A person with depression and anxiety drinking alcohol at work illustrates the connection to potential alcohol addiction.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவது எப்படி?

சர்வதேச அளவில், கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கவல்லத் தீவிரமான விஷயமாக, குடிப்பழக்கம் உள்ளது. இது நாள்பட்ட நோய்ப்பாதிப்பாக வரையறுக்கப்படுகிறது. நல்வாழ்வு, சமூகத் தொடர்புகள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மது அருந்துகின்றனர். இதனால் குடிப்பவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குடிப்பழக்கத்தை வெல்வது என்பது நீண்ட மற்றும் வளைவுகள் மிகுந்த பாதையாக உள்ளது. சில நேரங்களில், குடிப்பழக்கத்தை விடுவது என்பது சாத்தியமற்றது என்பதாகக் கூட நீங்கள் உணரலாம். ஆனால், அதில் உண்மையில்லை.

நீங்கள் எவ்வளவு பெரிய குடிகாரர் ஆக இருந்தாலும், குடிப்பதை நிறுத்த தயாராக இருந்தால், ஆல்கஹால், போதை உள்ளிட்ட குடிப்பழக்கத்தில் இருந்து நீங்கள் நிச்சயம் மீள முடியும். குடிப்பழக்கத்தைக் கைவிட, நீங்கள் அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்ற எவ்வித நிர்பந்தமும் இல்லை. எந்த நேரத்திலும், நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதில் இருந்து விடுபடும் பொருட்டு, திடீரென்று பெரிய மாற்றத்தைச் செய்யவோ அல்லது பெரிய அளவிலான முடிவுகளை எடுக்கவோ மெனக்கெட வேண்டாம். சிறுகச் சிறுக அப்பழக்கத்தில் இருந்து மீள்வது மட்டுமே, இதில் சரியான நகர்வு ஆக இருக்கும்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாதல் நிகழ்வானது, நாள்பட்ட நோயாக வரையறுக்கப்படுகிறது. இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு உட்பட்டு இருக்கும்போதிலும், அது அவர்களை மீண்டும் மீண்டும் மது அருந்த நிர்பந்திக்கிறது. மதுப்பழக்கத்தை வெல்ல மருத்துவ ஆலோசனை மற்றும் உறுதியான மனநிலையைக் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம் ஆகும்.

மதுப்பழக்கத்திற்கு அடிமையானதற்கான அறிகுறிகள்

மதுவைக் குடிக்கத் தினமும் ஏங்குதல்

அளவில்லாமல் மது அருந்துதல்

தினமும் மது அருந்த முடியாமல் இருக்க முடியாத நிலை

மதுப்பழக்கத்தை விட முயற்சித்தாலும், அதைக் கடைப்பிடிக்க இயலாமை

எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டாலும், தொடர்ந்து மது குடித்தல்

வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொறுப்புகளைப் புறக்கணித்தல்

சட்ட சிக்கல்களுக்கு உள்ளாதல்

உறவுகளில் பிணக்கு ஏற்படுதல்

மதுப்பழக்கத்தை மற்றவர்களிடமிருந்து மறைத்தல் உள்ளிட்டவை, மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் குணநலன்கள் மற்றும் அவர்கள் அடையும் பாதிப்புகள் ஆகும்.

ஆபத்துக் காரணிகள்

மரபியல்

குடிப்பழக்கத்தை, குடும்ப வரலாறாகக் கொண்ட நபர்கள் அவர்களாகவே, நோயை ஏற்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

சுற்றுச்சூழல் காரணிகள்

ஆல்கஹால் உள்ளிட்ட மது வகைகள் எளிதில் கிடைக்கும் சூழலில், வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரும், எளிதாக, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

நடத்தைக் காரணிகள்

அதீத வேகத்தில் வாகனம் ஓட்டுதல், சாகச நிகழ்வுகளில் அதிகம் ஈடுபடுபவர்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மனம் சார்ந்த ஆரோக்கியம்

மனச்சோர்வு, பதட்டம், இருமுனையப் பிறழ்வு உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளைக் கொண்டவர்கள், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம்.

அதிர்ச்சி உணர்வு

அதிர்ச்சி அல்லது துஷ்பிரயோக உணர்வை அனுபவித்தவர்கள், தங்கள் உணர்ச்சிகளைச் சரியான முறையில் கையாளத் தெரியாதவர்கள், மிக எளிதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.

Alcohol-related liver disease is shown with a damaged liver and a microscopic view of fatty deposits and cellular damage.

 

குடிப்பழக்கத்தின் விளைவுகள்

உடல்நலப் பிரச்சினைகள்

குடிப்பழக்கமானது கல்லீரல் நோய்ப்பாதிப்புகள் உயர் ரத்த அழுத்தம் , சில வகையான புற்றுநோய்கள் உள்ளிட்டவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.

சமூகம் சார்ந்த பிரச்சினைகள்

உறவுமுறைகளில் பிணக்குகள், சட்ட சிக்கல்கள், பொருளாதாரச் சிக்கல்கள் உள்ளிட்டவைகள் நிகழக் காரணமாக உள்ளன.

ஆபத்தான நடத்தைகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆபத்தான நடத்தைகளுக்குக் காரணமாக அமைகின்றன.

மனநலம் சார்ந்த பிரச்சினைகள்

கவலை, மனச்சோர்வு உள்ளிட்ட மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு, குடிப்பழக்கம் காரணமாக அமைகிறது.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள்

அதைப் பிரச்சினையாக அங்கீகரித்தல்

குடிப்பழக்கத்தைப் பிரச்சினையாக அங்கீகரித்து, அதற்கான உதவியை நாடுதலே, குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான முதல்படி ஆகும்.

உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுதல்

குடிப்பழக்கத்தினால், உடலில் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளுக்குக் காரணமான நச்சுகளையும், அதன் அறிகுறிகளையும் முழுமையாக அகற்றுதல் இன்றியமையாத நிகழ்வாகும்.

மேலும் வாசிக்க : இருமுனையப் பிறழ்வு மற்றும் அதன் வகைகள் யாவை?

சரியான சிகிச்சைமுறை

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்த்து, கலந்தாலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவதன் மூலம் குடியின் பிடியில் இருந்து விடுவிக்க இயலும்.

சிகிச்சைக்குப் பிறகான நலன்

சிகிச்சை முடிந்தவுடன், எல்லாமே முடிந்ததாக அர்த்தம் கொள்ளக் கூடாது. சிகிச்சைக்குப் பிறகும், நாம் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம்.

குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுச் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவது சவாலானாலும், சாத்தியமானதே. இதற்கு அர்ப்பணிப்பு, உதவி மற்றும் ஆதரவு தேவை. சிக்கலை ஒப்புக்கொண்டு, உதவி நாடினால் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை நிச்சயம்.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.