அணியக்கூடிய ஃபிட்னெஸ் சாதனங்களின் நன்மை, தீமைகள்
நடைப் பயிற்சி, ஓட்ட பயிற்சியில் கடந்த தொலைவு, கலோரிகள் எரிப்பு உள்ளிட்ட உடற்பயிற்சி சார்ந்த அளவீடுகளைத் துல்லியமாகக் கண்டறிய, ஆக்டிவிட்டி டிராக்கர் எனப்படும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஃபிட்னெஸ் டிராக்கர்கள், அணியக்கூடிய வகையிலான எலெக்ட்ரானிக் கேட்ஜெட்கள் ஆகும். இதயத்துடிப்பைக் கண்காணிக்கவும் ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உதவுகின்றன. மற்ற சாதனங்களைப் போல, ஃபிட்னெஸ் டிராக்கர்களும் நன்மை மற்றும் தீமைகளை உள்ளடக்கி உள்ளன.
நன்மைகள் மற்றும் தீமைகள்
உங்களை நகர்த்த உதவுகின்றன
ஃபிட்னெஸ் டிராக்கர்கள், உடற்பயிற்சி அளவீடுகளை அளவிடப் பயன்படுகிறது. நீங்கள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் படிகள் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து இருந்தால், அந்த இலக்கு நிறைவேற்றப்பட்டதா என்பதை முன்கூட்டியே அறிவிக்க வழிவகை உள்ளன. நீங்கள் நீண்ட நேரமாக உட்கார்ந்திருக்கும்பட்சத்தில் உங்களுக்குத் தேவையான எச்சரிக்கைக் குறித்த நினைவூட்டலை அளிக்கின்றது.
இதயத் துடிப்பு
தற்போது பயன்பாட்டில் உள்ள் டிராக்கர்களில், இதயத்துடிப்பை அளவிட, ஆப்டிகல் அடிப்படையிலான சென்சார்களே பயன்படுத்தப்படுகின்றன. இது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பணிச்சூழலைப் பொறுத்து, மாறுபடும் இதயத்துடிப்பின் வீதத்தை நமக்குத் தெரிவிக்கிறது.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவீடு
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தின் போது, தங்கள் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் செறிவூட்டலை அறிய, பெரும்பாலானோர், ஆக்ஸிமீட்டர்களின் உதவியை நாடினர். இப்போது, SpO2 அளவீடு அம்சம் ஃபிட்னெஸ் டிராக்கர்களில் உள்ளது. ஆனால், இதன் அளவீடு துல்லியமாக இல்லை.
உறக்க நிகழ்வுகள்
பெரும்பாலான ஃபிட்னெஸ் டிராக்கர்கள், உங்கள் உறக்க நிகழ்வை, மாறுபட்ட அளவிலான நுட்பங்களுடன் கண்காணிப்பு மேற்கொள்கின்றன. சில டிராக்கர்கள், உங்களது உறக்கக் காலத்தை அளவிடுகின்றன. சில டிராக்கர்கள், சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குவதாக உள்ளன. இத்தகைய அளவீடுகள் துல்லியமானவைப் போன்று தோன்றினாலும், அவை 100 சதவீதம் துல்லியத்தன்மையைக் கொண்டு இருப்பதில்லை என்பதே நிதர்சனம்.
தவறான அளவிலான கலோரி என்ணிக்கை
நீங்கள் சாப்பிட்ட கலோரிகளின் எண்ணிக்கையை, ஒரு செயலியில் உள்ளீடு செய்தபிறகு, அந்தச் செயலியை, அணியக்கூடிய சாதனத்துடன் இணைத்தால், அது நீங்கள் எரித்த கலோரிகளின் அளவைக் குறிப்பிட வேண்டும். ஆனால், சில செயலிகளின் டெவலப்பர்கள், குறிப்பிட்ட உணவு வகைகளுக்கான கலோரிகளை மட்டுமே, தன்னகத்தே கொண்டுள்ளன. இதன்காரணமாக, செயலி மற்றும் அணியக்கூடிய சாதனங்களில் கலோரிகளின் எண்ணிக்கையில் மாறுபாடு நிகழ்கின்றது.
உடல்நலப் பாதிப்புகள்
உடற்பயிற்சி முறையைத் துவங்குவதற்கு முன்னதாக, மருத்துவ நிபுணர் மற்றும் பயிற்சியாளரைக் கலந்தாலோசிப்பது நல்லது. ஏனெனில், உங்களது உடலமைப்புக்கு ஏற்ற வகையிலான உடற்பயிற்சி முறைகளை, பயிற்சியாளர்த் தேர்வு செய்யும் போதிலும், உடற்பயிற்சி நிகழ்வில், நீங்கள் எத்தனைக் கலோரிகளை எரிக்க வேண்டும், அதற்கு என்ன வகையான அணியக்கூடிய ஃபிட்னெஸ் டிராக்கரைப் பயன்படுத்த வேண்டும் என்ற தகவலை, மருத்துவ நிபுணர்த் தான் வழங்க முடியும்.
இதய நோய்ப்பாதிப்பு உள்ளவர்கள், எவ்வித வழிகாட்டுதலும் இன்றி, ஃபிட்னெஸ் டிராக்கரின் உதவிகொண்டு உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நோயின் பாதிப்பு தீவிரமாவதை, செயலியானது தெரிவிக்காது என்பதால், உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக முடிவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும் வாசிக்க : ஃபிட்னெஸ் டிராக்கர்களின் நன்மைகள் மற்றும் அம்சங்கள்
கேட்ஜெட்களைச் சார்ந்து இருக்க வேண்டாம்
பெரும்பாலான மக்கள், எப்போதும் ஏதாவது ஒரு கேட்ஜெட்டைச் சார்ந்தே உள்ளனர். கேட்ஜெட்களின் பயன்பாடு இல்லாமல், அவர்களால் ஒரு நோடி கூட இருக்க முடிவதில்லை. அந்தளவிற்கு, அந்தக் கேட்ஜெட்களுக்கு அவர்கள் அடிமையாகி விட்டனர். இது பெரும்பாலும் தவறான செயல்பாடு ஆகும், இதை நாம் தொடர அனுமதிக்கக் கூடாது.
கவனச்சிதறல்கள் தவிர்க்கவும்
அணியக்கூடிய வகையிலான ஃபிட்னெஸ் சாதனங்கள், உடற்பயிற்சி செய்பவரின் கவனத்தைச் சிதறடிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்றே சொல்ல வேண்டும். நீங்கள் கடினமான உடற்பயிற்சியை, மிகத்தீவிரமாகச் செய்து கொண்டு இருக்கும்போது, நமது உடலில் எத்தனைக் கலோரிகள் எரிக்கப்பட்டு உள்ளன என்பதைக் காண அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருக்கவே செய்யும். ஆனால், கடினமான பயிற்சியினிடையே நீங்கள் அந்த அளவீட்டைப் பார்க்க முற்பட்டால், அது உங்களது இதயத்துடிப்பின் வீதம் மற்றும் கலோரி நிகழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அனைத்து நுட்ப முறைகளிலும், சாதகங்கள், பாதகங்கள் இருப்பது போன்று, அணியக்கூடிய வகையிலான ஃபிட்னெஸ் டிராக்க்கர்களிலும் நன்மை மற்றும் தீமைகள் உள்ளன. நன்மை, தீமைகளைக் கண்டறிந்து அதைக் கவனமாகப் பின்பற்றி, உடற்பயிற்சி இலக்குகளை நிறைவேற்றி, ஆரோக்கியமான நல்வாழ்க்கை வாழ்வோமாக…