DNA அடிப்படையிலான உணவுமுறைப் பலனளிக்கிறதா?
நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்புபவரா? அதற்குக் கீட்டொஜெனிக் உணவுமுறையைப் பின்பற்ற தயாரா அல்லது உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிப்பீர்களா?.இதில் நீங்கள் ஏதாவது ஒரு முறையைக் கூடப் பின்பற்றி இருக்கலாம். மரபணுப் பகுப்பாய்வு ஊட்டச்சத்து மருத்துவமுறை, தற்போது, மருத்துவத்துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சியும் மருத்துவத் துறையின் முன்னேற்றமும், மக்களை தனிப்பட்ட ஜீனோமிக்ஸ் சோதனை செய்ய ஊக்குவிக்கிறது.இரத்தம், எச்சில் உள்ளிட்டவைகளின் மாதிரிகளைச் சேகரிப்பதன் மூலம், ஒருவரது ஜீன் மாதிரிகளை நாம் பெற முடியும். இதன்மூலம் ஒருவர் மரபியல் ரீதியாகவே உடற்பருமன் நிலையைப் பெற்றிருப்பார் என்பதை அறிந்துக் கொள்ள இயலும்.
நியூட்ரிஜீனோமிக்ஸ்
மரபியல் மற்றும் ஊட்டச்சத்துத் தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைத்து, மக்களின் மரபணுக்களின் அடிப்படையில், அவர்களின் உணவுமுறையைச் சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் அறிவியலே, நியூட்ரிஜீனோமிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நமது வாழ்க்கைமுறையில் பின்பற்றப்படும் நடத்தை முறைகள் மற்றும் உணவுமுறைக்கு இடையிலான தொடர்பை, மரபணு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை விளக்குகிறது.
DNA உணவுமுறை, சமீபகாலமாக மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உடல்நலத்தில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் உள்ளிட்டவர்களால், அதிகளவில் விவாதிக்கப்படும் விசயமாக மாறி உள்ளது. மற்ற உணவுமுறைகளைப் போன்று அல்லாமல், இத்தகைய உணவுமுறையில் உடல் எடையைக் குறைக்க, எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று சிலர் நம்புகின்றனர். இன்னும் சிலரோ, இத்தகைய உணவுமுறையால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் குறைப்பு நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளனர்.
DNA உணவுமுறை
உணவுப்பழக்கவழக்கத்தின் எதிர்மறையான விளைவுகளை அகற்றும் பொருட்டு, உணவுமுறைகளானது, அவரவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப, சீரமைக்கப்பட்டன. சிலர்த் தாங்கள் பின்பற்றி வந்த உணவுமுறையினை நிறுத்திய பிறகு, அவர்களின் உடல் எடைக் கணிசமான அளவிற்கு அதிகரிப்பதைக் கண்கூடாகக் கண்டனர். அவர்களுக்கு, இந்த உணவுக் கட்டுப்பாட்டு முறையும், ஒருவிதப் பலவீனத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்தனர். DNA உணவுமுறை, உங்களை எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் உள்ளாக்காமல், எடை இழப்புக்குக் காரணமாக அமைவதோடு மட்டுமல்லாது, எவ்விதப் பலவீனத்தையும் உருவாக்குவது இல்லை.
ஒவ்வொரு உணவுப்பொருட்களிலும் வெவ்வேறான மரபணுக் கலவை இருப்பதால், அவை அனைவருக்கும் ஒரேவிதமான விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை. ஒரு குறிப்பிட்ட நபரின் மரபணு வகையை ஆராய்ந்தப் பின்னர், உருவாக்கப்பட்ட உணவுமுறை, அது அந்தக் குறிப்பிட்ட நபருக்கான உணவுமுறையாக மட்டுமே அமையும். இந்த உணவுமுறையானது, உங்களது ஆரோக்கியம் சார்ந்த இலக்குகளை, விரைவாக எட்ட உதவுகிறது.
மேலும் வாசிக்க : மரபியல் அல்லது மரபணுக் குறிப்பான்கள் என்றால் என்ன?
எவ்வாறு வேலைச் செய்கிறது?
ஒருவரது மரபணு வகையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட உணவுமுறையானது, அந்தக் குறிப்பிட்ட ஒருவருக்கே, பலன் அளிக்கும் என்று பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். மரபணுச் சோதனை மற்றும் நியூட்ரிஜீனோமிக்ஸ் அறிவியலைப் புரிந்துகொண்டபிறகே, இந்த உணவுமுறைக் குறித்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மரபணு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, உடலின் தேவைகளை அறிந்து கொள்ள, DNA சோதனைகள் பேருதவி புரிகின்றன. இந்தச் சோதனையின் அறிக்கைகள், உணவுப் பரிந்துரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவரது மரபணு வகையை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட உணவுமுறையானது, அந்தக் குறிப்பிட்ட ஒருவருக்கே, பலன் அளிப்பதால், அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நோயிலிருந்து நிவாரணம் அடைய உதவுகிறது.
சரியான உணவுமுறையைத் தேர்வு செய்தல்
உடல் ஆரோக்கியத்திற்கு, சரியான உணவுமுறையைத் தேர்ந்தெடுக்கவும் அதைச் செயல்படுத்தவும் DNA சோதனைகள் இன்றியமையாததாக உள்ளது. இது கிட்டத்தட்ட உண்மைத் தான். குறைந்த அளவிலான கொழுப்பு கொண்ட உணவு வகைகள் மற்றும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் கொண்ட உணவு வகைகள், உடல் எடையைக் குறைக்கும் என்பது, DNA சோதனையில் புலனாகின்றது. அதைப் போலவே, உங்களைப் தொந்தரவு செய்யும் நோய்ப்பாதிப்புகளில் இருந்து காப்பதற்கான உணவுப் பரிந்துரைகளை வழங்கவும், மரபணுச் சோதனைகள் உதவுகின்றன.
உலகளவில் பரவலாக காணப்படும் உடல் எடை பிரச்சனைகளை DNA உணவுமுறை மூலம் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்..