Image of a young couple doing plank exercise lying on mats inside a gym with water bottles, dumb bells and other equipments kept around.

உடற்பயிற்சிகள் – உங்களைப் பற்றிச் சொல்வது என்ன?

உடற்பயிற்சிச் சோதனையானது, உடற்பயிற்சி மதிப்பீடு என்றும் வரையறுக்கப்படுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல்நலத்தை நிர்ணயிக்க உதவும் பயிற்சிகளைக் கொண்டுள்ளது.உடலமைப்பு, இதயம், மன அழுத்தம், உறுதித்தன்மை மற்றும் இயக்கம் சார்ந்த சோதனைகள் இந்த உடற்பயிற்சி மதிப்பீட்டில் அடங்கும்.

உடல்நல மேம்பாடு உள்ளிட்ட நோக்கங்களுக்காக, பொருத்தமான உடற்பயிற்சித் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக, இந்த உடற்பயிற்சிச் சோதனைகள் உள்ளன. இந்தச் சோதனைகள், உங்களுக்கு எவ்விதத் தீமையையும் விளைவிக்காது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி இலக்குகள் குறித்த தெளிவான மற்றும் பயனுள்ள நுண்ணறிவுகளை, பயிற்சியாளருக்கும் இது வழங்குகிறது.

பொது சுகாதார மதிப்பீடு

நீங்கள் புதிதாக உடற்பயிற்சி செய்பவராயின், உங்கள் உடல்நலம் சார்ந்த மருத்துவ தகவல்களை, உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. இதற்குமுன்பாக, மருத்துவரிடம் ஒப்புதல் பெற்று உடற்பயிற்சியை மேற்கொள்வது சாலச் சிறந்தது ஆகும்.

பெரும்பாலான உடற்பயிற்சி நிபுணர்கள், உடற்பயிற்சிகளைத் துவக்குவதற்கு முன்னர் உங்களின் உடல்நிலையைப் பரிசோதிக்கும் வகையிலான சில செயல்முறைகளை மேற்கொள்வர். இந்தச் செயல்முறைகளின் மூலம், உயரம், உடல் எடை, ஓய்வு நிலையில் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அளவீடுகள் கிடைக்கப் பெறுகின்றன.

சில பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நடவடிக்கைகள் தொடர்பான தயார்நிலையிலான கேள்வித்தாளைப் (PAR-Q) பயன்படுத்துகின்றனர். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், மருந்துகள் உட்கொள்வதனால் தலைச்சுற்றல் அல்லது வலி உணர்வு ஏற்படுகிறதா மற்றும் உடற்பயிற்சி செய்ய இயலாத நிலைமையை, அந்த மருந்துகள் ஏற்படுத்துகின்றனவா போன்ற கேள்விகள் அதில் இடம்பெறுகின்றன.

உடலமைப்பு சோதனை

உடலமைப்பு என்பது, தசைகள், எலும்புகள், கொழுப்பு உள்ளிட்ட உடலின் மொத்த எடையை உள்ளடக்கிய கூறுகள் என்று வரையறுக்கப்படுகிறது. உடலமைப்பு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு, சில பொதுவான முறைகள், கீழக்கண்ட காரணிகளை உள்ளடக்கியதாக உள்ளன.

பயோஎலெக்ட்ரிகல் மின் தடுப்பு பகுப்பய்வு (BIA) சோதனை

இந்தச் சோதனையின் போது, எலெக்ட்ரோடுகள் மூலம் கால்களிலிருந்து வயிற்றுப் பகுதிக்கு மின் சிக்னல்கள் அனுப்பப்படுகின்றன.இதன்மூலம், உடலமைப்பானது நிர்ணயம் செய்யப்படுகிறது.

BMI குறியீட்டுச் சோதனை

உடலின் உயரம் மற்றும் எடையின் அடிப்படையில் கொழுப்பின் அளவீடு ஆகும்.

தோல்மடிப்பு அளவீடுகள்

இத்தகைய அளவீடுகளின் போது, தோலின் ஒவ்வொரு மடிப்புகளில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதை அளவிட்ட காலிப்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

A young man undergoing a TMT/stress test on a treadmill with leads placed all over his upper body.

கார்டியோ வாஸ்குலார்ச் சகிப்புத்தன்மைச் சோதனை

இந்தச் சோதனை, மன அழுத்த சோதனை என்றும் வரையறுக்கப்படுகிறது. உடற்பயிற்சியின் போது தேவையான ஆக்சிஜன் மற்றும் ஆற்றலை வழங்க, இதயம் மற்றும் நுரையீரல் எவ்வளவு செயல்பட வேண்டும் என்பதை அளவிட இச்சோதனை உதவுகிறது.

12 நிமிட கால அளவிலான ஓட்ட சோதனை

இந்தச் சோதனையானது, பெரும்பாலும் டிரெட்மில்லில் மேற்கொள்ளப்படுவதாக உள்ளது. உடற்பயிற்சிக்கு முன் உங்களது இதயத்துடிப்பு மற்றும் சுவாச வீதங்கள் கணக்கிடப்பட்டு, பின் 12 நிமிட ஓட்டத்திற்குப் பின், மீண்டும் இதயத்துடிப்பு மற்றும் சுவாச வீதங்கள் அளவிடப்படுகின்றன.

உடற்பயிற்சி அழுத்த சோதனை

உடற்பயிற்சி அழுத்த சோதனை, டிரெட்மில் அல்லது நிலையான பைக் உதவியால் மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி மேற்கொள்ளும்போது, இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் கண்காணிக்கப்படுகிறது.

VO2 max சோதனை

இந்தச் சோதனையும் டிரெட்மில் அல்லது நிலையான பைக்கின் உதவியாலேயே மேற்கொள்ளப்படுகிறது. உடற்பயிற்சி நிகழ்வின்போது பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் அளவைக் கண்காணிக்கச் சுவாசக் கருவிகள் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

சில பயிற்சியாளர்கள், இத்தகைய சோதனைகள் உடன், புஷ் – அப், உட்கார்ந்து எழுந்திருத்தல் உள்ளிட்ட பயிற்சிகளைப் பரிந்துரைத்து, உடல் எவ்வாறு ஒத்துழைக்கிறது என்பதை மதிப்பிடுகின்றனர். இந்தச் சோதனைகளின் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு உள்ளதா என்பதை அவர்கள் கண்டறிகின்றனர்.

உடல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மைச் சோதனை

உடல் வலிமைச் சோதனை என்பது, உடலின் தசைகளுக்கு ஒரே நேரத்தில் செலுத்தக்கூடிய சக்தியை அளவிட உதவும் சோதனை ஆகும். உடல் தசைகளானது, சோர்வடைவதற்கு முன் சுருங்கி விரிவடையக்கூடிய நேர அளவைக் கணக்கிட சகிப்புத்தன்மைச் சோதனையானது உதவுகிறது.

சகிப்புத்தன்மைச் சோதனைகளில், புஷ் அப்கள், உடலின் வலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகள், நிலைத்தன்மைப் பயிற்சிகள் உள்ளிட்டவைகள் அடங்கும். ஒரு குறிப்பிட்ட பயிற்சிக்கு, மக்கள் எவ்வளவு நேரம் தாக்கு பிடிக்கின்றனர் என்பதைப் பயிற்சியாளர்கள் கணக்கிட உதவுகிறது.

உடல் வலிமையை அதிகரிக்கும் வகையிலான சோதனைகள் மற்றும் தசைச் சகிப்புத்தன்மைச் சோதனைகள் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளன.

மேலும் வாசிக்க : இயற்கை vs சப்ளிமெண்ட் உணவுமுறை – எது பெஸ்ட்?

நெகிழ்வுத்தன்மைச் சோதனைகள்

உங்கள் உடலமைப்பின் தோரணை, உறுதித்தன்மையில் மாற்றம், இயக்க நடவடிக்கைகளில் வரம்புகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, மூட்டு இணைப்புகளின் நெகிழ்வுத்தன்மையை அளவிடுவது என்பது முக்கியமானதாக உள்ளது.

தோள்பட்டை நெகிழ்வுத்தன்மைச் சோதனை

இந்தச் சோதனையானது, ரிவிட் சோதனை என்றும் அழைக்கப்படுகிறது. தோள்பட்டையில் உள்ள மூட்டு இணைப்பின் நெகிழ்வுத்தன்மையையும், இயக்கத்தையும் அளவிட, தோள்பட்டை நெகிழ்வுத்தன்மைச் சோதனை உதவுகிறது.

உட்கார்ந்த நிலையிலான சோதனை

இது கீழ்முதுகுப் பகுதி மற்றும் தொடைத் தசைகளில் உள்ள இறுக்கத்தை அளவிடப் பயன்படுகிறது. தரையில், கால்களை முழுவதுமாக நீட்டி அமர்ந்த வகையில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கைகளை முன்னோக்கி அசைக்கும் போது, அது கால்களில் இருந்து எத்தனை அங்குல தொலைவில் உள்ளன என்பதைக் கணக்கிடுவதன் மூலம், அதன் நெகிழ்வுத்தன்மை அளவிடப்படுகிறது.

தண்டு இறுக்கச் சோதனை

கீழ்முதுகுப் பகுதியின் இறுக்கத்தை அளவிட, தண்டு இறுக்கச் சோதனைப் பேருதவி புரிகிறது. இது குப்புற படுத்த நிலையில் மேற்கொள்ளப்படுகிறது. கைகளை அருகருகே வைத்துக் கொண்டு, உடலின் மேல்புறப் பகுதியை, பின்புற தசைகளால் உயர்த்த வேண்டும். தரையில், இருந்து எத்தனை அங்குல உயரத்திற்கு உயர்த்த முடிகிறது என்பதைப் பொறுத்து நெகிழ்வுத்தன்மையானது அளவிடப்படுகிறது.

இத்தகைய உடற்பயிற்சிச் சோதனைகளைத் திறம்பட கையாண்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வளமான நல்வாழ்க்கை வாழ்வீராக….

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.