Image of a persons hand wearing a smart watch app that shows steps walked, kilometers and heart beat per min.

அணியக்கூடிய சாதனங்கள் குறித்த பயனர் அனுபவங்கள்

மக்கள், சமீபகாலமாகவே, தங்களது உடல்நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் துவங்கி உள்ளனர். இதற்காக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் அவர்கள் தயாராகிவிட்டனர். உறக்கம், நடைப்பயிற்சி போன்ற உடல் ஆரோக்கிய அம்சங்களைக் கண்காணிக்கும் அணியக்கூடிய சாதனங்கள் இப்போது கிடைக்கின்றன.இது உங்களை அதிகச் செயல்திறன் கொண்டவர்களாக ஆக்குவது மட்டுமல்லாது, உங்களது தினசரி நடவடிக்கைகளை ஆராய்ந்து, உங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்ள உதவுகின்றது.

இந்தக் கட்டுரையில், ரியல்மீ உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்களின் அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

ரியல்மீ வாட்ச் 3 ப்ரோ

ரூ. 5 ஆயிரத்திற்கு உள்ளாக வெளியான ரியல்மீ வாட்ச் 2 ப்ரோ, பயனர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ரியல்மீ நிறுவனம், ரியல்மீ வாட்ச் 3 ப்ரோவை அறிமுகப்படுத்தி உள்ளது.

வழக்கமான வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், பட்டையுடன் சேர்த்து 40 கிராம் எடை மட்டுமே உள்ளது. இது மிகவும் இலகுவானதாக உணரப்படுகிறது.இந்த ஸ்மார்ட் வாட்சை, நாள்முழுவதும் அணிந்திருந்தாலும், எவ்விதத் தோல் எரிச்சலும் ஏற்படுவதில்லை.

தூசி மற்றும் நீர் உட்புகாத் தன்மைக் கொண்டிருப்பதால், இதற்கு IP68 மதிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை அணிந்து கொண்டு கனமழையில் ஜாக்கிங் செல்வது மட்டுமல்லாது. சேற்றில் விழுந்தாலும், எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

வாட்ச் சார்ஜிங் போர்ட் அருகில் இரத்தத்தில் ஆக்சிஜனைக் கண்டறிய உதவும் SpO2 மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிய உதவும் சென்சார்கள் உள்ளன. ஆக்ஸிமீட்டரானது, துல்லியமான அளவீடுகளை வழங்குகிறது.

1.78 அங்குல அமோலெட் டிஸ்பிளே, 3680×448 பிக்சல்கள் ரெசொல்யூசனுடன் உள்ளது. உங்கள் வாட்ச் டிஸ்பிளேவை, 5 அளவுகளில் பிரகாசப்படுத்திக் கொள்ளலாம். புதிதாக, எந்தவொரு செயலியையும், இதில் இன்ஸ்டால் செய்ய இயலாது.

நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிளிங் உள்ளிட்ட அளவீடுகளையும், வலிமைப் பயிற்சிகளான கிரிக்கெட், பாட்மிடன், கால்பந்து உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கிறது. இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, மன அழுத்தத்தைக் கண்காணிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி மற்றும் ஜாக்கிங் நிகழ்வுகளின் போது கடக்கும் தொலைவு, ஆழ்ந்த உறக்கக் கால அளவு, REM அளவீடு, எழுந்திருக்கும் நேரம் உள்ளிட்டவைகளைத் துல்லியமாக மதிப்பீடு செய்கிறது.

மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல், வாட்சப் உள்ளிட்டவற்றிலிருந்து வரும் தகவல்களை ஸ்மார்ட் வாட்ச்சிலேயே பார்க்கும் வசதி, ஆனால், இதற்குப் பதிலளிக்க இயலாது, புளூடூத் காலிங் வசதி இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ள நிலையிலும், அதற்கு ஏற்றாற்போல, திறன் வாய்ந்த பேட்டரி இதில் இணைக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளது.

Image of an athlete wearing a smart watch on her hand touches the screen with the other hand and virtual images related to a fitness app displayed in the middle of the image.

Amazfit GTS 4 Mini

Amazfit நிறுவனம், GTS வரிசையில், Amazfit GTS 4 Mini ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது. வடிவமைப்பில் புதிதாக எந்தவொரு புதிய மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், பிரீமியம் லுக், அனைவரையும் கவர்வதாக உள்ளது. வெறும் 31.2 கிராம் எடைப் பார்ப்போரை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்குகிறது.

நாள் முழுவதும் அணிந்திருந்தால் கூட, அதில் இருக்கும் சிலிக்கான், வியர்வையினால் ஏற்படும் எரிச்சல் உணர்வை அளிப்பதில்லை. அமோலெட் டிஸ்பிளேவில் கீறல்கள் மற்றும் பள்ளங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் அம்சம் உள்ளது. டிஜிட்டல், அனலாக் முறையிலான ஃபிட்னெஸ் தரவுகள் கண்காணிப்பு முறைகள் இதில் உள்ளன. தேவையானவற்றை, நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நடக்கும் தொலைவு, எரிக்கப்படும் கலோரி, இதயத்துடிப்பை அளவிடுவதற்கு ஏற்ப வாட்ச்ஃபேஸ்கள் உள்ளன.

Amazfit GTS 4 Mini ஸ்மார்ட் வாட்ச்சில், Zepp செயலியை நிறுவி அதன்மூலம்,Sync நிகழ்வை மேற்கொள்ள முடியும். உறக்கத் தரவுகள் மட்டுமல்லாது, உடற்தகுதிக்கான இலக்குகளின் வாராந்திர மற்றும் மாதாந்திர அறிக்கைகளை, இதன்மூலம் பெற இயலும்.

Amazfit 3 சீரிஸ் வாட்ச்களில், BioTracker PPG 3.0 வகைப் பயோமெட்ரிக் சென்சார் உள்ளது. இதன் உதவியால், இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு, மன அழுத்த மாறுபாடு உள்ளிட்டவைகளைக் கண்டறிய முடியும். இந்த ஸ்மார்ட் வாட்சின் உதவியுடன் 30 வினாடிகளில் ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவைக் கணக்கிட முடியும். மேலும், 45 வினாடிகளுக்குள் இதயத்துடிப்பு, மன அழுத்த மாறுபாட்டின் விகிதம், சுவாச விகிதம் உள்ளிட்டவற்றையும் கணக்கிட இயலும்.

உறக்கநிலைக் கண்காணிப்புகளை, மிகவும் துல்லியமாக அளவிடுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்சின் மூலம், போனிற்கு வரும் அழைப்புகளை, ரத்து செய்ய இயலுமே தவிர, அதற்குப் பதிலளிக்க இயலாது. சில செயலிகளில் வரும் அழைப்புகளைக் கொண்டு நினைவூட்டல்கள், வானிலை அறிக்கைகள் உள்ளிட்டவைகளை உங்களது வாட்ச்ஃபேஸிலேயே காண இயலும்.

Amazfit வாட்ச்களில், அற்புதமான பேட்ட்ரி பேக் அப் இருப்பதை யாராலும் மறக்கவோ அல்லது மறுக்கவோ இயலாது. ஒருமுறை முழுசார்ஜ் செய்தால், 15 நாட்கள் வரை, இதன் பேட்டரி திறன் இருக்கும். பேட்டரி சார்ஜ் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால் கூட, GPS துல்லியமாகச் செயலாற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு வருட வாரண்டியுடன் இந்தியாவில், இந்த ஸ்மார்ட் வாட்சின் மதிப்பு ரூ. 7,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில், நல்ல ஸ்மார்ட் வாட்ச் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு, இந்த ஸ்மார்ட்வாட்ச், இனிய தேர்வாக அமையும்.

Noise ColorFit Pro 4

அதிக ரெசோல்யூசன் கொண்ட டிஸ்பிளே, 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள், 150க்கும் மேற்பட்ட வாட்ச்ஃபேஸ்கள் உள்ளன. Noise ColorFit Pro 4 ஸ்மார்ட் வாட்ச்சை, நாள்முழுவதும் அணிந்தால் கூட, இதில் உள்ள சிலிக்கான், வியர்வையினால் ஏற்படும் எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. இதில் பாலிகார்பனேட் செல்களால் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், 25 கிராமுக்குக் குறைவாக உள்ளது.

தூசி மற்றும் நீர் உட்புகாத் தன்மைக் கொண்டிருப்பதால், இதற்கு IP68 மதிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை அணிந்து கொண்டு கனமழையில் ஜாக்கிங் செல்வது மட்டுமல்லாது, சேற்றில் விழுந்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

தினசரி நடவடிக்கைகள், இதயத்துடிப்பு, உறக்க நிலைத் தரவுகள், மியூசிக் பிளேபேக் உள்ளிட்ட விட்ஜெட்கள், மக்களுக்குப் பயன் அளிப்பவையாக உள்ளன.

மியூசிக் கண்ட்ரோல், தொலைபேசி அழைப்புகள், வெவ்வேறு செயலிகளின் மூலமாக வரும் நோட்டிபிகேசன்கள், உள்ளிட்டவைகளை எளிதாகக் கட்டுப்படுத்த இயலும். இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மூலம் எளிதாக அழைப்புகளை மேற்கொள்ள இயலும். இதிலேயே மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் இருப்பதால், ஹெட்செட் இணைக்கத் தேவையில்லை.

மாதவிடாய் சுழற்சியைக் கண்காணிக்கும் செயல்பாடு இதில் உள்ளது இதன் தனிச்சிறப்பம்சம் ஆகும். பேட்டரியை ஒருமுறை முழுசார்ஜ் செய்தால், 7நாட்கள் வரைப் பயன்படுத்த முடியும். இந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட 6 நாட்கள் வரை, லெவல் 3 அளவிலான பிரகாசத்துடன் வைத்திருக்க முடியும். நாள் ஒன்றுக்கு 2முறை ஆக்ஸிமீட்டர் மதிப்பீடு, 3 முறை உறக்கநிலை மதிப்பீடுகளை மேற்கொள்ள இயலும்.

ஒரு வருட வாரண்டியுடன், இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரு. 3,499 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வாட்ச்சை, குறைத்து மதிப்பிட இயலாது. இந்தப் பட்ஜெட்டில் கிடைக்கும் தரமான வாட்ச் இதுவாகத்தான் இருக்கும்.

மேலும் வாசிக்க : 60 வயதைக் கடந்தவர்களுக்கான உடற்பயிற்சி முறைகள்

Boat Watch Primia

வயர்லெஸ் ஆடியோ உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள Boat நிறுவனம், பிஃனெஸ் சாதனங்கள் பிரிவில் Boat Watch Primiaவை அறிமுகப்படுத்தி உள்ளது. அமோலெட் டிஸ்பிளே, நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி எனப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த வாட்ச், ரூ. 5 ஆயிரத்திற்கு உள்ளேயே மதிப்பிடப்பட்டு உள்ளது.

நீர் உட்புகாத் தன்மைக் கொண்டிருப்பதால், இதற்கு IP67 மதிப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதை அணிந்து கொண்டு கனமழையில் ஜாக்கிங் செல்வது மட்டுமல்லாது, சேற்றில் விழுந்தாலும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.வாட்ச் சார்ஜிங் போர்ட் அருகில் இரத்தத்தில் ஆக்சிஜனைக் கண்டறிய உதவும் SpO2 மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிய உதவும் சென்சார்கள் உள்ளன. ஆக்ஸிமீட்டரானது, துல்லியமான அளவீடுகளை வழங்குகிறது. ரூ. 5 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் வாட்ச் ஆக இது விளங்குகிறது.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.