மனஒருமைப்படுத்தல் நிகழ்வு – அறிந்ததும் அறியாததும்…
இன்றைய இயந்திர உலகில், பலர் மன அழுத்தம், பதட்டம், ஈடுபாடின்மை, கவனச்சிதறல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.இத்தகையப் பாதிப்புகள், உடல்நலனையும் வெகுவாகப் பாதித்து விடுகின்றன. இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடும் பொருட்டு, மன அமைதி, விழிப்புணர்வு தேவைக்கு, தியான நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைத் தேடிச் செல்கின்றனர்.
நாம் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாகச் சிந்தித்துக் கொண்டே இருப்பதால், மனஅமைதியின்மைப் பாதிப்பிற்கு உள்ளாகிறோம். இந்த நிலையில் மனஒருமைப்படுத்தல் நிகழ்வு உதவுகிறது.
மனஒருமைப்படுத்தல் என்பது, ஒரு செயலில் ஈடுபடும்போது எல்லா இடையூறுகளையும் தவிர்த்து, முழு கவனத்தையும் அதில் செலுத்தும் நிகழ்வாகும்.இது, நமது உணர்வுகளைச் சார்ந்து அமைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனஒருமைப்படுத்தல் நிகழ்வு என்பது, புத்த மரபில் தோன்றிய பண்டைய நடைமுறை ஆகும். எவ்விதமான முன்முடிவுகளை அறியாது, மேற்கொண்ட விசயத்தில் போதிய கவனத்தைச் செலுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த நடைமுறையானது, நம் எண்ணங்கள், உணர்வுகள் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கின்றது. கடந்த கால சோகங்கள், எதிர்காலம் குறித்த கவலைகளில் இருந்து உங்களை விடுவிக்கின்றது. இதன்மூலம், மனம் தெளிவு அடைகின்றது.
மனஒருமைப்படுத்தல் நிகழ்வு ஏன் தேவை?
உளவியல், உணர்வுகள் உடற்செயலியல் சார்ந்தச் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
மூளையின் நரம்பியல் இணைப்புகளைத் துரிதப்படுத்துகிறது.
படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது.
மன ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், மேற்கொண்ட காரியங்களில், கவனச்சிதறல்கள் ஏற்படாமல் காக்கிறது.
தன்னம்பிக்கை மற்றும் உளச்செறிவை அதிகரிக்கின்றது.
உடலை மேம்படுத்தும் வகையிலான பயிற்சியை அளிக்கிறது.
உடற்செயலியல் நன்மைகள்
- பார்வையை விரிவுபடுத்துகிறது
- மன அழுத்த அளவைக் குறைக்கிறது
- மன விரக்தியைக் குறைக்கிறது
- கவலை உணர்வைக் கட்டுப்படுத்துகிறது
- மகிழ்ச்சி உணர்வை அதிகரிக்கிறது
- அமைதி உணர்வை மேம்படுத்துகிறது
- எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை ஏற்படுத்துகிறது
- இரக்கத்தன்மை உள்ளவராகத் திகழ வைக்கிறது
- சுய விழிப்புணர்வை அதிகரிக்கிறது
- கோப உணர்வைக் கட்டுப்படுத்துகிறது
- எதிர்மறை உணர்வுகளை அகற்றுகிறது
- மூளையின் உரையாடலைக் குறைக்கிறது.
- ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.
- உறக்க நிலையை மேம்படுத்துகிறது
- ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கிறது
- கிரியேட்டிவிட்டியை அதிகரிக்கிறது
- தலைவலி பாதிப்பைக் குறைக்கிறது.
உடல்நலன் சார்ந்த நன்மைகள்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்களின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது
இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கின்றது.
மூளையின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
மனஒருமைப்படுத்தல் பயிற்சியை மேற்கொள்ளும் முறை
மனஒருமைப்படுத்தல் பயிற்சியை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்
அமைதியான சூழலில், உங்கள் வசதிக்கு ஏற்ற வகையிலான இடத்தைத் தேர்வு செய்யவும். அங்கு உங்களுக்கு எவ்விதக் கவனச்சிதறல்களும் ஏற்படக் கூடாது.
உடல் மற்றும் மனம் நிதானமாக இருப்பதை உறுதி செய்து, கண்களை மூடி சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். உடலின் அகம் மற்றும் புறப் பகுதிகளில் காற்றின் இயக்கத்தை உணருங்கள்.
உங்களது கவனத்தை, சுவாசத்தின் பக்கம் திருப்பும்போது, கவனச்சிதறல்கள ஏற்படுவதைத் தவிர்க்கவும்.
முதலில் 5 முதல் 10 நிமிடங்கள் கால அளவிலான பயிற்சிகளாகத் துவங்கி, பின் , நீங்கள் வசதியாக உணரும்போது, கால அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
மனஒருமைப்படுத்தல் – தியான முறைகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
நாம் வாழும் தற்போதைய நிலையில், ஏதாவது ஒன்றை அறிந்து இருப்பதான நிலையையே மனஒருமைப்படுத்தல் என்கிறோம்.அதேநேரத்தில் தியான நிலை என்பதை, எதையும் அறிந்திராமல், மனஒருமைப்படுத்தல் நிலையை அடைவதற்கான வழிமுறையாகப் பார்க்கப்படுகிறது. மனஒருமைப்படுத்தல் மற்றும் தியானம் இவ்விரண்டும் அதன் கண்ணாடி பிரதிபலிப்புகளே ஆகும். மனஒருமைப்படுத்தல் நிகழ்வை, நாம் விரும்பும் இடத்தில் விரும்பும் நேரத்தில் மேற்கொள்ள முடியும். ஆனால், தியான நிகழ்வை, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்.
மனஒருமைப்படுத்தல் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ளலாம்?
உங்களுக்கும், உங்கள் மனதிற்கும் உண்மையாக இருக்க வேண்டும்
மனித மனம் எப்போதும் அலைபாய்ந்து கொண்டு தான் இருக்கும். அது இயல்பான நடவடிக்கைத் தான் என்பதை உணருங்கள். இதன்மூலம், தேவையில்லாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாவதைத் தடுக்க முடியும்.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சிக்குப் பிந்தைய நீட்சிப் பயிற்சிகளின் அவசியம்
தேவையான நேரத்தை ஒதுக்குங்கள்
முதலில் இலக்கை நிர்ணயித்து, பின்பு அதை அடைய, 21 நாள்கள் தொடர்முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு மாற்றம் ஏற்படவும் சிறிது கால அவகாசம் தேவை என்பதை மறவாதீர்கள்.
முடிவுகள் உங்களுடையதாக இருக்கட்டும்
நாம் மேற்கொள்ளும் விவகாரங்களில், கிடைக்கும் முடிவுகளை, கவனமாகப் பரிசீலித்து, தேவையெனில் மாற்றங்களை மேற்கொண்டு, அதைக் கடந்து செல்ல வேண்டும்.
கவனச்சிதறல்களைத் தவிர்த்தல்
ஒரு செயலைச் செய்யும்போது, நமது மனம் எப்போதும் அலைபாயும் நிலையிலேயே உள்ளது. இதன்காரணமாக, செய்யும் செயல்களில் கவனம் சிதறுகிறது. இது உங்களைப் பரபரப்பிற்கு உள்ளாக்குகிறது. மீண்டும் நாம் பழைய நிலைக்குத் திரும்புதல் என்பது இந்த இடத்தில் மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மனஒருமைப்படுத்தல் என்பது நம்மை மன அழுத்தம் உள்ளிட்ட விரும்பத்தகாத பாதிப்புகளில் இருந்து காக்கிறது. பல்வேறு விவகாரங்களில், மறுபரீசிலனை உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ளும்போது, அவற்றைத் திறம்பட கையாள்வது தொடர்பான விழிப்புணர்வை நமக்கு வழங்குகிறது.