MRI ஸ்கேன் எடுக்க ஆகும் கால அளவு என்ன?
நீங்கள் மூட்டு வலி, முதுகு வலி உள்ளிட்ட சுகவீனங்களால் அவதிப்படுகிறீர்களா?. இந்த வலிகளுக்கு என்ன காரணம் என்பதை அறிய அப்பகுதியில் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பதேச் சிறந்த முறை ஆகும். ஸ்கேன் முறைகளில் சிறந்தது காந்த அதிர்வு இமேஜிங் என்றழைக்கப்படும் MRI ஸ்கேன் முறை என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
MRI ஸ்கேன் சோதனையில், வலிமையான காந்தப்புலத்தின் உதவியுடன், ரேடியோ அலைகள், உடலில் செலுத்தப்பட்டு, வெளிவரும் சிக்னல்களை, ஸ்கேனரில் இணைக்கப்பட்டு உள்ள கணினி, முப்பரிமாண படங்களாக மாற்றுகிறது. இதன்மூலம், உடலில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை, மருத்துவர்த் தெளிவாக அறிந்து கொண்டு அதற்கேற்ற சரியான சிகிச்சையை அளிக்க முடியும்.
இது வலி இல்லாத சோதனை முறை என்பதால், பெரும்பாலானோர், இந்த முறையையே பரிந்துரைக்கின்றனர். உடலில் ஏற்பட்டு உள்ள பாதிப்பிற்கான காரணங்களைக் கண்டறிய MRI ஸ்கேன் எடுக்க விரும்புபவர்கள், ஒவ்வொரு உறுப்பிற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் வசதிக்காக, ஒவ்வொரு உறுப்பு வாரியாக, MRI ஸ்கேன் எடுக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்பதையும், கண்டறியப்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.
மூளைப் பகுதியில் MRI ஸ்கேன்
கால அளவு : 12 முதல் 20 நிமிடங்கள்*
மூளை மற்றும் அப்பகுதியைச் சுற்றியுள்ள நரம்புத் திசுக்களைப் படம்பிடிக்கிறது.
பிறப்புக் குறைபாடுகள்
இரத்தப்போக்கு
மூளைச் சீழ்க்கட்டி
மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ்
பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளை, இதன்மூலம் கண்டறியலாம்.
மார்பகப் பகுதியில் MRI ஸ்கேன்
கால அளவு : 30 – 60 நிமிடங்கள்*
மார்பகம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில், கதிரியக்க உதவி இன்றி மேற்கொள்ளப்படும் MRI ஸ்கேன் சோதனை ஆகும்.
மார்பகப் புற்றுநோயைக் கண்டறிதல்
மார்பகத்தில் ஏற்படும் கட்டியை மதிப்பிடுதல்
மார்பக மாற்று சிகிச்சைக்கு வாய்ப்பு உள்ளதா என்பதைக் கண்காணித்தல்
மார்பகங்களில் ரத்த ஓட்ட மாறுபாட்டைக் கண்டறிதல்
உள்ளிட்டவை, இந்த மார்பக MRI ஸ்கேன் சோதனையின் மூலம் கண்டறியலாம்.
இடுப்பு எலும்பு பகுதியின் MRI ஸ்கேன்
கால அளவு : 15 – 20 நிமிடங்கள்*
கழுத்துப் பகுதியிலிருந்து துவங்கும் முதுகெலும்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சோதனை ஆகும்.
முதுகெலும்பில் ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு
முதுகெலும்பு பகுதியில் ஏற்படும் காயங்கள்
மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ்
ஸ்கோலியோசிஸ்
பிறப்பிலேயே ஏற்படும் முதுகெலும்பு குறைபாடுகள் உள்ளிட்டவற்றைக் கண்டறிய இந்த ஸ்கேன் உதவுகிறது.
மேலும் வாசிக்க : திறந்த முறை MRI VS மூடிய வகை MRI – சாதக, பாதகங்கள்
முழங்கால் பகுதியின் MRI ஸ்கேன்
கால அளவு : 30 – 60 நிமிடங்கள்*
முழங்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் MRI ஸ்கேன்
சோதனை ஆகும்ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பால் ஏற்படும் சேதங்கள்
எலும்பு முறிவுகள்
விளையாட்டின் போது ஏற்படும் முழங்கால் காயங்கள்
கட்டிகள் உள்ளிட்ட பாதிப்புகளை, இந்தச் சோதனையின் மூலம் கண்டறியலாம்
இடுப்பு முதுகெலும்பு பகுதியின் MRI ஸ்கேன்
கால அளவு : 30 – 60 நிமிடங்கள்*
முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஸ்கேன் சோதனை ஆகும்.
முதுகுவலி
பிறப்பில் ஏற்படும் குறைபாடுகள்
வட்டுக் குடலிறக்கம்
முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் காயங்கள்
மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியலாம்.
தோள் பகுதியில் MRI ஸ்கேன்
கால அளவு : 15- 45 நிமிடங்கள்*
தோள்பட்டை மூட்டுப் பகுதியில் உள்ள எலும்புகள், தசைநாண்கள், ரத்த நாளங்கள் உள்ளிட்டவற்றை ஸ்கேன் செய்து பார்ப்பது ஆகும்.
சிறுகட்டிகள்
தோள்பட்டையில் எலும்பு முறிவு
உள்ளிட்ட பாதிப்புகளைக் கண்டறியலாம்.
உங்களுக்கு எப்பகுதியில் பாதிப்பு உள்ளதோ, அந்தப் பிரத்யேகப் பகுதியில் MRI ஸ்கேன் சோதனை மேற்கொண்டு, பாதிப்பிலிருந்து மீண்டு, புத்துணர்வு பெறுவீராக…..