான சோதனைமுடிவாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இரத்தத்தில் ஆக்சிஜன் செறிவைக் காண உதவும் செயலி
இந்தச் செயலியின் பயன்பாடானது, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இருந்துதான் பிரபலம் அடைந்தது. இந்தச் செயலியானது, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் செறிவைக் (SpO2) கணக்கிட உதவுகிறது. இந்த அளவீடானது, உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை நுரையீரல் மற்றும் ரத்த ஓட்ட மண்டலம் வழங்கும் வீதத்தைக் குறிக்கின்றது. SpO2 அளவீடானது 95 முதல் 100 சதவீத அளவினதாக இருக்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று, ஆஸ்துமா, இதயச் செயலிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறிய பேருதவி புரிகிறது.
இதயத் துடிப்பு அறிவிக்கைகள்
இதயத்துடிப்பின் வீதம் கூடினாலோ அல்லது குறைந்தாலோ, அதற்கான முன்னறிவிப்புகளை, ஆப்பிள் வாட்ச் பயனர்களுக்கு, முன்கூட்டியே அறிவிக்கச் செய்கிறது. இந்த எச்சரிக்கை அமைப்பு, ஐபோனின் உடல்நல செயலி மூலம் வரம்புகளைத் தனிப்பயனாக்கவும், அறிவிப்புகளை நிறுத்தவும் அனுமதிக்கிறது.இது அடிப்படையான மருத்துவ நிலைமைகளுக்கான துவக்கநிலை எச்சரிக்கையாகவும் உள்ளது.
கீழே விழுவதைக் கண்டறிதல்
இந்த அம்சமானது, ஆபத்துக் காலங்களில் உங்களுக்கும் மிகவும் பயன் தரும் வகையிலான முக்கிய அம்சம் ஆகும். நீங்கள் எவ்விதச் செயல்பாடுகளும் இன்றி அசைவற்றுக் கிடப்பதை, ஆப்பிள் வாட்ச் உணரும்பட்சத்தில், அது தன்னிச்சையாகவே, அவசரச் சேவைகளுக்கான அழைப்பைத் துவங்குகிறது. இத்ற்குமாறாக, ஆப்பிள் பயனர்கள், ஸ்மார்ட்வாட்ச்சின் பக்கவாட்டில் உள்ள பட்டனைத் தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அவசரச் சேவைகளுக்கான அழைப்புகள் அல்லது நாம் வாட்ச்சில் அவசரத் தேவைக்குத் தொடர்பு கொள்ள என்று குறிப்பிட்டு உள்ள நபருக்கு அழைப்புகள் சென்று விடும்.
மேலும் வாசிக்க : வயதுமூப்பு நிகழ்வில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்
சாம்சங் கேலக்ஸி வாட்ச்களில் உள்ள சிறப்பம்சங்கள்
ஆப்பிள் நிறுவனத்திற்குக் கடும் போட்டியாகத் திகழும் சாம்சங் நிறுவனமும், உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதற்கான அம்சங்களை, தங்களது நிறுவனத் தயாரிப்புகளில் புகுத்தி, பயனர்களிடையே நன்மதிப்பைப் பெற்று வருகிறது.
சாம்சங் கேலக்ஸி வாட்ச்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மேம்படுத்தல்களில் மிகவும் முக்கியமானது எனர்ஜி ஸ்கோர் ஆகும். இது தனிப்பட்ட மருத்துவ அளவீடுகளின் ஒருங்கிணைந்த பகுப்பாய்வின் மூலம், சாம்சங் பயனர்கள், தங்களின் அன்றாட நிலைக் குறித்து புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த நிகழ்வில் உறக்கம், இதய நலன் மற்றும் செயல்பாடுகளின் தரவுகள், பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. உறக்கக் கால அளவு, படுக்கை நேர நிலைத்தன்மை, உறக்கத்தில் இருந்து எழுந்து இருக்கும் நிலைத்தன்மை உள்ளிட்டவைக் கண்காணிக்கப்படுகின்றன. இது அன்றைய அளவீட்டை, முந்தைய அளவீட்டுடன் ஒப்பீட்டுப் பார்க்கின்றது. கூடுதலாக, இந்த எனர்ஜி ஸ்கோர் அம்சமானது உறக்க நிலையில், இதயத்துடிப்பின் அளவு மற்றும் அதில் நிகழும் மாறுபாடு உள்ளிட்டவைகளையும் பதிவு செய்கிறது.
அடுத்த அம்சமான ஆரோக்கிய உதவிக்குறிப்புகள், பயனர் அடைய விரும்பும் குறிப்பிட்ட இலக்கின் அடிப்படையில் நுண்ணறிவுகள், ஊக்கமளிக்கும் உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம் பயனர்த் தங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைய உதவும்.
Wellness Tips
இந்த அம்சமானது, பயனர்கள் அடைய விரும்பும் இலக்கின் அடிப்படையிலான நுண்ணறிவுகள், பயனர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான உதவிக்குறிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதன் மூலம், அவர்களின் தனிப்பட்ட இலக்குகளை எட்ட உதவுகின்றன..
தடகள வீரர்கள் மற்றும் சைக்கிளிங் செய்பவர்கள் பலன் அடையும் வகையில், அவர்களுக்கு நிபுணத்துவம் பெற்ற தொழில்துறை நிபுணர்ப் பயிற்சி அளிப்பதைப் போன்ற வகையிலான தனிப்பயனாக்கப்பட்ட ஆரோக்கிய விகிதமானது அமைந்துள்ளது.
உடற்பயிற்சி முறையில், தங்களது பயனர்களுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை அளிக்கும் பொருட்டு, வெவ்வேறு செட்கள் பயிற்சிகளைச் சேர்க்கின்றது.
உடல்நலத்தைக் கண்காணிக்கும் செயலிகளில், அவ்வப்போது புதுப்புது மாற்றங்கள் வந்தபோதிலும், பயனர்கள் தங்களுக்கு எது பொருந்துமோ, அத்தகைய பயன்பாட்டு அம்சங்களைத் தேர்ந்தெடுத்து, ஆரோக்கியமான நல்வாழ்க்கை அமைத்துக் கொள்வீராக…