CT ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
PET ஸ்கேன், உடலின் உயிரியல் செயல்பாடுகளைப் படம்பிடிக்கக் கூடிய செயல்முறை ஆகும். நமது உடலில் நிகழும் அசாதாரண குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தையும், சிறிய உயிரியல் மார்க்கரைக் கொண்டு கண்டறியலாம்.
புற்றுநோய் பாதிப்புகள், இதயம் மற்றும் அது சார்ந்த நோய்கள், மூளையில் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை, அதன் துவக்க நிலையிலேயே கண்டறிய, மருத்துவ வல்லுநர்கள், PET ஸ்கேன் முறையையே அதிகம் பரிந்துரைச் செய்கின்றனர்..
PET ஸ்கேன் என்றால் என்ன?
பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி (PET) ஸ்கேன் என்பது, நமது உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களை ஸ்கேன் முறையில் படம் பிடிக்கும் சோதனை ஆகும். இந்தச் சோதனை மிகவும் பாதுகாப்பானது ஆகும். இந்தச் சோதனையில், ரேடியோடிரேசர் எனப்படும் கதிரியக்க வேதியியல் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் கருவிக்கு PET ஸ்கேனர் என்று பெயர்.
CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் முறையில் கண்டறியப்படும் முடிவுகளின் கூடுதல் விபரங்களை அறியும் பொருட்டு, Pet ஸ்கேன் முறைப் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்வை, PET/CT அல்லது PET-CT என்று குறிப்பிடுகிறோம். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இயங்கி வரும் நார்த்ஷோர்ப் பல்கலைக்கழக மருத்துவமனை, PET-CT ஸ்கேன் சேவையை வழங்கி வருகிறது.
PET-CT ஸ்கேன் சோதனையின் மூலம்
புற்றுநோய் கட்டிகள் உள்ள இடங்கள் மற்றும் அதன் பரவல்
அல்சைமர், டெமன்டியா, பக்கவாதம், மூளைப்பகுதியில் கட்டிகள் உள்ளிட்ட குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிய பேருதவி புரிகிறது.
இதயத் தசைகளின் செயல்தன்மையை நிர்ணயிக்க உதவுகிறது.
PET ஸ்கேன் செயல்முறை
PET ஸ்கேன் முறையின் முதற்கட்டமாக, சோதனைச் செய்ய வேண்டிய நபரை, அதற்குரிய இருக்கையில் உட்கார வைத்து , அவரது கையில் உள்ள நரம்பில் ரேடியோடிரேசராகப் புளோரோ டியாக்ஸி குளுக்கோஸ் (FDG ) செலுத்தப்படுகிறது.
மருத்துவர், அந்த நபரை 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஓய்வில் இருக்க அறிவுறுத்துவார். இந்த நேரத்தில், எந்திரிக்கவோ, நடக்கவோ, நண்பர்கள் உடன் பேசி அரட்டை அடிக்கவோ கூடாது. நபர் ஓய்வு நிலையில் இருந்தால் மட்டுமே, டிரேசர் வேதிப்பொருள், உடல் முழுவதும் சீராகப் பரவும்.
பின்னர், அந்த நபர், PET-CT ஸ்கேனர் வைக்கப்பட்டு இருக்கும் மேடையில் படுக்க வைக்கப்படுவார். இந்த ஸ்கேனர் இயந்திரத்தில், எம் ஆர் ஐ ஸ்கேனரில் உள்ளதைவிட பெரிய துவாரம் உள்ளது. இந்த இயந்திரம் இயங்கும் போது, எந்தவிதச் சத்தமும் வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. PET-CT சோதனை, 1 மணி நேர கால அளவு கொண்டது ஆகும்.
PET ஸ்கேன் சோதனைக்குத் தயாராவது எப்படி?
PET ஸ்கேன் சோதனையை நீங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டு அதற்கான நேரத்தைக் குறித்தீர்கள் என்றால், மருத்துவர்ச் சொல்லும் உணவு முறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
12 மணிநேரத்திற்கு முன்
கார்போஹைட்ரேட் (சர்க்கரை) குறைவாக உள்ள உணவுப் பொருட்களான இறைச்சி, பாலாடைக் கட்டி, டோஃபு, முட்டைகள், வெண்ணெய், ஸ்டார்ச் சத்து இல்லாத காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.
தானியங்கள், பாஸ்தா, பால், ரொட்டிகள் மற்றும் சர்க்கரை அதிகம் கொண்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க : PET – CT ஸ்கேன் செயல்படும் விதம்…
6 மணி நேரத்திற்கு முன்
PET ஸ்கேன் சோதனையை எடுப்பதற்கு 6 மணிநேரத்திற்கு முன்னதாகவே, நீங்கள் உணவு சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். தண்ணீர் மட்டும் தேவைப்படும்போது அருந்தலாம்.
இதற்கு முன் CT அல்லது MRI ஸ்கேன் எடுத்து இருந்தால், அதன் பிரதியை, PET ஸ்கேன் சோதனையின் போது வைத்திருப்பது நல்லது.
PET ஸ்கேன் சோதனையில் கிடைக்கும் முடிவுகளை, அதற்குரிய மருத்துவரிடம் காண்பித்து, புற்றுநோய், மூளை, நரம்பு குறைபாடுகள் மற்றும் இதய நோய்களின் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.
PET ஸ்கேன் சோதனைக்கு, மேற்கூறிய வகையில் தயார் ஆகி, விரைவில் புற்றுநோய், இதய நோய் உள்ளிட்டவற்றின் பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறுவீர்…..