வெற்றிகரமான மனந்தெளிநிலைச் சிகிச்சை முறைகள்
மனந்தெளிநிலை அல்லது தெளிவான மனநிலை என்பது, பண்டையக்கால புத்த மரபுகளில் காணப்படும் மன அமைதி சார்ந்த நடைமுறையாகும். இந்த நடைமுறையானது, மருத்துவம் மற்றும் உளவியல் துறைகளில், உரிய அங்கீகாரத்தைப் பெற்று உள்ளது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒரு செயலில் ஈடுபடுதல், அதன் முடிவுகளை மாற்றாமல் ஏற்றுக் கொள்வதாகும்.
25 வயது இளைஞர்
25 வயதான இளைஞர், மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால், அவரது கோபம் அதிகரித்துக் காணப்பட்டது.இதன்காரணமாக, அவரது உறவுகள் பாதிக்கப்பட்டு இருந்தன. கல்வி நடவடிக்கைகளிலும் அவரால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை.
முக்கிய பாதிப்புகள்
அதீதக் கவலை, பதட்டம், பய உணர்வைக் கட்டுப்படுத்துவதில் சிரமம், மன அமைதி இல்லாத நிலை, உடல் சோர்வு, எரிச்சல் நிலை, உறக்க நிகழ்வில் பாதிப்புகள்.
மதிப்பீடுகள்
ஹேமில்டன் கவலை அளவீடு, பெக் கவலை மதிப்பீடு.
நோயறிதல்
பொதுவான கவலைக் குறைபாடு
முதலில், நோய்ப்பாதிப்பு அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர் நடத்தைத் தளர்வு நுட்பங்கள், மனந்தெளிநிலை, பதட்ட நிர்வாகம், விழிப்புணர்வு மற்றும் உணர்ச்சிக் கட்டுப்பாடு ஆகியவைக் கற்பிக்கப்பட்டன.அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி, எதிர்மறை எண்ணங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன.
மன அழுத்தத்தை நிர்வகிப்பது மற்றும் உறவுகளுக்கிடையே சுமூக நிலையைப் பேணுவது உள்ளிட்ட உளவியல் சார்ந்த நிகழ்வுகள் குறித்த பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
30 வயது இளைஞர்
நடத்தைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட 30 வயது இளைஞன்.
முக்கிய பாதிப்புகள்
அதீதக் கோபம், தானாகச் சிரிப்பது, சுயச்சுகாதாரப் பராமரிப்பு இன்மை, தற்கொலை எண்ணம், வினோதமான நடத்தைகளை வெளிப்படுத்துதல்.
மதிப்பீடுகள்
ரோர்ஷாக் இங்க்பிளாட் சோதனை, நோயின் நேர்மறை மற்றும் எதிர்மறைச் சோதனை.
நோயறிதல்
மனச்சிதைவு நோய்ப்பாதிப்பு.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறைகளைப் பயன்படுத்தி, நோயாளியின் பகுத்தறிவற்ற நம்பிக்கைகள் களையப்பட்டு, கோப மேலாண்மை மேம்படுத்தப்பட்டது. நோயாளியின் பலங்களை முதலீடாக வைத்து, எதிர்மறை எண்ணங்கள், நேர்மறையினதாக மாற்றப்பட்டன. இதன்காரணமாக, அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அதிகரித்தது. இயங்கியல் அடிப்படையிலான நடத்தைச் சிகிச்சை முறையின் உதவிகொண்டு, துன்ப நிகழ்வுகளுக்கான சகிப்புத்தன்மைத் திறன்கள், மனந்தெளிநிலை, உணர்ச்சிகளின் கட்டுப்பாடு, உறவுகளைப் பேணல் உள்ளிட்ட நிகழ்வுகள் கற்பிக்கப்பட்டன. வீட்டுச் சூழலை ஒருங்கிணைக்கவும், உளவியல் கல்வி கற்பிக்கப்பட்டது. இலக்குகள் கண்டறியப்பட்டு, அதை அடைவதற்கான திறன்கள் மேம்படுத்தப்பட்டன.
35 வயது பெண்
35 வயது பெண், சிகிச்சைக்காக, அவரது பெற்றோரால் அழைத்து வரப்பட்டார்.
முக்கியப் பாதிப்புகள்
நிலையற்ற உறவுத்தன்மை, கைவிடப்பட்டுவிடுவோமோ எனும் பய உணர்வு, சுய உணர்வில் நிலையற்ற தன்மை, மனக்கிளர்ச்சி, தேவையில்லாத கோப உணர்வு, வெறுமை உணர்வுகள்.
மதிப்பீடு
கருப்பொருள் மதிப்பீட்டுச் சோதனை.
நோயறிதல்
எல்லைக்கு உட்பட்ட ஆளுமைக் குறைபாடு.
அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை அவரின் கோபத்தையும் காயங்களையும் குணப்படுத்த பயன்படுத்தப்பட்டது.உணர்ச்சிக் கட்டுப்பாடு, உறவுப் பேணுதல், சகிப்புத்தன்மை ஆகியவை இயங்கியல் நடத்தைச் சிகிச்சை மூலம் கற்பிக்கப்பட்டன. வாழ்க்கைமுறை மேலாண்மையின் விளைவாக, நேர்மறையான அணுகுமுறைப் பராமரிக்கப்பட்டது. உடல் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆக்கபூர்வ பழக்கங்களும் உருவாக்கப்பட்டன.குடும்ப வாழ்க்கைமுறையில், முரண்பாடுகள் களையப்பட்டன. நோயாளி சேமிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள நிதி நிர்வாகம் கற்பிக்கப்பட்டது.
மேலும் வாசிக்க : மன அழுத்த நிர்வாகத்தில் மனந்தெளிநிலையின் நன்மைகள்
31 வயது இளைஞர்
அதீத மனக்குழப்பம் மற்றும் கவலைப் பாதிப்பிற்கு உள்ளான 31 வயது இளைஞர்.
முக்கிய பாதிப்புகள்
உறக்க நிகழ்வில் பாதிப்புகள், அதிக ஞாபக மறதி, போதிய கவனமின்மை, பசி உணர்வு குறைதல், மனதுக்குப் பிடித்த நிகழ்வுகளில் விருப்பம் இல்லாத நிலை, குடும்பம், மனைவி மற்றும் நண்பர்களிடமிருந்து தனித்து இருத்தல்.
மதிப்பீடு
பெக் மனச்சோர்வு குறைபாடு.
நோயறிதல்
மனத்தளர்ச்சிக் குறைபாடு.
மனந்தெளிநிலைச் சிகிச்சையின் விளைவாக, செயலற்ற மற்றும் பகுத்தறிவற்ற எண்ணங்கள் அகற்றப்பட்டன. உறவுகளிடையே காணப்படும் பிணக்குகள், மன அழுத்த நிர்வாகம், தகவல் தொடர்பு சிக்கல்களைச் சமாளிக்கும் பொருட்டு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
81 வயது மூதாட்டி
கணவர் 25 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். மகன்கள் வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்டதால், முதியோர் இல்லத்தில் வசிக்கும் 81 வயது மூதாட்டி.
முக்கிய பாதிப்புகள்
மனநிலையில் ஏற்ற, இறக்கங்கள்.
மதிப்பீடு
டிமென்சியா, மனச்சோர்வு அளவீடு.
நோயறிதல்
மனச்சோர்வுடன் கூடிய டிமென்சியா.
அறிவாற்றல் தூண்டுதல் சிகிச்சையானது, டிமென்சியா பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும், சமூகத் தொடர்புகளைப் பராமரிக்கவும் உதவியது. உணர்ச்சி ஒழுங்குமுறை மற்றும் உறவுகளைப் பேணுதல் நிகழ்வுகளுக்கு, இயங்கியல் நடத்தைச் சிகிச்சை முறையானது உதவியது.
இத்தகைய மனந்தெளி நிலைச் சிகிச்சைகளைக் கவனமுடன் கையாண்டு, மனநலம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து விடுபட்டு, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…