A senior man poses for a photo, holding a glass of juice and raising his arm happily.

வயதுமூப்பு நிகழ்வில் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்

வயது மூப்பு என்பது நாம் வாழும் வாழ்க்கையின் ஒருபகுதி ஆகும். இது இயற்கையாக ஏற்படும் நிகழ்வு ஆகும். இந்தக் காலகட்டத்தில், நமது ஊட்டச்சத்துத் தேவைகளும் மாற்றம் அடைகின்றன. நமக்கு வயதாகும் போது, நமது உடலில் பல்வேறு வகையான மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாது, ஊட்டச்சத்துத் தொடர்பான நிகழ்வுகளில் மாற்றங்கள் அவசியமாகின்றன. இந்தச் செய்தித்தொகுப்பு வயதானவர்களுக்கான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழும் வழிமுறைகளையும் விவரிக்கிறது.

வயதானவர்களுக்கான மாறிவரும் ஊட்டச்சத்துத் தேவைகள்

நமக்கு வயதாகும்போது, நமது உடலில் உள்ள தசைகள் வலிமை இழக்கின்றன. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் மாற்றங்களால், பசியின்மை மற்றும், செரிமானத்தில் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. வயதுமூப்பு நிகழ்வில், தேவைப்படும் ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ப, நாம் நமது உணவுமுறையில் மாற்றங்களை மேற்கொள்வது முக்கியமானதாகிறது.

வயதானவர்களுக்குத் தேவையான முதன்மையான ஊட்டச்சத்துகள்

புரதங்கள்

தசைகளின் வலிமையைப் பராமரிக்கவும் மற்றும் உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் புரதங்கள் இன்றியமையாததாக உள்ளன. இறைச்சிகள், மீன், பால் பொருட்கள், பயறுகள், பருப்புகள் உள்ளிட்ட தாவர உணவு வகைகளில் புரதமானது அதிகளவில் காணப்படுகிறது.

கால்சியம் மற்றும் வைட்டமின் D

எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் D, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பில் இருந்தும் நம்மைக் காக்கிறது. பால் பொருட்கள், வலுவூட்டப்பட்ட உணவு வகைகள், கீரை வகைகள் உள்ளிட்டவைகளில் இந்தச் சத்துகள் அதிகம் உள்ளன.

நார்ச்சத்து

செரிமானத்திற்கும், மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படாமல் காக்கவும், நார்ச்சத்து முக்கியமானதாக உள்ளது. முழுத்தானியங்கள், பழ வகைகள், காய்கறிகள் உள்ளிட்டவைகளில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

வைட்டமின் B12

நரம்புகளின் செயல்பாட்டில் முக்கியப் பங்களிக்கும் இந்த வைட்டமின், ரத்த சிவப்பணுக்கள் உருவாக்கத்திலும் இன்றியமையாததாக உள்ளது. விலங்கு உணவுகளில், இந்த வைட்டமின் அதிகம் காணப்படுகிறது. உடனடியாகத் தேவைப்படுபவர்களுக்கு, சப்ளிமெண்ட்களின் வழியாகவும், இது வழங்கப்படுகிறது.

A close-up view of foods rich in omega-3 fatty acids.

ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள்

இதய ஆரோக்கியம் மற்றும் சிந்தனைத் திறன் மேம்பாட்டிற்கு, ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சாலமோன், மேக்கெரல் வகை மீன்கள், ஆளி விதை உள்ளிட்டவைகளில், ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன.

நீரேற்ற அளவு

வயதானவர்களுக்குக் குறைவான வேகத்திலேயே வளர்சிதை மாற்றம் நிகழும் என்பதால், அவர்களுக்குக் குறைந்த அளவிலான கலோரிகளே போதுமானதாக உள்ளது. அவர்கள் அதிகளவிலான உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், உடலில் எப்போதும் தேவையான அளவிற்கு நீரேற்றம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலின் நீரேற்ற நிகழ்வானது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது. உடலில் இருந்து நீரை இழக்கும் நிகழ்வானது, வயதானவர்களிடையே அதிகம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு உணவூட்ட முறையை நிர்வகித்தல்

வயதானவர்களுக்கு, நீரிழிவுப் பாதிப்பு, ஹைபர்டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்தம், உணவு ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. தனிப்பட்ட உணவுத்திட்டத்திற்கு மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.

மேலும் வாசிக்க : மன அழுத்த நிவாரணத்திற்கு யோகா எவ்வாறு உதவுகிறது?

உணவுத் திட்டமிடல் மற்றும் ஸ்மார்ட் உணவு விருப்பங்கள்

ஒரே தட்டில் பலவகையான உணவுகள்

முழுத் தானியங்கள், புரதங்கள் கொண்ட உணவு வகைகள், காய்கறிகள் மற்றும் பழ வகைகள் கொண்ட சரிவிகித உணவுமுறையானது, நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளைக் குறைக்கவும்

பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்கு, உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. எனவே, இந்த உணவு வகைகளை, போதுமானவரைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சமையல் முறைகள்

ஆரோக்கியமான சமையல் முறைகளைத் தேர்ந்தெடுத்து, வறுத்த உணவுகளைக் கூடுமானவரைக் குறைத்துக் கொள்வது நல்லது.

போதிய கவனம்

பசி உணர்வு உள்ளிட்டவைகளுக்குப் போதிய முக்கியத்துவத்தை அளித்து, உணவை முழுமனதோடு சுவைத்துச் சாப்பிடவும்.

உடற்பயிற்சி பழக்கவழக்கங்கள்

ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு, சரிவிகித ஊட்டச்சத்து முறை மற்றும் உடற்பயிற்சி பழக்கம் மிகவும் இன்றியமையாததாகும். உடல் தசைகளின் வலிமை, நெகிழ்வுத்தன்மை, உடலின் சமநிலையைக் காக்க, உடற்பயிற்சிகள் பேருதவி புரிகின்றன.

ஊட்டச்சத்து முறையானது, வயதானவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பினருக்கும் இன்றியமையாததே ஆகும். சரியான ஊட்டச்சத்து முறையைக் கவனமுடன் தேர்ந்தெடுத்து, அதைப் பின்பற்றினால் ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.