A blackboard with the abbrevation

மன ஆரோக்கியத்தில் நடத்தைப் பகுப்பாய்வின் பங்கு

மனநல ஆரோக்கியத்தில் வலுவூட்டல் நுட்பங்களின் பயன்பாடு சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு (ABA) முறைச் சமூகத் தொடர்பு, தகவல் தொடர்பு, கற்றல் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இது சுகாதார மேம்பாடு, இயக்கவியல் நுட்பம் போன்ற திறன்களைக் கற்க உதவுகிறது.

ABA என்று சுருக்கமாக அழைக்கப்படும் பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு முறைகளின் பயன்பாடுகள் என்று மேற்கூறியவைக் குறிப்பிடப்பட்டாலும், இது, மன இறுக்கம் தொடர்பான நடத்தைச் சிகிச்சை என்றே குறிப்பிடுகின்றனர்.

ABA முறையானது, உளவியல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குச் சிறந்த பலனளிப்பவையாக உள்ளன. உளவியல் பாதிப்பு கொண்டவர்களிடையே, நேர்மறையான நடத்தைகள் மற்றும் திறன்களை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்காலச் சிறப்புச் சேவைகளின் தேவையைக் குறைக்கவும், ABA முறையானது பேருதவி புரிகின்றன.

பயன்கள்

ABA சிகிச்சை முறையானது, தொடர்பு மற்றும் மொழித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. கல்விச் செயல்திறன்கள், சமூகத் திறன்கள், நினைவுத்திறன் மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கின்றது. நடத்தைகளில் உள்ள சிக்கல்களின் வீதத்தைக் குறைக்க உதவுகிறது.

ABA சிகிச்சை முறை

இந்தச் சிகிச்சை முறையானது, மன இறுக்கப் பாதிப்பு உள்ளவர்கள் குறித்த புரிதல்களை ஊக்குவிப்பதாக உள்ளது. ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக அடையாளம் கண்டறியப்பட்டவர்களுக்கு, ABA சிகிச்சை முறையைப் பயன்படுத்திச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நேர்மறை வலுவூட்டல் என்பது, இந்தச் சிகிச்சை முறையின் உத்தியாகக் கருதப்படுகிறது.

நாம் விரும்பும் செயலை அடிக்கடி செய்வதைப் போலவே ABA சிகிச்சை முறையும் செயல்படுகிறது. இது சிறந்த நடத்தைக்கான சூழலை உருவாக்குகிறது. இந்தச் சிகிச்சை முறைப் பங்கேற்பாளரின் தற்போதைய சுதந்திரத்தையும், எதிர்கால வெற்றிக்கான திறன்களையும் மேம்படுத்துகிறது.

பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வின் நுட்பங்கள்

நடத்தை மாறுபாடுகளால், பெரும்பாலான சிறுவயதினர்ப் பயன் அடைகின்றனர். நாம் விரும்பத்தக்க முடிவுகளை அடைய, பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு முறையானது பேருதவி புரிகிறது. இந்த ABA சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

நேர்மறையான வலுவூட்டல் முறை

ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளுக்குச் சமூகப் பழக்கம் மற்றும் கற்றலில் குறைபாடுகள் இருக்கும். அவர்களுக்குச் சூழ்நிலைக்கேற்ப நடந்துகொள்ளும் புரிதல் இருக்காது. இந்தக் குழந்தைகள் சில நேரங்களில் சரியாக நடந்துகொள்வர். சிகிச்சை நிபுணர் இந்த நல்ல நடத்தைகளை நினைவூட்டி, அவற்றை மீண்டும் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.இதற்கு அந்த நிபுணர், நேர்மறையான வலுவூட்டல் முறையைப் பயன்படுத்துவார். பலன் அளிக்கும் நடத்தைக்கும் மற்றும் எதிர்பார்க்கப்படும் நடத்தைக்கும் இடையில் உள்ள சமநிலைக் குறித்த புரிதலை, குழந்தைகள் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்மறையான வலுவூட்டல்முறை

ஒரு குழந்தை, தவறான வழியில் நடக்க மேற்கொள்ளும் போது, அதனை நாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தி, அத்தகைய நடத்தையை மாற்றி அமைக்க வேண்டும். இந்த நடத்தையை நிறுத்த, குழந்தைகளைத் தண்டிப்பது என்பது சிறந்த வழிமுறையாக அமையும். இந்த நடத்தையில் இருந்து, குழந்தை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான காரணத்தை, குழந்தைகளிடமும் தெரிவிப்பது என்பது நன்மைபயக்கும். இந்த விவகாரத்தில் அளிக்கப்படும் தண்டனைகள் நியாயமானதாக இருக்க வேண்டும். தற்போதைய நிலையில், குழந்தைகள் சீரற்ற முறையிலேயே ஒழுக்கம் அடைகின்றனர் அது அவர்களுக்கு உண்மைநிலையைத் தெரிவிப்பதைவிட, குழப்பமான மனநிலைக்கே உள்ளாக்குகிறது.

A female preschooler kid practicing correct pronunciation with the help of a female speech therapist using different coloured objects kept on the table.

தூண்டுதல் மற்றும் மறைதல்

பயன்பாட்டு நடத்தைப் பகுப்பாய்வு முறையில், குழந்தைகளுக்கு, ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்ள, சிகிச்சையாளர் வாய்மொழியிலான அல்லது உடல்மொழி வகையிலான குறிப்புகளை அளிக்கலாம்.

அதுவே ஒரு குழந்தை, ஏதாவதொரு செயல்பாட்டில் இருக்கும் போது, அதன் கைகளை இயக்குதல் அல்லது கைகளினால் காட்டப்படும் சைகைகளின் மூலமான உடல் குறிப்புகளின் உதவியுடன் அவர்களின் திறமைகள் நிரூபிக்கப்பட வேண்டும். இத்தகைய உடல் குறிப்புகள் மிகவும் கனிவானதாக இருத்தல் அவசியம்.

குழந்தைகள், ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்ய ஊக்குவிக்க மேற்கொள்ளப்படும் சொற்களையே, வாய்மொழிக் குறிப்புகள் என்று வரையறுக்கின்றோம். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும் என்று அவர்களிடம் சொல்ல, வாய்மொழிக் குறிப்புகளைப் பயன்படுத்த இயலும்.

பணிகள் குறித்த மதிப்பீடு

ஒரு குழந்தையின் நடத்தையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்த மதிப்பீடானது, அவர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும்.

அறிவார்ந்த செயல்முறைகள்

ஒதுக்கீடு

சூழல்

உருவகப்படுத்தப்பட்ட செயல்கள்

குழந்தையின் திறனறிந்து, அதற்கேற்ற பணிகளைத் திட்டமிட வேண்டும்.

பொதுமைப்படுத்துதல்

பொதுமைப்படுத்துதல் நிகழ்வு என்பது, புதிய சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட கருத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுத் தருவது ஆகும். ABA சிகிச்சை முறையை, குழந்தை ஒன்று வீட்டிலேயே பெறும்பட்சத்தில், அதை, அக்குழந்தை, பள்ளியில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதே, பொதுமைப்படுத்துதல் என்கிறோம்.

நடத்தை ஒப்பந்தங்கள் முறை

மன இறுக்கப் பாதிப்பு கொண்ட குழந்தைகளுக்கு, இந்த நடத்தை ஒப்பந்தங்கள் முறையானது, மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த முறையில் குழந்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பணிகள் குறிப்பிடப்பட்டு இருக்கும். அவர்கள் அந்தச் செயலை வெற்றிகரமாக முடிக்கும்போது, அதற்கான வெகுமதிகளைப் பெறுவர்.

இந்த நடத்தை ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு, குழந்தை மற்றும் பெற்றோர் அல்லது நிபுணர்க் கட்டுப்பட வேண்டும். நடத்தை ஒப்பந்த முறைகளில், தங்க டோக்கன்கள் உள்ளிட்ட வெகுமதிகள் வழங்கப்படுகின்றன. தேவையான அளவிலான வெகுமதியைப் பெற்ற குழந்தைகளுக்கு, பெரிய பரிசுகள் வழங்கப்படுகின்றன.

குழந்தைகளின் கற்றல் தேவைகள் எப்போதுமே தனித்துவமானவைகள் ஆகும். பயன்பாட்டு நடத்தைகள் பகுப்பாய்வு முறையானது, சில குழந்தைகளுக்கு, மிகவும் பயன் உள்ளதாக அமையலாம். இதில் உங்கள் குழந்தைக்கு எது சிறந்ததாக உள்ளது என்பதை அறிய, இப்போதே, ABA சிகிச்சைமுறையைத் தொடங்குங்கள்.இந்தச் சிகிச்சை முறையானது பலன் அளிக்கச் சிறிது காலம் ஆகலாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.