A young woman is sleeping on her bed, under a cover, with an alarm clock beside her on the table.

உறக்க மேம்பாட்டிற்கு CBT சிகிச்சை எவ்வாறு உதவும்?

உறக்கமின்மை மற்றும் அது சார்ந்த பிரச்சினைகளால், இன்றைய இளைய தலைமுறையினர்ப் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட, பலர்ப் பல்வேறுவிதமான நுட்பங்களைச் செயல்படுத்தி வருகின்றனர். அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது (CBT), உறக்கமின்மைப் பிரச்சினைக்குச் சிறந்த நிவாரணியாக விளங்குவதாகப் பலர்த் தெரிவித்து உள்ளனர். இந்தச் சிகிச்சைமுறையானது, விரும்பத்தகாத அல்லது தீங்கு விளைவிக்கும் வகையிலான மூடநம்பிக்கைகள், உணர்ச்சிகள் உள்ளிட்டவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.

நடத்தை மற்றும் சிந்தனை முறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்வதனால், அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் உதவியுடன், மேம்பட்ட உறக்க நிகழ்வைச் சாத்தியமாக்க இயலும். இந்த நிகழ்வில், அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, இரவுநேரச் சீரான ஓய்விற்குத் தேவையான தளர்வு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறையை மேம்படுத்துகின்றன. மருந்து முறைக்கு மாறாக, இந்தச் சிகிச்சை மனதை அமைதிப்படுத்தி, பழக்கங்களை மாற்றி, பகலில் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, உறக்கம் சார்ந்தக் குறைபாடுகளை எவ்வாறு களைகிறது மற்றும் இரவில் சீரான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

உறக்கக் குறைபாடுகள் என்றால் என்ன?

இரவு உறக்கத்தைப் பாதிக்கும் நிலைகளே உறக்கக் குறைபாடுகள் எனப்படுகின்றன.இது உங்களை மிகவும் சோர்வாக உணர வைப்பதால், உங்களது அன்றாட நடவடிக்கைகளில் பெரும்பாதிப்பினை ஏற்படுத்துகிறது. சில தருணங்களில், உறக்கக் குறைபாடுகள், மோசமான ஆரோக்கிய நிகழ்விற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. உறக்கமின்மை, உறக்கத்தின் போது மூச்சுத்திணறல் ஏற்படுதல், கால்களில் அதீத வலி உணர்வு உள்ளிட்டவை உடல், உளவியல் சார்ந்த ஆரோக்கியக் குறைவின் அறிகுறிகளாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை

ஆரோக்கியமற்ற உறக்கத்திற்குக் காரணமான எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை அடையாளம் கண்டு மாற்ற உதவும் சிகிச்சை முறையே, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை ஆகும். இந்தச் சிகிச்சை முறையானது, தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ வழங்கப்படுகிறது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையிலும் , இந்தச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பிரச்சினையின் வகை, அதன் தீவிரத்தைப் பொறுத்து, அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் கால அளவு வேறுபடுகிறது.இந்தச் சிகிச்சையானது, மிகவும் மெதுவாகவும் மற்றும் சீராக நடைபெறவல்லது.

CBT சிகிச்சை எவ்வாறு உறக்கப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குகிறது?

CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையானது, உறக்கப் பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வாக விளங்குகிறது. இது ஆரோக்கியமற்ற உறக்கத்திற்குக் காரணமான எதிர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தை முறைகளை நிவர்த்தி செய்கிறது.

CBT சிகிச்சையின் இரண்டு முக்கிய கூறுகள்

அறிவாற்றல் சார்ந்த சிகிச்சை

இந்தச் சிகிச்சையானது, உறக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமான எதிர்மறை நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களை மாற்றுகின்றது.

நடத்தைச் சார்ந்த சிகிச்சை

மோசமான உறக்க நிகழ்வுகளுக்குக் காரணமான நடத்தைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொண்டு, நல்ல பழக்கவழக்கங்களாக மாற்றியமைத்தல்.

CBT முறையில் அறிவாற்றல் சிகிச்சையின் பங்கு

நீங்கள் நினைக்கும் விதத்தை மாற்றி அமைத்தாலே, அது உலகையையே மாற்றி அமைக்கும் என்ற சொலவடையை அடிக்கடி கேட்டு இருப்பீர்கள். இதை நோக்கமாகக் கொண்டது தான் அறிவாற்றல் சிகிச்சை ஆகும். இது உறக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமான எதிர்மறைச் சிந்தனை முறைகளை மாற்றி அமைத்து யதார்த்தமான மற்றும் நேர்மறை எண்ணங்களாக மாற்றுகின்றது. இந்த நிகழ்வானது, மூன்று முக்கிய படிகளைக் கொண்டு உள்ளது.

எதிர்மறைச் சிந்தனைகளை அடையாளம் காணுதல்

இரவுநேர ஓய்வு நிகழ்வான சீரான உறக்கத்தைப் பெறுவதில் தடைகளை ஏற்படுத்தவல்லச் சிந்தனைகளை, நீங்கள் அடையாளம் கண்டுகொள்வது அவசியம் ஆகும். உறங்குவதற்கு, உறக்க மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற கருத்து தவறானது ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

A young man, feeling anxious, is awake at night with a pillow over his head.

கெட்ட எண்ணங்களை நிவர்த்தி செய்தல்

உங்கள் உறக்கத்திற்குக் காரணமான எதிர்மறை எண்ணங்களைக் கண்டறிவதற்கு நீங்களே பொறுப்பு ஆகும். உறக்கத்தைச் சீர்குலைக்கும் எண்ணங்கள் துல்லியமானவை என்பதை நீங்களே மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த எதிர்மறை எண்ணங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும். தவறான எண்ணங்களை, பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். யதார்த்த நிலையைக் கண்டறிய வேண்டும்.

எண்ணங்களை மாற்றி அமைக்கவும்

எதிர்மறை உணர்வுகளை, புதிய மற்றும் நேர்மறை எண்ணங்களாக மாற்றி அமைக்கவும். சீரான உறக்கத்திற்கு உதவும் யதார்த்த நிலைகளைப் பட்டியலிடுங்கள்

மேலும் வாசிக்க : வெற்றிகரமான மனந்தெளிநிலைச் சிகிச்சை முறைகள்

CBT முறையில் நடத்தைச் சிகிச்சை

CBT முறையானது, அறிவாற்றல் முறையை மட்டுமல்லாது, பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தைமுறைகளை மாற்றி அமைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, நல்ல ஓய்வுப் பழக்கங்கள் முக்கியமானதாக உள்ளது. உங்களுக்கு உள்ள அறிகுறிகளைப் பொறுத்து, சிகிச்சையாளர், பின்வரும் நுட்பங்களை உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

உறக்கக் கட்டுப்பாட்டுச் சிகிச்சை

பகல்நேர உறக்கமானது, இரவு உறக்கத்தின் கால அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம், நீங்கள் அதிகளவில் சோர்வடைகிறீர்கள். உறக்கக் கட்டுப்பாட்டுச் சிகிச்சையானது, உறக்கமின்மைப் பாதிப்பிற்குச் சரியான தீர்வு வழங்குகிறது. இது படுக்கைக்கும், உறக்கத்திற்கு இடையிலான தொடர்பைப் பலப்படுத்துகிறது.

உறக்கத்திற்கு ஏற்ற சூழல்

அமைதியான ஓய்விற்கு, வசதியான உறக்கச் சூழல் அவசியம்.உறக்கத்தைத் தூண்டும் ஒலி, கண்களை மறைக்கும் வகையிலான முகமூடி உள்ளிட்டவைகளை, சிகிச்சையாளர்ப் பரிந்துரைச் செய்வார். புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டைத் தவிர்த்தல், இரவுநேரங்களில் தொலைக்காட்சிப் பார்ப்பதைத் தவிர்த்தல் உள்ளிட்டவை, இனிய மற்றும் ஆழ்ந்த உறக்கத்திற்கான காரணிகள் ஆகும்.

தளர்வு நுட்பங்கள்

சிலரது மனம் எப்போதும் அமைதியின்றி அலைபாய்ந்து கொண்டிருப்பதனால், அவர்களால் நிம்மதியாக ஓய்வெடுக்க இயலாது. இவர்கள் இரவுநேரங்களில், அதிகப் பதட்ட உணர்வுடனும் காணப்படுவார்கள். தசைத் தளர்வுப் பயிற்சிகள், சுவாசப் பயிற்சிகள், தியானம் உள்ளிட்ட தளர்வு நுட்பங்களை, சிகிச்சையாளர் அவர்களுக்குப் பரிந்துரைச் செய்வார்.

ஹிப்னாசிஸ்

ஓய்வு தொடர்பான பிரச்சினைகளுக்கு, சிகிச்சையாளர்கள் ஹிப்னாசிஸ் முறையைப் பரிந்துரைச் செய்கின்றனர். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது, இந்த ஹிப்னாசிஸ் முறையானது, எதிர்மறைச் சிந்தனைகள் மற்றும் மோசமான உறக்கப் பழக்கங்களை மாற்றி அமைத்து நல்ல இரவு ஓய்வுக்குக் காரணமாக அமைகின்றன.

அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சையின் உதவியுடன், உறக்க நிகழ்வை மேம்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.