மனநல பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவது எப்படி?
உலகளவில் 8 பேரில் ஒருவர் மனநலப் பாதிப்புடன் வாழ்கிறார். இது ஒரு பெரும் தொற்றுநோய் போல் பரவியுள்ளது.மனநலப் பாதிப்புகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சரியான நேரத்தில் உரிய சிகிச்சையை அளிப்பதன் மூலம், அந்தப் பாதிப்புகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம்.
மன ஆரோக்கியம்
உலகச் சுகாதார அமைப்பின்படி, மன ஆரோக்கியம் என்பது தனிநபர்கள் தங்கள் திறன்களால் வாழ்க்கை அழுத்தங்களைச் சமாளித்து, சமூகத்திற்குப் பங்களிக்கும் நல்வாழ்வு நிலையாகும்.
நாம் என்ன நினைக்கின்றோம், எப்படி உணர்கிறோம், மற்றவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறோம் என்பதை, நமது மன ஆரோக்கியமே தீர்மானிக்கின்றது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரத்திற்கு அடிப்படையாக உள்ளது.
மனநலப் பாதிப்புகளின் துவக்கக் கால அறிகுறிகள்
அதீதக் கவலை மற்றும் பயம்
தினசரிப் பிரச்சினைகள் தொடர்பான கட்டுப்படுத்த இயலாத கவலைகள், மனச்சோர்வுக்கு வழிவகுத்துவிடுகின்றன. மனநலப் பாதிப்பு நோயாளிகள், தங்களது வாழ்க்கை நிகழ்வுகள் குறித்த தொடர்ச்சியான கவலைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அதிலிருந்து வெளிவரக் கடும்பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இது குறிப்பிட்ட பொருள்கள், இடங்கள், சூழல்கள், நிகழ்வுகள் குறித்த தேவையற்ற அச்சங்களைக்குறிக்கின்றது.
மனநிலை அடிக்கடி மாறுதல்
சோகம், எரிச்சல், கோப உணர்வு, செயல்களில் போதிய அளவிலான ஈடுபாடு இல்லாத நிலை உள்ளிட்ட நிகழ்வுகள், மனச்சோர்வின் அறிகுறிகளாக வரையறுக்கப்படுகின்றன.
சந்தோசமான மனநிலையில் இருந்து சோகமான மனநிலைக்கு உடனடியாக மாறுவது என்பது இருமுனைக்குறைபாடு என்று வரையறுக்கப்படுகிறது. இது பித்து பிடித்தல், மனக்கிளர்ச்சி நடத்தை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
பின்வாங்குதல்
சமூக நடவடிக்கைகளில் போதிய கவனமின்றி இருத்தல், எப்போதும் தனிமையில் இருத்தல், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவுகளிடம் பிரிந்து இருத்தல், மகிழ்ச்சியான நடவடிக்கைகளில் இருந்து விலகி இருத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள், மனநலப் பிரச்சினைகள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
கவனம் செலுத்துவதில் சிரமங்கள்
மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்டவைகளால், மேற்கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுதல், நினைவாற்றல் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. போதிய கவனமின்மையின் காரணமாக, மேற்கொண்ட பணிகளை முடித்தல் மற்றும் முக்கிய விசயங்களில் முடிவுகளை எடுப்பது கூட சவாலான நிகழ்வாக மாறுகின்றது.
உறக்க முறையில் இடையூறுகள்
சரியான அளவிலான உறக்கம் இல்லாதது அல்லது அதீத உறக்கம் போன்றவை, நமது உடலில் உள்ள சர்காடியன் ரிதம் எனப்படும் உடலியக்கக் கடிகாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமல்லாது, மன ஆரோக்கியத்தையும் சீர்குலைத்து, மனநலப் பாதிப்புகளுக்கும் காரணமாக அமைகின்றன.
உணவுப்பழக்க வழக்கங்களில் மாற்றங்கள்
குறைவாகச் சாப்பிடுதல் அல்லது மிக அதிகமாகச் சாப்பிடுதல் உள்ளிட்டவை மனநலப் பாதிப்பிற்குக் காரணமாக அமையலாம் அல்லது மனநலப் பாதிப்புகளின் தீவிரத்தை மேலும் கடுமையாக்குகின்றன.
மரியாதைக்குறைவு
தேவையற்ற குற்ற உணர்வு, பயனற்ற நடத்தைகள் ஆகியவை மனச்சோர்வு, கவலைப் போன்ற மனநலப் பாதிப்புகளைக் குறிக்கின்றன.சுயப் பேச்சு, சுய விமர்சனம் போன்ற நிலைகளைச் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும்.
தீங்கு விளைவிக்கும் நடத்தைகள்
கை, கால்களைக் கீறுதல், வெட்டுதல், சுயமாகக் காயங்களை ஏற்படுத்துதல் போன்றவை மனநலப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படாததால் நிகழ்கின்றன.இந்த நடத்தைகளானது, சகிக்க இயலாத உணர்ச்சிகளைச் சமாளிக்கவல்ல ஆரோக்கியமற்ற நடைமுறையாகும்.
போதை வஸ்துகளைப் பயன்படுத்துதல்
ஆல்கஹால் உள்ளிட்ட மதுபான வகைகளின் பயன்பாடு, போதை மருந்துகளின் பயன்பாடு, மனநலப் பாதிப்புகளின் அடிப்படைச் சிக்கல்களைக் குறைக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள், துன்பமான தருணங்களை மறக்கடிக்கும் வகையிலான சுய மருத்துவ முறையாக, மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளானோர்க் கருதுகின்றனர்.
தற்கொலை எண்ணங்கள்
இறப்பு, தனக்குத்தானே தீங்கு விளைவித்தல், தற்கொலைக்குத் திட்டமிடுவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, உடனடியான சிகிச்சை அவசியமாகிறது.
மேலும் வாசிக்க : உறக்க மேம்பாட்டிற்கு CBT சிகிச்சை எவ்வாறு உதவும்?
துவக்கக் கால அறிகுறிகள் ஏன் முக்கியம்?
மனநலப் பாதிப்புகளின் துவக்கக் கால அறிகுறிகளைப் புறக்கணிப்பது என்பது, பிற்காலத்தில் பேராபத்தாக மாறும் வாய்ப்பு இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஆபத்தான அறிகுறிகள்
மனச்சோர்வு, கவலை, சித்தபிரம்மை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிடில், அது காலப்போக்கில் மிகவும் மோசமான நிலையாக மாறக்கூடும். இந்தப் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறுவது மிகவும் சவாலானதாக மாறிவிடும்.
தீங்கு விளைவிக்கும் வகையிலான காரணிகள்
மனநலப் பாதிப்புகளுக்குத் தேவையான சிகிச்சைகளைப் பெற இயலாதவர்கள், அதன் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற ஆல்கஹால், மருந்துகள், பிற பாதுகாப்பற்ற வழிமுறைகளை நாடத் துவங்குகின்றனர். இது அவர்களின் உடல் செயல்பாடுகளை மேலும் மோசமானதாக்குகின்றன.
உறவுமுறைகளில் சுணக்கம்
மனநலப் பிரச்சினைகள் மீண்டும் ஏற்படுதல், பகுத்தறிவற்ற நடத்தைகள் உள்ளிட்டவை, தொழில்முறை உறவுகளைப் பாதிக்கக் கூடும். இது நம்மைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இடையேயான உறவுமுறையிலும் சுணக்கத்தை ஏற்படுத்த கூடும்.
உடல் ஆரோக்கியம் குன்றல்
மனம் மற்றும் உடல் சார்ந்த ஆரோக்கியக்குறைவு நிகழ்வானது நல்வாழ்வை மோசமாக்குவதுடன், உடல் ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கின்றது. சுய மருத்துவ முறைகள் மற்றும் நாள்பட்ட மன அழுத்த பாதிப்புகள், மோசமான விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றன்.
தொழில்முறை அடிப்படையிலான மனநலப் பராமரிப்பு முறைகள்
அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அவை நிர்வகிக்க முடியாத அளவிற்கு மாறுவதற்கு முன்பே, அந்தச் செயல்பாட்டை மீட்டெடுக்கவும்.
சிக்கலான மற்றும் தீவிரமான மனநலப்பாதிப்பாக மாறுவதற்கு முன்பே, தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வகையிலான சமாளிக்கும் திறன்கள் மற்றும் மீள்திறனை உருவாக்கவும்
தற்கொலை எண்ணங்களைக் கைவிட வேண்டும். தீங்கு விளைவிக்கும் வகையிலான சுய மருத்துவ முறையைக் கைவிட வேண்டும்.
உங்கள் அன்புக்கு உரியவரின் மனநலனைப் பாதுகாக்க, இன்றே முதல்படியை எடுத்து வைக்கவும்.
மனநல பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய சிகிச்சை முறைகளைச் சரியான நேரத்தில் மேற்கொண்டு, இப்பாதிப்புகளில் இருந்து விரைவில் பூரண நலம் பெறுவீராக….