மனநலத்தைப் பராமரிக்க உதவும் ஆப்பிள் சாதனத்தின் அம்சம்
மனநலப் பிரச்சினைகள் மற்றும் கவலைகள் இல்லாத வாழ்க்கையே, ஒருவருக்குச் சிறந்த வாழ்க்கையாக அமைந்திட முடியும். மன ஆரோக்கியத்தைக் காக்க, மனிதன் புதிய முன்னெடுப்புகளைத் துவக்கிவிட்டான். உடலுக்கும் மனதிற்கும் ஊறு விளைவிப்பனவற்றை முன்கூட்டியே கண்டறிந்து, துவக்கத்திலேயே சரிசெய்ய முயல்கிறான். இதற்குத் துணையாகத் தொழில்நுட்ப உதவியையும் பயன்படுத்திக் கொள்கிறான்.
மனிதர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கிய விவகாரத்தில் கைகோர்த்துச் செயல்பட, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் களமிறங்கிவிட்டன. அந்த வகையில், தொலைதொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பச் சேவை வழங்குவதில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், தனது ஆரோக்கியம் சார்ந்தச் செயலியில், iOS 17 அப்டேட்டின் மூலம், பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஐபோன் பயனர்கள், இந்தப் புதிய அம்சத்தின் மூலம், தங்களது மனநிலையின் போக்கை, ஆராய்வதன் மூலமாக, மன ஆரோக்கியத்தைக் கண்காணிக்க இயலும்.
iOS 17 அப்டேட் செயல்படும் விதம்
ஐபோன் பயனர்கள், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள iOS 17 அப்டேட்டின் மூலம், மனநலம் சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொண்டு, மனநலம் மற்றும் அதுசார்ந்த உணர்வுகளைப் பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலம், அவர்கள் மனச்சோர்வு மற்றும் அபாயத்தை அறிந்துகொள்ள வழிவகை ஏற்பட்டு உள்ளதோடு மட்டுமல்லாது, இதுகுறித்த சந்தேகங்களைக் களையும் விதத்தில், துறைசார்ந்த நிபுணரிடமும் கலந்தாலோசிக்க வைக்கிறது.
ஐபோன் ஹெல்த் செயலியில் மனநிலையைப் பதிவு செய்யும் முறை
ஐபோனில், ஹெல்த் செயலிக்குள் செல்லவும்.
அதில் Health என்ற பிரிவில், Mental Wellbeing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் State of Mind என்பதைத் தெரிவு செய்யவும்
நீங்கள் முதன்முறையாக, இந்தச் சேவையைப் பயன்படுத்துபவராக இருந்தால், “Get Started” என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது, உங்களுக்கு என்ன மனநிலை உள்ளது என்பதைப் பொறுத்து, அதில் உள்ள சரியான தேர்வைத் தேர்ந்தெடுக்கவும்.
பின், Next என்பதை அழுத்தவும்.
உங்களது தற்போதைய மனநிலையைச் சிறப்பாக விளக்கும் வகையிலான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பின், அதில் உங்களை அதிகம் பாதிப்பிற்குள்ளாக்கிய வார்த்தைகளைத் தெரிவு செய்து, அந்தச் செயல்பாட்டை நிறைவு செய்யவும்.
இந்தச் செயலியானது, பயனர்களை அதிகம் கவர்ந்திழுக்கும் வகையிலான வடிவமைப்பைத் தன்னகத்தே கொண்டு உள்ளது. இதன்மூலம், பயனர்கள் தங்களது விருப்பங்களை எளிதாகத் தேர்வு செய்ய முடிகிறது. இந்தச் செயலியில், பயனர்களின் மனநிலையை எளிதில் அடையாளம் காண நுண்ணறிவுச் செயல்பாடுகள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. போதிய அளவிலான உறக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கைமுறைக் காரணிகளை மட்டுமல்லாது, உடல் மற்றும் மனதின் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கு, இந்த நுண்ணறிவு அம்சங்கள் பேருதவி புரிகின்றன.
ஆப்பிள் வாட்ச் பயனர்கள்
Mindfulness செயலியைத் திறக்கவும்.
அதில் மனநிலை என்பதைத் தெரிவு செய்து, அந்த நேரத்தில் எப்படி உணர்கிறீர்கள் என்பதைத் தெரிவு செய்யவும்.
அதில் ஒரு உணர்வைத் தேர்ந்தெடுக்க, டிஜிட்டல் கிரவுனைச் சுழற்றி, அதன் மேல்புறத்தில் உள்ள பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.
பின், அந்த உணர்வினை விவரிக்கும் வகையிலான சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் புதிய அப்டேட்டின் மூலம், ஐபோன் பயனர்கள், ஹெல்த் செயலியில், தங்களது மனநிலையைப் பதிவுசெய்வதற்கான நினைவூட்டல்களையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள முடியும். பயனர்கள், இந்தப் புதிய அப்டேட்டைப் பெற, உங்களது ஐபோனில், iOS 17 அல்லது iOS 17.1 பதிப்பைப் புதுப்பிக்கவும். நீங்கள், இந்த அப்டேட்டின் மூலமாக, உங்களது மன ஆரோக்கியத்தில் ஏதாவது ஒரு விரும்பத்தகாத மாற்றத்தைக் கண்டறிய நேரும்பட்சத்தில், உடனடியாக, சம்பந்தப்பட்ட மருத்துவரின் உதவியை நாடுவது நல்லது.
மனச்சோர்வை மதிப்பிடுகிறது
ஆப்பிள் ஐபோன், ஐபேட் மற்றும் வாட்ச்களில் உள்ள ஹெல்த் செயலியின் மூலம் மனச்சோர்வு மற்றும் கவலைச் சார்ந்த மதிப்பீடுகளை மேற்கொண்ட பயனர்கள், அதில் ஏதாவது இடர்பாடுகளைக் கண்டறிய நேர்ந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளுதல் நலம்.
மேலும் வாசிக்க : அணியக்கூடிய சாதனங்கள் குறித்த பயனர் அனுபவங்கள்
உறக்க நிலையைக் கண்காணிக்கவும்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு, போதிய அளவிலான உறக்கம் மிகவும் இன்றியமையாததாகும். இது, உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், நினைவுகளை ஒருங்கிணைப்பதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அறிவுசார்ந்த நடவடிக்கைகள் மற்றும் மனநிலை மேம்பாட்டிற்கும் பேருதவி புரிகிறது. நீங்கள் சரியான அளவில் உறக்கத்தை மேற்கொள்கிறீர்களா என்பதைக் கண்காணிப்பதற்கு, ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச், உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களின் உதவியால், சாந்தமான மனநிலையைப் பேணிக்காத்து, மன ஆரோக்கியத்தைக் காப்பீராக….