A sad girl holding her head, looking distressed, with pillows and plants around, reflecting the need for mental health tools.

மன ஆரோக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்தும் செயலிகள்

மனநல ஆரோக்கியம் சார்ந்த பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களிடையே அதிகரித்து வருகிறது. விழிப்புணர்வு அதிகரித்ததன் காரணமாக, மனநல ஆரோக்கியத்தை நிர்வகிக்கும் வகையிலான பல்வேறு கருவிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. மனநல ஆரோக்கியச் செயலிகள் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளன.மனநலப் பாதிப்புகளின் சிகிச்சை முறைகளுக்கு உறுதுணையான இந்தியாவில் சிறந்த 5 செயலிகள் குறித்து இங்கு விரிவாகக் காண்போம்.

மனநல ஆரோக்கிய செயலிகள் ஏன் இன்றியமையாதது?

மனநல ஆரோக்கியப் பாதிப்பால் பாதிக்கப்பட்டு உள்ள நோயாளிகளுக்குச் சமூக ஆதரவு முக்கியமானதாக உள்ளது. அவர்களுக்கு, இந்த ஆதரவினை, செயலிகள் வழங்குகின்றன.

அணுகல்நிலை

செயலிகளின் மூலம் மக்களுக்கு உதவிகள் எப்போதும் கிடைக்கும் நிலை உள்ளதால், அதை எப்போது தேவைப்படுகிறதோ, அப்போது அதனை அணுகி, தேவைப்படும் உதவியினைப் பெற்றுக் கொள்ள இயலும்.

விலை மலிவு

பாரம்பரிய சிகிச்சை முறையுடன் ஒப்பிடும்போது, சில வகையான செயலிகள் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ, அதன் சேவைகளை வழங்கி வருகின்றன.

இந்தச் செயலிகள் நினைவாற்றல் பயிற்சிகள் மற்றும் CBT போன்ற பல சிகிச்சை முறைகளை உள்ளடக்கியுள்ளன.

இந்தியாவில் மனநல ஆரோக்கிய செயலிகளின் வளர்ச்சி

  • இந்தியாவில் மனநல ஆரோக்கிய செயலிகளின் பயன்பாடு, சமீபகாலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • 42 சதவீத இந்தியர்கள், பதட்டம், மனச்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் மனநல ஆரோக்கிய செயலிகளின் வளர்ச்சி 400 சதவீதம் அதிகரித்து உள்ளது.
  • 18 முதல் 34 வயதினருக்குட்பட்ட 60 சதவீதத்தினருக்கு இந்தச் செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் முன்னணி 5 மனநல ஆரோக்கியச் செயலிகள்

Wysa

வைசா என்பது செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்போட் ஆகும். இது உரையாடல் மூலம் மனநல ஆதரவை வழங்குகிறது.

அம்சங்கள்

  • மனநிலைக் கண்காணிப்பு
  • அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை நுட்பங்கள்
  • தியான நடைமுறைகள்

YourDOST

தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவுக்காக, மனநல நிபுணர்களுடன் பயனர்களை இணைக்கிறது.

அம்சங்கள்

  • சிகிச்சை நிபுணர்களுடனான தொடர்பு
  • மனநல ஆரோக்கியம் தொடர்பிலான தலைப்புகளில் கட்டுரைகள் மற்றும் ஆதாரங்கள், பட்டறைகள் மற்றும் வெபினார்கள்
  • தொழில்முறை வழிகாட்டுதலை நாடும் நபர்களே, இலக்கு பயனர்களாக உள்ளனர்.

BetterLYF

உணர்ச்சி நல்வாழ்வில் போதிய கவனம் செலுத்துகிறது.

பயிற்சி பெற்ற நிபுணர்களுடன், தங்குதடையின்றிப் பேசுவதற்கான தளத்தை வழங்குகிறது.

அம்சங்கள்

  • மனநிலைச் சார்ந்த கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுகள்
  • சமூக ஆதரவு குழுக்கள்
  • சமூக ஆதரவை விரும்புபவர்கள், இதில் இலக்கு பார்வையாளர்களாக உள்ளனர்.

Headspace

இது சர்வதேச அளவில் பிரபலமான செயலி. இந்தியாவில் இதன் நினைவாற்றல் மற்றும் தியான பயிற்சிகள் மிகவும் பிரபலமானவை.

அம்சங்கள்

  • உறக்க முறைக்கான நடவடிக்கைகள்
  • தியான நடைமுறைகளுக்கான வழிகாட்டல்கள்
  • கவனம் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு
  • நினைவாற்றல் நடைமுறைகளை நாடும் நபர்களே, இதன் இலக்கு பார்வையாளர்கள் ஆவர்.

Calm app on iPhone for practicing meditation and sleep, designed to improve sleep quality.

Calm

உறக்க மேம்பாட்டிற்காக, இந்தச் செயலிகள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தச் செயலியில், தியான நடைமுறைகள், அமைதியான ஒலிகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.

அம்சங்கள்

  • உறக்க நடைமுறைகள்
  • சுவாசப் பயிற்சிகள்
  • தினசரி அமைதியான அமர்வுகள்
  • உறக்கம் மற்றும் மன அழுத்தத்துடன் போராடுபவர்களே, இதன் இலக்கு பார்வையாளர்கள் ஆவர்.

மேலும் வாசிக்க : மருத்துவத்துறையில் தொழில்நுட்பத்தில் புதிய வரவுகள்

மனநல சிகிச்சைக்கான செயலிகளின் நன்மைகள்

மனநல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளுக்கான செயலிகள், சிகிச்சைச் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

வசதி

நோயாளிகள், தாங்கள் விரும்பும் இடங்களில் வசதியாக நிபுணர்களுடனான ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்க இயலும்.

பன்முகத்தன்மை

பல்வேறு செயலிகள், பல்வேறுவிதமான சிகிச்சை அணுகுமுறைகளை வழங்குகின்றன. பயனர்கள், தங்களுக்கு எது தேவையோ, அதைப்பொறுத்து, தேவையான ஒன்றைத் தேர்வு செய்ய இயலும்.

முன்னேற்ற கண்காணிப்பு

இது, பயனர்கள் தங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அனுமதிக்கிறது. இது அவர்களைப் பொறுப்புணர்வுடனும், உத்வேகத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.

சிகிச்சை முறைகள்

  • CBT எனப்படும் அறிவாற்றல் நடத்தைச் சிகிச்சை முறைகள்
  • எதிர்மறைச் சிந்தனை முறைகளை மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
  • மனந்தெளிநிலைச் சிகிச்சை
  • நல்லெண்ணங்களுடன் இருப்பதும், விழிப்புடன் இருப்பதையும் ஊக்குவிக்கிறது.
  • DBT எனப்படும் இயங்கியல் நடத்தைச் சிகிச்சை
  • அறிவாற்றல் மற்றும் நடத்தை உத்திகளை ஒருங்கிணைக்கிறது.
  • ACT எனப்படும் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அர்ப்பணிப்பு சிகிச்சை
  • இது உணர்வுகள் மற்றும் எண்ணங்களை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கிறது.

சவால்கள் மற்றும் வரம்புகள்

மனநல ஆரோக்கியம் சார்ந்த செயலிகள், பெரும்பாலானோருக்கு உதவிக்கரமாக உள்ளபோதிலும், அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தீவிரமான மற்றும் கடுமையான மனநலப் பிரச்சினைகளுக்கு, நேரில் சிகிச்சைப் பெறுவது என்பது கட்டாயம் ஆகும்.

செயலிகள் வழங்கும் தகவல்கள், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், இதன் நம்பகத்தன்மைக் கேள்விக்கு உரியதானதாக மாறுகிறது.

செயலிகளில் உள்ளீடு செய்யப்படும் தரவுகள், பாதுகாப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்வது, பயனர்களின் பொறுப்பாகவே உள்ளது.

மனநல ஆரோக்கியப் பாதிப்புகளில் இருந்து முழுமையாக விடுபட விரும்புபவர்கள், சரியான செயலியைத் தேர்ந்தெடுத்து, அதன் வழிமுறைகளைக் கவனமாகவும், சரியான முறையிலும் கடைப்பிடிக்கும்பட்சத்தில், அந்தப் பாதிப்பில் இருந்து விரைவில் பூரண நலம் பெறுவார்கள்.

Leave A Comment

Copyright © 2025 Health Design | All Rights Reserved.