உறக்கக் கண்காணிப்பு – உறக்க நிகழ்வை மேம்படுத்துமா?
உறக்க நிலையில் இருந்து தேவையில்லாமல் எழுவது என்பது நம்மில் பெரும்பாலானோர்த் தினசரி அனுபவிக்கும் கொடுமையான விசயமே ஆகும். இதற்கான காரணத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது.இன்றைய இளம் தலைமுறையினரிடம், போதிய உறக்கம் இல்லாத நிகழ்வு, அவர்களை உடல் ரீதியாக மட்டுமல்லாது, மனரீதியாகவும் பாதிக்கின்றது.
உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க, சந்தையில் பல்வேறு ஃபிட்னெஸ் டிராக்கர்கள் இருப்பதைப் போன்று, உறக்க நிகழ்வைச் சரியான அளவில் கண்காணிக்கப் போதிய அளவிலான டிராக்கர்கள் இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. சில நிறுவனங்கள், உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் செயலி, உறக்கத்தைக் கண்காணிக்கும் செயலி உள்ளிட்டவைகளை, ஒரே வாட்ச்சில் இடம்பெறும்வகையிலான சாதனங்களை உருவாக்கி உள்ளன.
உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள் உறக்க முறையை மேம்படுத்துகின்றன. இந்தச் சாதனங்கள் உறக்க வகைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமல்லாது, உறக்கச் சுழற்சி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றன. இனிமையான உறக்க நிகழ்விற்கு, சில மாற்றங்களை மேற்கொள்வது இன்றியமையாததாகிறது.
உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள்
உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள், உறக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாது, இதயத்துடிப்பின் விகிதம், உறக்கத்தின் தரம், ஆக்சிஜன் அளவுகள், குறட்டை நிலை, உறக்கக் காலம் உள்ளிட்டவைகளைக் கண்காணிக்கின்றது. உறக்க நிகழ்வின் மேம்பாட்டிற்குத் தேவையான சுகாதாரத் தரவுகளை வழங்கவல்லத் தனித்துவமான டிஜிட்டல் கருவிகளே, உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள் என்று வரையறுக்கப்படுகின்றன.
உறக்க நிகழ்வைக் கண்காணிப்பதற்கு, நீண்ட காலமாகவே, புல்லட் ஜர்னல் உறக்கக் கண்காணிப்பையே பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் பணம் படைத்தவர்களாக இருப்பின், உறக்கச் சிகிச்சை வழங்கும் பிரத்யேகக் கிளினிக்குகளில், சில இரவுகள் தங்கலாம். உறக்கத்தை வெவ்வேறு வழிகளில் கண்காணிக்கும் பொருட்டு, தொழில்நுட்ப வளர்ச்சியானது, பல கண்டுபிடிப்புகளை வழங்கி உள்ளது.
உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள், உறக்க முறைகள் குறித்த விலைமதிப்பற்ற தரவுகளை வழங்குவதாகவே உள்ளன. உங்கள் உறக்க முறையானது, ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதா என்பதைக் கண்டறிய இந்தச் சாதனங்கள் உதவுகின்றன.
உறக்கக் கண்காணிப்பு சாதனங்களின் நன்மைகள்
உறக்கக் கண்காணிப்பு சாதனங்கள் தனிநபர்களின் உறக்க முறைகளைத் துல்லியமாக அளவிடுகின்றன.சில விவரங்கள், டிராக்கர்களைப் பொறுத்து மாறுபடுகின்றன.
உடல் வெப்பநிலை
குறட்டை விடுதலின் காரணங்கள்
சுவாசித்தலில் நிகழும் மாறுபாடுகள்
இதயத்துடிப்பின் வீதம்
உறக்கத்தைக் கண்காணிக்கும் டிராக்கர்கள், உறக்கத்தைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், மேற்கண்ட நிகழ்வுகளையும் அளவிட உதவுகின்றன.
உறக்கக் கண்காணிப்பு சாதனங்களின் சிறப்பம்சங்கள்
உடல்நலத்தைக் கண்காணிக்கும் வகையிலான டிராக்கர்கள், தற்போது பன்மடங்கு அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் நடந்த காலடிகளின் எண்ணிக்கை, ரத்தத்தில் உள்ள செறிவு ஆக்சிஜனின் அளவு மற்றும் இதயத்துடிப்பின் வீதத்தைக் கண்காணிக்கும் வகையிலான சாதனங்களை, இன்று பலரும் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்தச் சாதனங்கள், மேற்கண்ட நிகழ்வை மட்டுமல்லாது, உறக்க நிகழ்வைக் கண்டறியவும் உதவுகின்றன.
சந்தையில் உள்ள சிறந்த உறக்கக் கண்காணிப்புச் சாதனங்களை முதலில் கண்டறிய வேண்டும். இந்தச் சாதனங்களில், சிறந்த உறக்கத்திற்கான அம்சங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய வேண்டும்.சில அம்சங்கள், உங்களுக்குப் பொருந்தாமலும் இருக்கலாம் என்பதால், தேர்வு மிகவும் அவசியம் ஆகும். உறக்கத்தைக் கண்காணிக்க உதவும் வகையிலான செயலி அடங்கிய டிஜிட்டல் சாதனத்தை, கைகளில் அணியலாம் அல்லது தலையணையில் பொருத்திக்கொள்ளும் வகையில் இருப்பது நலம்.
உறக்கக் காலம், உறக்கத்தின் தரம், அதன் நிலைகள் உள்ளிட்டவைகளே, சிறந்த வகையான உறக்கக் கண்காணிப்புச் சாதனங்களின் சிறப்பம்சங்களாக வரையறுக்கப்படுகின்றன.
செயல்படும் முறை
உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள் பொதுவாக, கைகளின் மணிக்கட்டில் அணியும் வகையிலான வாட்ச் ஆகவே உள்ளன. இந்தச் சாதனங்கள், உறக்க நிகழ்வின் போது, நிகழும் இயக்க மாறுபாடுகள், குறட்டை விடுதல் போன்ற நிகழ்வுகளை அளவிடுகின்றன. இது, நீங்கள் எப்போது உறங்கச் சென்றீர்கள், எப்போது உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டீர்கள் என்ற கால அளவு விகிதத்தை உங்களுக்கு வழங்குகிறது. சில சாதனங்கள், உறக்க நிகழ்வை மேம்படுத்துவதற்கான குறிப்புகளையும் வழங்குவதாக உள்ளன.
எத்தகைய அளவீடுகளை மேற்கொள்கின்றன?
உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்கள், கீழ்க்கண்ட நிகழ்வுகளைத் துல்லியமாக அளவிடுகின்றன.
உறக்கக் கால அளவு
நீங்கள் எவ்வளவு நேரம் உறங்குனீர்கள் என்பதைக் கண்காணித்தலே, சிறந்த உறக்கக் கண்காணிப்பு சாதனத்தின் முக்கிய அம்சம் ஆகும். இது நல்ல உறக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படுகிறது. நீங்கள் உறங்கத் துவங்கும் நேரத்தையும், உறக்கத்தின் இடையே, நீங்கள் புரண்டு படுக்கும் நேரத்தையும் பதிவு செய்து, அதைச் செயலியின் திரையில் காண்பிக்கும். இந்த முறையில், நீங்கள் செயலற்ற நிலையில் இருந்த நேரத்தைக் கணக்கெடுப்பதன் மூலம், நீங்கள் எவ்வளவு நேரம் நன்றாக உறங்குனீர்கள் என்பதைத் தெரிவிக்கும். உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள், எவ்வித இடையூறும் இல்லாமல், உறக்கத்தைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம் ஆகும்.
உறக்க நிலைகள்
சிறந்த உறக்கக் கண்காணிப்புச் சாதனம், உங்களின் உறக்க நிலைகளையும் எளிதாகக் கண்டறியும். இது நீங்கள் உறக்கத்தில் இருந்ததில் இருந்து, காலையில் அலாரத்தின் இயக்கத்தை நிறுத்தும் நேரம் வரை அளவிடும். நீங்கள் உறக்கத்தில் இருந்து விழிப்பதை எளிமையானதாக்கும் செயல்பாட்டை, சிறந்த உறக்கக் கண்காணிப்பு சாதனங்கள் தன்னுள் கொண்டுள்ளன. இது உங்களை இயற்கையான மற்றும் அமைதியான முறையில் உறக்கத்தில் இருந்து எழுப்புகிறது.
மேலும் வாசிக்க : ஆரோக்கியமான வாழ்க்கைமுறை எப்படிச் சாத்தியம்
உறக்கத்தின் தரம்
உங்கள் உறக்கம் தடைபடும் காலங்களை, உறக்கக் கண்காணிப்பு சாதனங்கள், கண்காணித்து, உறக்கத்தின் தரம் குறித்த தகவலை, அவைத் தெரிவிக்கும். உறக்கத்தின் போது நகருதல், திரும்பிப் படுத்தல், கழிவறைக்குச் செல்லுதல் உள்ளிட்டவை, உறக்கம் தடைபடுவதற்கான காரணிகளாக வரையறுக்கப்படுகின்றன. உடற்பயிற்சிக் கண்காணிப்பு சாதனங்களின் உதவிகொண்டும், உறக்கத்தின் தரத்தை நாம் கண்காணிக்கலாம்.
இந்தக் காரணிகளைத் தவிர்த்து, சில உறக்கக் கண்காணிப்புச் சாதனங்கள், நீங்கள் உறங்கும் அறையின் உறக்க நிலைகள், அறையில் உள்ள ஒளியின் அளவு, அறையின் வெப்பநிலை, உறக்கத்தைப் பாதிக்கும் வகையிலான பிற சுற்றுச்சூழல் காரணிகளை உள்ளிட்டவைக் குறித்த தகவல்களையும் வழங்குகின்றன.
சில வகைக் கண்காணிப்புச் சாதனங்கள், உறக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதுமட்டுமல்லாது, நீங்கள் எவ்வளவு மன அழுத்தத்தில் இருக்கின்றீர்கள், உங்கள் உடலில் எந்தளவிற்குக் காஃபின் வேதிப்பொருள் உள்ளது என்பதையும் அளவிடுகிறது. இதன்மூலம், நல்ல உறக்கத்திற்கு நீங்கள் பாதை வகுக்கலாம்.
சிறந்த சாதனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டுமா?
சந்தையில், உறக்கத்தைக் கண்காணிக்க உதவும் சாதனங்களில் பல வகைகள் இருப்பதால், அவற்றில் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது என்பது சவாலான நிகழ்வாகவே உள்ளது. உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்களை வாங்க திட்டமிட்டால், உங்களது பட்ஜெட், உறக்கத்தை மட்டும் கண்காணித்தால் போதுமா அல்லது சுவாச வீதத்தையும் அளவிட வேண்டுமா உள்ளிட்ட உங்களது விருப்பங்களைப் பொறுத்து உங்களது தேர்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
சிறந்த வகையிலான உறக்கத்தைக் கண்காணிக்கும் சாதனங்களைப் பயன்படுத்தி, உறக்க நிகழ்வை மேம்படுத்தி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…