மனநல திட்டங்களில் சிகிச்சைகளின் ஒருங்கிணைப்பு
மன ஆரோக்கியம் என்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு சார்ந்த விசயமாகும். இன்றைய போட்டி உலகில், நாம் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கவனிக்கத் தவறுகிறோம்.இந்தியாவில் 5 பேரில் ஒருவர், மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. மனநல ஆரோக்கியம், பராமரிப்பு அதுகுறித்த விழிப்புணர்வு என்றாலே, மக்கள் மத்தியில் தவறான எண்ணமே நிலவி வரும் நிலையில், தேவையான உதவியைப் பெறுவதற்கே, தயக்கம் காட்டும் சூழல், இங்கு நிலவி வருவது வருத்தம் அளிக்கிறது.
மனநல அறிகுறிகளுக்குச் சிகிச்சை அளிப்பதை விட, கவனிப்பு மற்றும் ஆதரவு அளிப்பதே அந்த நபரை விரைவில் குணப்படுத்தும்.இத்தகைய அணுகுமுறையையே, முழுமையான மன ஆரோக்கியப் பராமரிப்பு என்று வரையறுக்கிறோம். இது அவர்களின், உடல், உணர்ச்சி, சமூகம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் காரணிகளைக் கவனித்துக் கொள்ளும் வகையில் உள்ளது.மனநலப் பாதிப்புகளுக்குக் காரணமான காரணிகளை, நிவர்த்தி செய்கின்றது. மருத்துவ சிகிச்சை முறை, மருந்துகள், ஊட்டச்சத்து வகையிலான உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் இதில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதால், முழுமையானதொரு சாதகமான முடிவு கிடைக்கின்றது.
மனநலப் பாதிப்பில் இருந்து குணப்படுத்துதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்ப தேவையான அதிகாரம் அளிப்பதே, முழுமையான மனநல ஆரோக்கியத்தின் பராமரிப்பின் முக்கியக் குறிக்கோளாகக் கருதப்படுகிறது. இவர்கள், எந்தநேரத்திலும், மனநலப் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகின்றன.
முழுமையான மனநல ஆரோக்கியத்தின் பராமரிப்பு நிகழ்வானது, சிக்கலான மற்றும் பன்முகப் பிரச்சினையை, முழு உத்வேகத்துடன் வினைபுரிகிறது. திறமையான சிகிச்சைக்கு, ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட மற்றும் விரிவான அணுகுமுறை அவசியமாகின்றது. சில தருணங்களில், மனநலப் பாதிப்பிற்கு ஆட்பட்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயோ அல்லது அடையாளம் காண முடியாத நிலையில், சிகிச்சை அளிப்பது தாமதமாகலாம்.
பயிற்சி பெற்ற மருத்துவர்களால் நிர்வகிக்கப்படும் மனச்சோர்வுப் பாதிப்பு , ஆளுமைப் பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் உள்ளிட்டவைகளில், எது தேவை என்பதை அவர்களால் அறிய முடியும். நீங்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருந்தால், தொழில்முறை வழிகாட்டுதலின்படி, சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மனநலச் சுகாதாரச் சேவைகளை, மனநலப் பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான மையங்கள் முழுமையான அளவில் வழங்கி வருகின்றன.
உளவியல் சிகிச்சை மற்றும் ஆலோசனைமுறை
மனக்கவலை
மன இறுக்கம்
மன அழுத்தம் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு, உளவியல் சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனை முறைகள் வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் உரித்தான தனிப்பட்ட உளவியல் சிகிச்சை அல்லது ஆலோசனை முறைகளை, பயிற்சி அனுபவம் வாய்ந்த மனநல நிபுணர்கள், மேற்கொண்டு வருகின்றனர். உளவியல் நிபுணர்கள், உங்கள் தனியுரிமைக் குறித்த பாதுகாப்பில் 100 சதவீதம் நம்பகத்தன்மைக் கொண்டிருக்க வேண்டும்.
மனநல மருத்துவ சிகிச்சை முறைகள்
மனநல நிபுணர்கள் மனநலப் பாதிப்பிற்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கின்றனர்.உறக்கக் குறைபாடுகள், அதீத அழுகை, பயம் போன்றவை நோயாளிகளின் அடிப்படைச் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்தவே, மனநல நிபுணர்களின் தேவை அவசியமாகின்றது.
கலை அடிப்படையிலான சிகிச்சை முறை
மனநல ஆரோக்கியப் பராமரிப்புக்கு, தற்போதைய சிகிச்சை முறைகளில் நம்பிக்கையின்மை இருந்தாலோ அல்லது பாரம்பரிய சிகிச்சை முறைகளை விரும்பினாலோ, கலை அடிப்படையிலான சிகிச்சை முறைச் சிறந்த தேர்வாகும்.இந்தச் சிகிச்சை முறையானது, உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், அதன்மூலமான தொடர்பிற்கும், கலையைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம், நோயாளிகளுக்கு, இது உரிய நிவாரணத்தை வழங்குகிறது.
மனநல விழிப்புணர்வு மேம்பாடு
மனநல ஆரோக்கியத்திற்கான சிகிச்சையின் அணுகுமுறையை விரிவுபடுத்தும் பொருட்டு, இந்தியாவில், மனநல சுகாதார நிபுணர்கள், நோயாளிகளுக்கிடையே, மனநல ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வை அதிகரிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம், மனநலப் பாதிப்புகளுடன் தொடர்புடைய களங்க உணர்வை அகற்றுவதன் முக்கியம் உணரப்படுகிறது. மனநலப் பாதிப்பானது எவ்வாறு ஏற்பட்டு உள்ளது, அதற்கான சிகிச்சை ஏன் முக்கியம் உள்ளிட்டவைகள் நோயாளிகளுக்கு உணர்த்தப்படுகின்றன.
மனநல ஆரோக்கிய பராமரிப்பு நிகழ்விற்கான சேவைகள் குறித்த புரிதல் நம்மிடையே ஏற்பட்டு உள்ளது. அவைச் செயல்படும் விதத்தை விரைவாக அறிய வேண்டியது அவசியமாகும்.
ஊட்டச்சத்து முறையிலான ஆதரவு
மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, சில மருத்துவ சேவை மையங்கள், ஊட்டச்சத்து முறையிலான ஆதரவை வழங்குகின்றன. இதன்மூலம், மனநல விளைவுகள் மேம்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. சீரான உணவுமுறையானது, உடலின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆற்றல் விநியோகத்தைச் சீராக்க உதவுகிறது. இது ஒருவரின் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.
கவனம்
மனநிலையில் மாற்றம்
மனச்சோர்வுக்குக் காரணமான செரடோனின் சுரப்பு
சமீபத்திய ஆய்வுகளின்படி, இதன் செயல்பாடு நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது.
இயக்கம் அடிப்படையிலான அணுகுமுறை
நம் மனமும், உடலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது ஆகும். இது,நம் அன்றாட வாழ்வின் சில இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதாக, சமீபத்திய ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது வழக்கமான உடற்பயிற்சி நடவடிக்கைகளாகவோ,யோகா, எளிய நடைப்பயிற்சி உள்ளிட்ட இயக்கங்களாகவோ இருக்கலாம்.
மனச்சோர்வினை எதிர்க்கவல்ல, இலவசமான இயற்கை மருந்தாக, உடற்பயிற்சி பழக்கமானது விளங்கி வருகிறது. தினசரி 20 நிமிடங்கள் அளவிற்கு நடைப்பயிற்சி மேற்கொண்டால், அது, நம் மூளையை மகிழ்ச்சியாக வைக்க உதவும் ஹார்மோன்களை வெளியிட உதவுகின்றது. இதன்காரணமாக, இயற்கையான முறையிலேயே, மன அழுத்தமானது கட்டுப்படுத்தப்படுகின்றது. அண்மைய ஆய்வின்படி, நீண்டநேரம் அமர்ந்திருப்பது தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதற்கு நிகரானது.இதன்மூலம் , லைப்ஃஸ்டைல் எனப்படும் வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படும் அபாயம் இரண்டு மடங்கு அதிகரிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையின் நன்மைகள்
மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையானது, அதன் ஒட்டுமொத்த சிகிச்சை நடவடிக்கைகளிலேயே அதிகக் கவனத்தைச் செலுத்துகிறது. மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையின் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன.
விரிவான சிகிச்சைமுறை
மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையானது, உடல், சமூக நல்வாழ்க்கை, உணர்ச்சி உள்ளிட்ட நோயாளிகளின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.
ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மன ஆரோக்கியத்துடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. இதன்காரணமாக, ஒட்டுமொத்த உடல்நலமும், ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது
மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையானது, தியானம், நினைவாற்றல் உள்ளிட்ட பயிற்சிகளை உள்ளடக்கியதாக உள்ளன. இத்தகையப் பயிற்சிகள், உணர்ச்சி ஒழுங்குமுறையை மேம்படுத்தி, சுய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்கின்றன.
மேலும் வாசிக்க : மனஒருமைப்படுத்தல் நிகழ்வு – அறிந்ததும் அறியாததும்…
மேம்பட்ட சமாளிப்பு திறன்
மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம், சமாளிக்கும் திறன்கள் அதிகரிக்கின்றன.
மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலான நுட்பங்கள்
தளர்வு பயிற்சிகள்
ஆரோக்கியமான தொடர்புத்திறன்
உள்ளிட்ட திறன்கள், அன்றாட வாழ்க்கையில் எளிதாகப் பயன்படுத்தும் வகையினதாக உள்ளது.
தனிப்பட்ட சிகிச்சை முறை
மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையானது, நோயாளிகளின் சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கேற்ற வகையிலான சிகிச்சை முறைகளை வடிவமைக்கிறது. இது அவர்களுக்கு மிகுந்த பயன்களைத் தருகிறது.
நோயாளிகளின் ஊட்டச்சத்து முறை, சுய விழிப்புணர்வு, சமாளிக்கும் திறன்களை அதிகரிக்க உதவும் மனநல திட்டங்களில் முழுமையான அணுகுமுறையை மேற்கொண்டு, அவர்களை, நல்வாழ்க்கை வாழச் செய்வோமாக….