A pen rests on the notepad on the table, with a mobile phone displaying an open meditation app and a small indoor plant next to it.

மன ஆரோக்கியத்தில் டிஜிட்டல் கருவிகளின் பங்கு

மருத்துவத் துறையில், சமீபகாலமாகத் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பானது, சர்வதேச அளவில் மனநல ஆரோக்கியத்தில் அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. மனநல மருத்துவத்தில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கானது, மனநல ஆரோக்கியத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்றது.

சர்வதேச அளவில், மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கைச் சமீபகாலமாக அதிகரித்து வருவதால், மனநல ஆரோக்கிய விவாதம், மக்களிடையே அதிகரித்து உள்ளது. உலகச் சுகாதார நிறுவனத்தின் படி, இந்திய மக்கள்தொகையில் 7.5% பேர் மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடல் ஆரோக்கியப் பாதிப்பை நோயறிதல் மற்றும் சிகிச்சை முறை உள்ளிட்ட காரணிகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்ற நிலையில், மனநலப் பாதிப்புகளுக்கு அவ்வாறான சிகிச்சை முறைகள் எதுவும் இல்லாத காரணத்தினால், இது மிகுந்த சவாலான நிகழ்வாக மாறி உள்ளது.

மன அழுத்த கட்டுப்படுத்திகளைப் பயன்படுத்தவும்

உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை, நாம் அனைவரும் அறிந்து உள்ள நிலையில், மனநல ஆரோக்கியக் கண்காணிப்பிற்கு, இன்னும் குறிப்பிடத்தக்க வசதிகள் மேற்கொள்ளப்படாத நிலையே நிலவுகிறது. Fitbit bandகள் உடல் செயல்பாடுகளையும், உறக்க முறைகளையும் கண்காணிக்கிறது.வாழ்க்கைமுறையில் மேற்கொள்ளக்கூடிய மாற்றங்களைப் பொறுத்து, பழக்கவழக்கங்களை அமைத்துக் கொண்டால், மன அழுத்தத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம். மன அழுத்த அளவானது அதிகரிக்கும்பட்சத்தில், தியானம், யோகா, சுவாசப் பயிற்சிகள் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளும்பட்சத்தில், அதிலிருந்து நாம் நிவாரணம் பெற இயலும்.

சிறந்த மனநல ஆரோக்கிய செயலிகளை நிறுவவும்

ஃபிட்னெஸ் பேண்ட்கள் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்களுக்கு, மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மொபைல் செயலிகள், ஆபாந்பாந்தவனாக விளங்குகின்றன. சில செயலிகள் மனச்சோர்வு அறிகுறிகளைக் கண்டறிந்து, தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.இந்தச் செயலிகள், மனச்சோர்வு, கவலை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்களைச் சமாளிக்க உதவுகின்றன.

சுவாசப் பயிற்சிகள்

அமைதியான மனமும், தியான பயிற்சியும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. தியான நடவடிக்கைகளுக்கு, HeadSpace அல்லது cure.fit செயலிகளைப் பயன்படுத்தலாம். இது உங்களைத் தனிப்பட்ட தியான உலகிற்கு அழைத்துச் செல்கின்றது.

A mobile picture showing a talk space message is in the foreground, with the logo on the projector appearing in the background.

ஆன்லைன் சிகிச்சைமுறை

Talkspace மற்றும் BetterHelp நேரடி அரட்டைத் தளங்கள் மற்றும் WoeBot, X2 Wysa உள்ளிட்ட சாட்பாட்கள், உங்கள் மனநிலையைக் கண்காணித்து, அதன்மூலம் கிடைக்கும் தகவல்களை, தகவல்தொழில்நுட்பம் மூலம் பகுப்பாய்வு மேற்கொண்டு, மனநலம் சார்ந்த நுண்ணறிவுகளை வழங்குகின்றன. அறிவாற்றல் அடிப்படையிலான நடத்தைச் சிகிச்சைக் குறித்த பயிற்சிகளை மேற்கொள்ளவும், மனச்சோர்வுக்கான அறிகுறிகளை நிர்வகிப்பதற்கும், இத்தகைய செயலிகள் பேருதவி புரிகின்றன.

டிஜிட்டல் ஆரோக்கிய தொழில்நுட்பத்தின் சாதங்கள் மற்றும் சவால்கள்

சாதகங்கள்

  • சுய விழிப்புணர்வுத்தன்மையை ஊக்குவித்து, உங்கள் பழக்கவழக்கங்கள் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது.
  • நேர்மறையான நடத்தைமுறைகளை ஊக்குவித்து, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை உண்டாக்குகிறது.
  • மேற்கொண்ட செயல்களில் அதீதக் கவனம் மற்றும் நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம், உற்பத்தித்திறன் அதிகரிக்கிறது.
  • ஆரோக்கியமான உறக்க முறைகள் பின்பற்றப்படுவதால், சிறந்த அளவிலான உறக்கம் சாத்தியமாகின்றது.
  • மன அழுத்தம் கட்டுப்படுத்தப்படுவதால், மன ஆரோக்கியம் மேம்படுகிறது.

மேலும் வாசிக்க : மனநலப் பரிசோதனையின் முக்கியத்துவம் அறிவோமா?

சவால்கள்

பழக்கவழக்கங்கள் கண்காணிப்பு நிகழ்வில், ஒரேமாதிரியான தரவுகள் கிடைக்காததால், அதன் துல்லியத்தன்மையானது கேள்விக்குறியாகின்றது.

சரிவிகிதமற்ற பயன்பாட்டுமுறையால், பலனற்ற நிலை

தனிநபர்த் தரவுகளைப் பாதுகாக்கப் போதிய வசதிகள் இல்லாததால், தரவுகளின் தனியுரிமைக் குறித்த கவலை, பயனர்களுக்கு ஏற்படுகின்றது.

உடற்பயிற்சிச் செயலிகள், ஃபிட்னெஸ் டிராக்கர்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள், மக்களின் நல்வாழ்விற்கான அணுகுமுறையில், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தபோதிலும், இந்தக் கருவிகளை அளவாகப் பயன்படுத்துவது, அதன்மீது குறைந்த அளவிலான நம்பகத்தன்மையைக் கடைப்பிடிப்பது, மனிதர்களின் பங்களிப்பையும் அதில் இணைப்பது மிகவும் அவசியமானது ஆகும். ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளில், டிஜிட்டல் தொழில்நுட்பமானது, மனிதர்களுக்குத் துணைநிற்பதாக அமைய வேண்டுமே தவிர, அவர்களுக்கு மாற்றாக அமைந்துவிடக் கூடாது…..

Leave A Comment

Copyright © 2024 Health Design | All Rights Reserved.