உங்கள் வாழ்க்கைமுறை மற்றவர்களைப் பாதிக்கிறதா?
உணர்வுமிகு வாழ்க்கை என்பது, தனிப்பட்ட நல்வாழ்வுக்கு அப்பாற்பட்டது ஆகும். இது நாம் வாழும் கோளின் நல்வாழ்க்கைக்கும் காரணமாக உள்ளது. இது சுற்றுச்சூழலில், பாதிப்பினைக் குறைப்பது மட்டுமல்லாது, நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் தேர்வுகளை உள்ளடக்கியதாக உள்ளன.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், கார்பன் தடத்தைக் குறைப்பதற்கும், வருங்கால சந்ததியினருக்காக நாம் வாழும் கோளினைப் பாதுகாப்பதற்கு, சுற்றுச்சூழல் – நட்பு வாழ்க்கைமுறையை வாழ்வது அவசியம் ஆகும். கழிவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பது முக்கியமானது. அதுபோல, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் சுற்றுச்சூழல் மீதான பாதிப்புகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.
நேர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லச் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான வாழ்க்கைமுறைப் பழக்கங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டு உள்ளன.
மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் குறைத்தல்
மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் குறைத்தல் நிகழ்வுகள், சுற்றுச்சூழல் நட்புரீதியிலான நிலையான வாழ்க்கைமுறையை நோக்கிய முதல்படி ஆகும். ஆற்றல், நீர் மற்றும் மூலப்பொருட்கள் உள்ளிட்ட குறைவான வளங்களை மீண்டும் மேற்கொள்வதன் மூலம், உற்பத்தி செய்யும் கழிவுகளின் அளவு குறைகிறது.
பயன்பாட்டில் இல்லாதபோது விளக்குகளை அணைத்தல், நீர்ப் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப்போக்குவரத்துகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம், இதை அடைய இயலும்.
குறைந்தபட்சப் பேக்கேஜிங் கொண்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்தல், காபி அல்லது தேநீர்க் கோப்பைகள் உள்ளிட்ட மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களைப் பயன்படுத்தும் நிகழ்வே, மறுபயன்பாடு என்று வரையறுக்கப்படுகிறது.
மறுசுழற்சி நிகழ்வும் மிக முக்கியது ஆகும். ஏனெனில், இது நிலப்பரப்புகளில் ஏற்படும் கழிவுகளின் அளவைக் குறைக்கிறது. இதன்மூலம், புதிய பொருட்களுக்கான தேவைகள் குறைகின்றன. 2022 ஆம் ஆண்டில், இந்தியாவின் மறுசுழற்சி விகிதம் 22.1 என்ற சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
நீர்ப் பாதுகாப்பு
நீர் மூலங்களைப் பாதுகாப்பதும், மாசுபாட்டைக் குறைப்பதும் அவசியம் ஆகும்.கசிவுகளைச் சரிசெய்தல், குறைந்த ஓட்டம் கொண்ட ஷவர்ஹெட்ஸ், குழாய்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீர் வீணாவது தடுக்கப்படுவதுடன், நீர் நுகர்வையும் குறைக்க இயலும். உதாரணமாக, நீங்கள் பல் துலக்கும்போது, ஷேவிங் செய்யும் போதும், குழாயை மூடிவிடவும். பாத்திரங்களைக் கழுவும்போது, குழாயை மூடி வைக்கவும்.
நாம் வசிக்கும் வீடுகள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர்ச் சேகரிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
சூரிய ஒளி அல்லது காற்று சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாட்டின் மூலம், கார்பன் தடம் மற்றும் புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பது குறைகிறது. பெரிய அளவிலான மின்சாரக் கட்டணங்களைச் சேமிக்க விரும்புபவர்கள், சோலார்ப் பேனல்களை நிறுவ இயலும். இதில் விருப்பம் இல்லை என்றால், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நாடலாம்.
ஆற்றல் பாதுகாப்பு
ஆற்றல் திறன் கொண்ட சாதனங்களைச் சான்றளிக்கும் விதத்திலான ஆதரவு திட்டமே, எனர்ஜி ஸ்டார் ஆகும். இந்த லேபிள் கொண்ட உபகரணங்களைப் பயன்படுத்துவது முன்னுரிமை அளிப்பதன் மூலம், அதிகளவிலான ஆற்றலைச் சேகரிக்க இயலும். பெரிய சாதனம், தேவைக்கும் அதிகமான ஆற்றலைப் பயன்படுத்துவதால், அதைத் திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதலான ஆற்றலைச் சேமிக்க இயலும்.
பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தவும்
பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழலை, பல்வேறுவிதமான மாசுபாடுகளில் இருந்து காக்க இயலும். இதில் உங்களுக்கு எது சாத்தியமானது என்பதைக் கண்டறிந்து, அதைப் பயன்படுத்தவும். நீங்கள் உங்கள் அலுவலகம் அல்லது பணியிடங்களுக்கு அருகிலேயே வசிக்கிறீர்கள் என்றால், இருசக்கர வாகனத்தில் செல்வதற்குப் பதிலாக, நடைப்பயிற்சி மேற்கொண்டோ அல்லது சைக்கிளில் செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், மாசுபடுதலையும் குறைக்கிறது. தனிநபர் வாகனங்களின் எண்ணிக்கைக் குறையும்போது,போக்குவரத்து நெரிசல் குறைகிறது. இதனால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் பரவல் தடுக்கப்படுகிறது. இந்தியாவில், கிரீன் ஹவுஸ் எனப்படும் பசுமை இல்ல வாயுக்கள், வளிமண்டலத்தில் வெளிப்படுத்தலில் 29 சதவீதம், வாகனப் போக்குவரத்தின் மூலமாகவே நிகழ்கிறது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையே பயன்படுத்தவும்
அவரவர்கள் ஊர்களில் உள்ள உழவர்ச் சந்தைகளில் வாங்குவதன் மூலம், நமக்குப் புதிய காய்கறிகள் கிடைப்பதோடு மட்டுமல்லாது, உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதற்கான சிறந்த வழிமுறையாகவும் உள்ளது.
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழ வகைகளில், பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட பிற தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கல் இருப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை. இயற்கை விவசாய நடைமுறைகள், அதிக நிலைத்தன்மைக் கொண்டவை ஆகும். இந்த முறையில், வேதியியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது. இதன்மூலம், நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதோடு மட்டுமல்லாது, பல்லுயிர்ப் பெருக்கமும் ஊக்குவிக்கப்படுகின்றன.
இறைச்சி உணவுகளைக் கூடுமானவரைக் குறைக்கவும்
இறைச்சி உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதற்குப்பதிலாக, வாரத்தில் ஒருநாள் இறைச்சி உணவுகளைச் சாப்பிட வேண்டும். மற்ற நாட்களில், டோஃபு, பயறு, பீன்ஸ், சுண்டல் உள்ளிட்ட தாவர அடிப்படையிலான புரத உணவுகளை, உட்கொள்ளத் துவங்குங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும், 150 பவுண்டுகள் அளவிலான இறைச்சியை, ஒருநபர்ச் சராசரியாக உட்கொள்கிறார். இறைச்சி உணவுகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வைக் குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வீட்டிலேயே காய்கறிகளை வளர்க்கவும்
உங்களின் சொந்தப் பயன்பாட்டிற்காக, வீட்டிலேயே காய்கறிகள் உள்ளிட்டவற்றை வளர்ப்பதன் மூலம், கரியமில வாயு வெளியேற்றம் குறைவது மட்டுமல்லாமல், நிலையான வாழ்க்கை மேம்பாடும் சாத்தியமாகின்றது. வீட்டில் வளர்க்கப்படும் காய்கறிகளில், நாம் பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே பயன்படுத்துவது இல்லை. அவசரத் தேவைகளுக்காகக், கடைகளுக்குச் சென்று காய்கறிகள் வாங்கும் தேவையும் நீங்குகிறது. உங்கள் வீட்டின் பின்புறம், மொட்டை மாடி, பால்கனி ஆகிய இடங்களில் தோட்டம் அமைத்துக் காய்கறிகள் வளர்க்கலாம். ஹைட்ரோபோனிக் விவசாயத்தின் மூலமும், நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளை, விரும்பும் இடத்திலேயே வளர்த்துக் கொள்ள முடியும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருட்களையே பயன்படுத்தவும்
துப்புரவு சார்ந்த பொருட்களில், நமது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான அம்மோனியா, பாஸ்பேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். EBA மற்றும் கிரீன் ஷீல்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது சாலச் சிறந்தது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருட்கள், இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. இவைகளில் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அறவே இருப்பதில்லை. வினிகர், பேக்கிங் சோடா, எலுமிச்சைச் சாறு உள்ளிட்ட இயற்கையான பொருட்களில் இருந்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த துப்புரவுப் பொருட்களை நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.
மேலும் வாசிக்க : சிறந்த உறக்கம் – உறக்க நிகழ்வை நிர்வகிக்கும் முறைகள்
அதிகளவிலான மரங்களை நட்டு, காடுகள் வளர்ப்பில் ஈடுபடுவோம்
உங்கள் பகுதியில் நிகழும் மரம்நடு விழாக்களில் பங்கேற்கவும். காடு அழிப்பு மற்றும் மனிதர்களின் பயன்பாட்டு மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை நடவு செய்யவும், அதுதொடர்பான மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு, உங்களால் முடிந்த அளவு நன்கொடைகளை அளியுங்கள். சுற்றுச்சூழல் அமைப்புகளில் பங்கேற்று, அதன் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும். இந்தத் தொடர் நிகழ்வுகளானது, காடு வளர்ப்பு நிகழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
சர்வதேச அளவில், பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வின் 10 சதவீதப் பாதிப்பானது, காடுகள் அழிப்பினாலேயே ஏற்படுகிறது.
மறுபயன்பாடு முறையிலான மாதவிடாய் தயாரிப்புகளைப் பயன்படுத்தவும்
பெண்களின் மாதவிடாய் சுழற்சி நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் பொருட்கள், நில மாசுபாடு நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன. இந்தப் பொருட்கள், செய்றகையான மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கும் அதீதப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. மாதவிடாய் சுழற்சிப் பொருட்களை, இயற்கையான மூலங்களில் இருந்து தயாரிப்பதன் மூலம், அதனை மறுபயன்பாட்டிற்கும் உட்படுத்த இயலும். இதன்காரணமாக, நில மாசுபாடும் பெருமளவு தடுக்கப்படுகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
நிலையான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவது மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். இதுதொடர்பான நற்பழக்கங்களை, சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்டவைகளின் மூலம், மற்றவர்களிடம் பகிர்ந்து, இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை மேற்கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தேர்வுகளை நடைமுறைப்படுத்தி, வருங்காலத் தலைமுறையினருக்கு, சுற்றுச்சூழல் பாதிப்பின் தாக்கத்தைப் பெருமளவு குறைக்க உதவுவீராக…