A person writing on a tab with virtual images of AI assistant chatbot in concept of AI artificial intelligence and prompt engineering.

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையில் AIயின் எதிர்காலம்!

பாரம்பரிய முறையிலான ஊட்டச்சத்துப் பயிற்சி முறைகள், பொதுவான உணவுத் திட்டங்களுடன் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பொருந்துகிறது. இதன்காரணமாக, இந்த முறையால், பயனர்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிவது இல்லை. இந்தப் பாரம்பரிய உணவுமுறையில் உணவு விருப்பங்கள், கலாச்சாரம், வாழ்க்கைமுறைப் போன்றவைக் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.இதனால், அதன் பயனர்களுக்கு, பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து முறையைப் பின்பற்ற கடும் சவாலாக உள்ளது.

கலோரி எண்ணிக்கை மற்றும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் இதில் உள்ளன. இதன்காரணமாக, இவைப் பயனர்களுக்கு உணவு தொடர்பான எதிர்மறை உணர்வையும், ஒழுங்கற்ற வகையிலான உணவு நடத்தைகளையும் ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதன்காரணமாகவே, தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து முறைப் பிரபலமாகத் துவங்கியது. இதன்மூலம், உடல்நலத்திற்கு நன்மைபயக்கும் விதமான ஆரோக்கிய இலக்குகளை அடைவது எளிமையாகி உள்ளது.

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையின் நன்மைகள்

இது தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அணுகுமுறை ஆகும். பயனர்களின் வயது, பாலினம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப இந்த ஊட்டச்சத்துப் பயிற்சிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

இது பயனர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, தேவையான மாற்றங்களை மேற்கொள்கிறது.மேலும் அவர்களின் ஊட்டச்சத்துத் தொடர்பான இலக்குகளை அடைவதற்குத் தேவையான உந்துதலையும் இது வழங்குகின்றது. நீங்கள் உணவுப் பரிந்துரைகளைச் சிறப்பாகக் கடைபிடிக்கவும், சுகாதார விளைவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

பாரம்பரிய ஊட்டச்சத்து முறையில் உள்ள சவால்கள்

உணவுப் பரிந்துரைகள் அதிகமாக உள்ளபோதிலும், ஒரு குறிப்பிட்ட அளவுடனேயே பொருந்தும் தன்மைக் கொண்டதாக உள்ளது. இது தனிப்பட்ட பயனர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையினதாக இல்லை. பயனர்களின் ஊட்டச்சத்து முறைகளைக் கண்காணிப்பதில் அதிகச் சிரமம் உள்ளிட்டவை, பாரம்பரிய ஊட்டச்சத்து முறையில் உள்ள சவால்களாக வரையறுக்கப்பட்டு உள்ளன.

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறை ஏன் சிறந்தது?

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையானது, பயனர்களின் தனிப்பட்ட தேவைகள், உணவுவகைகளின் விருப்பத் தேர்வுகள் மற்றும் அதன் இலக்குகளைக் கணக்கில் கொண்டு, சிறந்த விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றது.

முன்னேற்றத்தைக் கண்காணிக்க உதவுகிறதா?

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையானது, பயனர்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாது, அதன் தேவைக்கு ஏற்ற வகையிலான மாற்றங்களையும் மேற்கொள்கிறது. இதன்மூலம் கிடைக்கும் முடிவுகளைக் கண்காணித்து, அதன் அளவீடுகளைக் கண்டறிய உதவுகிறது.

A woman holding a smartphone above food items  kept on a table to track nutrition facts and calories in her food.

இது அனைவருக்கும் பொருந்துமா?

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையானது, எல்லா வயதினருக்கும் நன்மைப் பயப்பனவாக உள்ளது. ஏனெனில், இது தனிநபர்களின் தேவைகள் மற்றும் அவர்கள் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது ஆகும்.

உள்ளீடு செய்யப்படும் தரவுகள்

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையில், புதிய கணக்கைத் துவக்குவதற்காக வயது, பாலினம் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள்

மருத்துவ நிலைகள், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நிலைகள், ஒவ்வாமைகள் மற்றும் மருந்து முறைகள் பற்றிய விவரங்கள்

உணவு பரிந்துரைகளின் தரவுகள், சகிப்பின்மைக் குறித்த தகவல்கள், உணவுத்திட்டங்களில் உள்ள தனிப்பட்ட உணவுக் கட்டுப்பாடுகள்

உடல்நலனை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற்பயிற்சிகளின் அளவுகள்

உடல் எடை, உயரம், அளவுகள் குறித்த அளவீடுகள்

உறக்க நிலைகள், வேலை- வாழ்க்கைச் சமநிலை, மன அழுத்த பாதிப்பு தொடர்பான அளவீடுகள்

அணியக்கூடிய சாதனங்கள் மூலம் இதயத்துடிப்பு, நடைகளின் எண்ணிக்கை, உறக்கத்தின் தரம் போன்ற தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.

தொழில்நுட்பங்களின் பயன்பாடு

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) நுட்பங்கள்

தனிப்பட்ட உடல்நலம் மேம்பாட்டிற்கான அணுகுமுறையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) நுட்பங்கள் முக்கியமானவைகளாக உள்ளன. இந்த நுட்பங்கள், சுகாதாரம் தொடர்பான அளவீடுகள், அதன் செயல்பாட்டு நிலைகள் உள்ளிட்ட பயனர்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய உதவுகின்றன.

தனிப்பட்ட அளவிலான சுகாதார ஆலோசனைகள், உடற்பயிற்சித் திட்டங்கள் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்த, இந்த நுட்பங்கள் பேருதவி புரிகின்றன. இந்த இரண்டு நுட்பங்களின் தகவமைப்பு உள்ளிட்டவை, பயனர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்படுகின்றன. இதன்மூலம், தனிப்பட்ட பயனர் அனுபவத்தை அது உறுதி செய்கின்றது.

மேலும் வாசிக்க : தனிப்பட்ட ஊட்டச்சத்து முறையில் நியூட்ரிஜீனோமிக்ஸ்!

தரவு பகுப்பாய்வு

பயனர்த் தொகுப்புகள், சுகாதார அளவீடுகள், உடற்பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பரந்த அளவிலான தரவுகளைச் செயலாக்குவதற்கு, விளக்குவதற்குத் தரவு பகுப்பாய்வு முக்கியமானவைகளாக உள்ளன. இந்தத் தரவைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், முக்கிய அம்சங்களை அடையாளம் காண உதவுகிறது. இது தரவுகளைச் சேகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைச் செயல்படக்கூடிய மற்றும் பொருத்தமான வகையில் புரிந்துகொள்வதையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு பயனரும் அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுவதை உறுதிசெய்கிறது.

தனிப்பட்ட ஊட்டச்சத்துப் பயிற்சிமுறையில், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நுட்பங்கள், பயனர்களுக்கு அதிகப் பயனுள்ளதாக உள்ளன.

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.