இருமுனையப் பிறழ்வு மற்றும் அதன் வகைகள் யாவை?
இன்றைய பரபரப்பான போட்டி உலகில், மக்கள் தொடர்ந்து உணர்ச்சி ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்துக் கொண்ட வண்ணமே உள்ளனர். ஆனால், இருமுனையப் பிறழ்வு நிகழ்வு என்பது, இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இருமுனையப் பிறழ்வு பாதிப்புள்ளவர்களுக்கு மனநிலையில் தீவிர ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இதனால் அன்றாடப் பணிகளைச் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இருமுனையப் பிறழ்வு என்பது சிக்கலான மனநிலைப் பாதிப்பு ஆகும். இந்நோய் உங்கள் மனநிலை, ஆற்றல் மற்றும் செயல்திறனைக் கடுமையாகப் பாதிக்கிறது.மனநிலைப் பாதிப்பின் தீவிரம், இருப்பு மற்றும் அதிர்வெண் ஆகியவற்றின் அடிப்படையில் இருமுனையப் பிறழ்வு பலவகைப்படும்.
இருமுனையப் பிறழ்வு பாதிப்பின் அறிகுறிகள், எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. இருமுனையப் பிறழ்வு பாதிப்பானது பித்து பிடித்தல் ஹைப்போமானிக், மனச்சோர்வு மற்றும் இதன் கலவை என பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதில் பித்து பகுதியின் அறிகுறிகள், குறைந்தது ஒருவாரக் கால அளவிற்கு நீடிக்கின்றன.
அறிகுறிகள்
- பாதிக்கப்பட்ட நபரானது மிகுந்த உற்சாக நிலையிலோ அல்லது எரிச்சல் நிலையிலோ இருத்தல்.
- இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு உறக்கத்தின் தேவைக் குறைகிறது.
- கவனச்சிதறல் அதிகரிக்கிறது.
- பேச்சில் தெளிவின்மை உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன.
ஹைப்போமானிக் பகுதி என்பது மிகக் குறுகிய கால அளவிற்கே, அதாவது 4 நாள்கள் மட்டுமே நீடிக்கும் பகுதி ஆகும். இந்த நிலையின் அறிகுறிகள், அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கும் அளவிற்கு இல்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விசயம் ஆகும்.
கலவை நிலையில் பித்து மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகள் விரைவு நிலையில் அடுத்தடுத்து ஒரேநேரத்தில் நிகழ்கின்றன.
இருமுனையப் பிறழ்வு பாதிப்பின் வகைகள்
முதல்வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பு
இந்த வகைப்பாதிப்பானது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பித்து பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. இந்தப் பாதிப்பானது, குறைந்தது ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இந்தப் பாதிப்பிற்கு உள்ளானவர்கள், எப்போதும் எரிச்சல் உணர்வுடனேயே இருப்பர்.
இந்தப் பாதிப்பின் மாற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதனால் நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோரால் கவனிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.நீங்கள் சமாளிக்க முடியாத அளவிலான துயரத்தில் இருந்தால், இதன் அறிகுறிகள் உங்களைப் பாதிக்கும். இது உங்கள் தனிப்பட்ட உறவுகள், பணி உறவுகள், மற்றும் உற்பத்தித்திறனை மிகக் கடுமையாகப் பாதிக்கும். இதுபோன்ற தருணங்களில், நம்பகமானவர்களுடன் பேசுவதன் மூலம், உங்களுக்குத் தேவையான கவனிப்பு மற்றும் ஆதரவைப் பெற இயலும்.
இரண்டாம் வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பு
இந்த வகைப் பாதிப்பில் ஹைபோமானிக் மற்றும் மனச்சோர்வு பகுதிகள் அதிகம் உள்ளன. இது முதல்வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பின் லேசான வடிவம் என்று சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
முதல்வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பில் ஏற்படும் மனச்சோர்வை, நீங்கள் மருத்துவரின் உதவியுடன் நிவர்த்தி செய்துவிடலாம். ஆனால், இரண்டாம், வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பு அல்லது பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுப் பாதிப்பில் ஏற்படும் மனச்சோர்வானது, கடுமையான மனநலப் பாதிப்புகளுக்கு வித்திட்டுவிடும் அபாயம் கொண்டது ஆகும்.
சைக்ளோதைமிக் குறைபாடு
இந்த பாதிப்பு உள்ளவர்கள், ஊசலாடும் வகையிலான மனநிலை மாற்றங்களை உணர்வர். மற்றவைகளோடு ஒப்பிடும்போது, இதன் அறிகுறிகள் மிதமானவை என்றபோதிலும், மனநல மருத்துவரிடம் சரியான சிகிச்சையைப் பெறுவது அவசியம் ஆகும். இந்தப் பாதிப்பு, சரியாக நிர்வகிக்க இயலாதபட்சத்தில், முதல்வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பு அல்லது இரண்டாம் வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பு ஆக மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இருமுனையப் பிறழ்வு பாதிப்பின் பொதுவான வகைகளை அறிந்துகொண்ட நீங்கள், இதனுடன் தொடர்புடைய மற்ற வகைகளும் உள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த வகை இருமுனையப் பிறழ்வு பாதிப்பானது, எந்த ஒரு குறிப்பிட்ட வகையுடனும் பொருந்தாது. இதுதொடர்பாக, மனநல மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது.
மேலும் வாசிக்க : பொருள் துஷ்பிரயோகப் பயன்பாட்டுச் சிகிச்சையின் அவசியம்
பெரும்பாலான இருமுனையப் பிறழ்வு பாதிப்புகள் பேச்சு சிகிச்சை மற்றும் மருந்துகள் மூலமாகச் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்பிற்கு உளவியல் சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர, அறிகுறிகள் மற்றும் அனுபவரீதியிலாக, திறந்தவகையிலான உண்மையான உரையாடலை மேற்கொள்வதின் மூலம், அனைவருக்கும் தகுதியான மற்றும் சரியான சிகிச்சையைப் பெற்றுத்தர இயலும்.
இருமுனையப் பிறழ்வு பாதிப்புகளை, அதன் வகைகளைச் சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையிலான சிகிச்சைகளை, உரிய நேரத்தில் மேற்கொண்டு, அப்பாதிப்பில் இருந்து முழுமையாக விடுதலை அடைந்து உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்வோமாக…